கணபதியை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

கணபதியை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய கணபதி ஸாதகர் முன் தோன்றுவான். அவனுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி அடிமையாய் இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து அவன் ஸாதகருக்கு வேலைக்காரனாக வேலை செய்வான். கணபதி வராமல்போனால் கொல்லப்படுவான்.

கணபதி ஆவாகண மந்த்ரம் :
ஓம் கணபதே கஜமுகே ஆஹ்வய ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், கணபதே, கஜமுகே - யானைமுகத்தானே, ஆஹ்வய - அழைப்பு, ஆகச்ச - வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சம்பாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் கgaணபதே கஜமுகேkhe ஆஹ்வய ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• கடவுளை அடியாக்கும் ஸாதனைகள் கிங்கார ஸாதன என்று அழைக்கப்படும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக