மஹாதேவ ஸாதன
ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று எல்லா கடவுள்களையும் கும்பிட்டுவிட்டு லிங்கம் ஒன்று வைத்து, யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய மஹாதேவ ஸாதகர் முன் தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க ஸாதகருக்கு என்னென்ன வேண்டுமோ அவைகளைளை கொடுத்து விட்டு மறைந்து விடுவான். மஹாதேவ வராவிட்டால் ஸாதகருக்கு இறப்பு நேரிடும்.
கீழே இரண்டு வித ஆவாகண மந்த்ரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.
மஹாதேவ ஆவாகண மந்த்ரம் 1 :
ஓம் ஆயாஹி மஹாதேவ விச்வருபிணே ஸ்வாஹா
மஹாதேவ ஆவாகண மந்த்ரம் 2 :
ஓம் ஆகச்ச ஆகச்ச மஹாதேவ விச்வாத்மனே ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் 1 :
ஓம், ஆயாஹி - வாவா, மஹாதேவ, விச்வருபிணே - பலவடிவங்கள், ஸ்வாஹா.
மந்த்ரதின் பொருள் 2 :
ஓம், ஆகச்ச ஆகச்ச - வாவா, மஹாதேவ, விச்வாத்மனே - உலகிலுள்ள எல்லாவற்றிக்கும் கடவுளே, ஸ்வாஹா.
உச்சரிப்பு 1 :
ஓம், ஆயாஹி மஹாதேவ விச்śவரூபிணே ஸ்sவாஹா.
உச்சரிப்பு 2 :
ஒம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மஹாதேவ விச்śவாத்மனே, ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குணி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• சிவன் கோயிலுக்கு அருகாமையில் என்பது கோயிலிலிருந்து 100m உள்பட்ட இடம். சிவன் கோயிலோ அல்லது சிவனின் வடிவங்க ளான கோயிலாகவும் இருக்கலாம் பைரவ, வீரபத்ர, மஹாகால அல்லது மரத்தடியில் ஒவ்வொரு நாளும் வழிபாட்டிலிருக்கும் லிங்கத்திற்கு அருகாமையில் உள்ள இடமாகவும் இருக்கலாம். வழமையான ஸாதனைகள் போல் அல்லாது ஸாதகர் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க்க கூடாது ஸாதகருக்கு என்னென்ன வேண்டும் என்று மஹாதேவ அதை தானாக அறிந்து சகலதையும் பூர்த்தி செய்து வைப்பான். இந்த ஸாதனையில் மஹாதேவ வராவிட்டால் ஸாதகர் இறக்க நேரிடும், கவனத்தில் கொள்ள வேண்டும்.
மஹாதேவ - சிவன்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக