குட்டி பிசாசு வசியம்
சுடலைக்கு இரவு போய் யந்த்ரம் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்ய வேண்டும், 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, குட்டி பிசாசு ஸாதகர் முன் தோன்றுவான் உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காாட்டி, அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் என்ன வேண்டும் என்று கேட்பான் அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வேலைக்காரனாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலையும் செய்வான். பணம், பொருள், உணவு, கேட்பது எல்லாம் கொண்டு வந்து தருவான். சூதாட்டத்தில் உதவுவான். வியாபாரத்தில் வாடிக்கையாலர்களை கவர்ந்து அதிகமுண்டாக்கி, அபார லபத்தை ஈட்டித்தருவான். இச் ஸாதனையை செய்தவர் குறுகிய காலத்தில் பணக்காரனாக முடியும்.
குட்டி பிசாசு ஆவாகண மந்த்ரம் :
ஓம் வாமனே பிசாச ப்ரகீர்னகேசே விச்வரூபிணே ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா
உச்சரிப்பு மந்த்ரம் :
ஓம் வாமனே பிசாśāசca ப்ரகீர்னகேசேśe விśவரூபிணே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸsāதdhaய ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
வாமனே - குட்டி, பிசாச - பிசாச, ப்ரகீர்னகேசே - பறட்டைமுடிக்காரனே, விச்வரூபிணே - பலரூபங்கள், ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் ஸாதய - காரியம் ஸாதிப்பாய், ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.
• ஸாதகர் - யார் தந்த்ர ஸாதனைகளை செய்கிறாரோ, அவர் ஸாதகர் என்று அழைக்கபடுவார். சமஸ்கிருதத்தில் ஸாதக (sādhaka).
• சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம் (உலோகம்) - சமஸ்கிருதத்தில் sindura, ஆங்கிலத்தில் red ead.
• வாமன பிசாச - குட்டி பிசாச.
• கோரோசனமும் - gorocana.
• பிசாசினீ piśācinī அல்லது பிசாசீ piśācī பெண் - பிசாச piśāca ஆண்.
• இந்த ஸாதனையை குட்டி பிசாச ஸாதன அல்லது குட்டி பிசாச வசியம் என்றும் கூறலாம்.
• யந்த்ரமும் அவன் ரூபமும் வரைய வேண்டும்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• இவன் பிசாசு குலத்தை சார்ந்தவன். இவன் வடிவம் : குள்ளமான உயரம். பறட்டைமுடி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக