வஜ்ரபாணியை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?
ஓரு மலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து நாளொன்றிக்கு 1250 மந்த்ரம், குங்கிலியதூபம் போட்டபடி 80 நாட்கள் பக்தியோடு ஜபம் செய்து. 81ம் நாள், ஹோம நாளன்று பிரம்மாதமான படையல் வைத்து, உதரபலி கொடுத்து. இலந்தை பழக் கொட்டை, தேன், தயிர், ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய, காற்று உறுமுமிக் கொண்டு வீசும், வித்யாதரர்கள் பூக்களை தூவ, அது பூ மழையாய் பெய்ய, ஸர்வ வித்யாக்கள் பரிவாரத்துடன், வித்தயாஉத்தமப்ரமுகீக்கள், வித்யாராஜாக்கள் பரிவாரத்துடன்; ஸர்வ தேவர்கள், ஸர்வ நாகர்கள், ஸர்வ யக்ஷர்கள், ஸர்வ கந்தர்வர்கள், ஸர்வ கின்னரர்கள் பரிவாரத்துடன் புடைசூழ வஜ்ரபாணி ஸாதகர் முன் உடனே தோன்றுவான். ஸாதகர் வஜ்ரபாணியை கண்டதுமே அடுத்த நொடியிலேயே ஸாதகரின் சகல கர்ம வினைகளும் அழிந்து போகும். அவனுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, வாசனை கலந்த நீரினால் அர்க்யம் கொடுக்க அவன் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு ! அடிமையா இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகி விடுவான். சிறு ஓட்டைக்குள்ளும் பிரவேசிக்கும் ஸித்தி, ராஜ்யம், மறைதல், இன்னும் பல ஸித்திகள், தந்த்ர வித்தைகள் எல்லாம் அறியப் பெறுவான். எல்லாம் ஸித்து விளையாட்டுக்களும் ஸாதகருக்கு தெரிய வரும். மூன்று உலகில் ஸாதகருக்கு தெரியாத வித்யாக்களென்று ஒன்றும் இருக்க முடியாது. சகல ஆசைகளும் பரிபூர்ணமாகும். வஜ்ர உடம்பும், வஜ்ரபாணி போல் சிந்திக்கும் திறன், ஸர்வ முழுமையான மனதில் நினைத்த மாத்திரத்தில் மற்றவர்களை தாக்கும் திறன் பெறுவான், ஸாதகர் இவ்வுலகில் மஹாகல்பம் வாழ்ந்து, இறப்பின் பின், வசிப்பிடமான வஜ்ர மாளிகைக்குப் போவான். வஜ்ரபாணி வராமல் போனால் வஜ்ரபாணியின் தலை காய்ந்து வெடித்து சிதறி யமலோகம் போவான். கொல்லப்படுவான். அவனால் ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்க முடியாது.
வஜ்ரபாணி ஆவாகண மந்த்ரம் :
ஓம் வஜ்ரபாணி குஹ்யகாதிபதே ஆகச்ச ஆகச்ச யம் யம் ஆஃ ஹூம் பட் ஸ்வாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஒம் வஜ்ரபாணி, குஹ்யகாதிபதே - குகைக்குள் வாழ்பவர்களின் அதிபதியே, ஆகச்ச ஆகச்ச வா வா, யம் யம் ஆஃ ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஒம் வஜ்ரபாணி குguஹ்யகாதிdhiபதே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள், மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - கருப்பு அகில். குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• வஜ்ரபாணி வஜ்ரம் வைத்திருப்பவன் என்று பொருள். இவன் யக்ஷ குலத்தை சேர்ந்தவன். இவன் ஒரு யக்ஷ. குஹ்யகாதி பதி - குகைக்குள் வாழும் யக்ஷர்களுக்கு -அதாவது "குஹ்யக" வுக்கு அதிபதி. வடிவம் : கட்டையான உயரம், பெரிய வண்டி, நீண்ட கோரை பற்கள், இரு கைககள் : வஜ்ர, மறுகையில் முத்திரை காட்டிய வண்ணம் நிற்கிறான். மணிபத்ரனை மஹா யக்ஷஸேனாதிபதி என்று அழைத்தாலும் கூட, வஜ்ரபாணியும் மஹா யக்ஷஸேனாதிபதி என்றும் அழைக்கப்படுகிறான். மஹா யக்ஷஸேனாதிபதி, பொருள் யக்ஷ ராணுவத்தின் தளபதி.
• வஜ்ரபாணி என்பதிற்கு இன்னும் ஒரு பொருளுண்டு யார் யார் வஜ்ரா வைத்திருக்கிறார்களோ, அந்த தெய்வங்களையும் வஜ்ரபாணி என்று அழைக்கப்படுவதுண்டு.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka rahasyam.blogspot ®. All Rights Reserved.
வேதாள யந்திரம்??
பதிலளிநீக்கு