காக்கும் தொழில் செய்யும் விஷ்ணுவை அடிமையக்கி வேலை வாங்குவது எப்படி?

காக்கும் தொழில் செய்யும் விஷ்ணுவை அடிமையக்கி வேலை வாங்குவது எப்படி?

ஒரு விஷ்ணு கோயிலுக்கு அருகாமையில் சென்று யந்த்ரம் வரைந்து, லிங்கம் ஒன்றுவைத்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய விஷ்ணு ஸாதகர் முன் தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி அடிமையாய் இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து விஷ்ணு அடிமையாகி ஸாதகர் சொல்லும் வேலைகள் யாவற்றையும் செய்வான். இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வாளானால் விஷ்ணுவின் தலை காய்ந்து வெடித்து சிதறி கொல்லப்படுவான்.

விஷ்ணு ஆவாகண மந்த்ரம் :
ஓம் கருடவாகன சக்கரபாணி சதுர்புஜ ஆகச்ச ஆகச்ச ஹூம் ஹூம் ஸமயம் அனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் கருடவாகன சக்கரபாணி - சக்கரம் வைத்திருப்பன், சதுர்புஜ - நான்கு கைகளை கொண்டவன், ஆகச்ச ஆகச்ச - வா வா, ஹூம் ஹூம், ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் கgaருடḍaவாகன சcaக்கரபாணி சcaதுர்புbhuஜ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் ஹூம் ஸsaமயம் அனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குணி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஸக்து -வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• கடவுளை அடியாக்கும் ஸாதனைகள் கிங்கார ஸாதன என்று அழைக்கப்படும்.
• விஷ்ணு கோயிலுக்கு அருகாமையில் என்பது கோயிலிலிருந்து 100m உள்பட்ட இடம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக