குமாரீ ஸாதன

குமாரீ ஸாதன

ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய குமாரீ ஸாதகர் முன் தோன்றுவாள். அவளுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள்" என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நான் உன்னை வரவேற்கிறேன், எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அதன் பின் ஸாதகர் அவளுடன் ஸம்போகங்கொள்ள அவள் ஸாதகருக்கு ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, அன்பான மனைவியாக இருப்பாள்.

குமாரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஆயாஹி தேவீ குமாரீகே ஸமயம் அனுஸ்மர மம கார்யம் ஸம்பாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், ஆயாஹி - வாவா, தேவீ குமாரீகே, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸம்பாதய - சம்பாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஆயாஹி தேdeவீ குமாரீகே ஸsaமயம் அனுஸ்sமர மம கார்யம் ஸsaம்பாதdaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாளன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• குமாரீ பதினாறுவயதுடைய பெண் என்று பொருள். இவள் அழகானவள். குமாரீ பெண் - குமார ஆண். தமிழில் குமரீ, குமரன்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக