இந்திரனை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?
ஓரு மலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து ஒரு லட்ச மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி பக்தியோடு ஜபம் செய்து. ஹோம நாளன்று பிரம்மாதமான படையல் வைத்து, தயிரை ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய இந்திரன் ஸாதகர் முன் உடனே தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு ! அடிமையா இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகிவிடுவான். இந்திரனின் மனைவிகள், ஊர்வசி, ரம்பா மற்றும் எல்ல அப்ஸரஸ்களும் ஸாதகருக்கு அடிமையாகிவிடுவர். அதுமட்டுமல்ல இவ்வுலகிளலுள்ள விரும்பிய பெண்களுடன் ஸம்போகம் வைத்து பலவித ரஸ பானங்களை அருந்தி பரஆனந்தத்தில் வாழ்வான். விலைமதிபற்ற கற்களுக்கு அதிபதியாகவும் மஹாபணக்காரனாகவும் வாழ்வான். நினைத்த மாத்திரத்தில் இந்திரலோகத்துக்கு போய் வரலாம். எதையுமுண்டக்க முடியும், மழையை வரவைக்கலாம் நிற்பாட்டலாம். சகல இந்திரஜாலமும் ஆடலாம். இந்திரன் வராவிட்டால் இந்திரனின் தலை காய்ந்து வெடித்து சிதறி யமலோகம் போவான். அவனால் ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்கமுடியாது.
இந்திரன் ஆவாகண மந்த்ரம் :
ஓம் மஹேந்த்ரே சக்ரே ஸம்ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஒம், மஹேந்த்ரே, சக்ரே, ஸம்ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச வா வா, ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஒம் மஹேந்த்dரே சśaக்ரே ஸம்ஆகர்ஷṣaய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள், மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• ஒரு லட்ச மந்த்ரத்தை குங்கிலிய தூபம் போட்டபடி குறிப்பிட்ட நாட்களுக்குள்(90 நாட்களுக்குள்) ஜபம் செய்து அதன் பின் ஹோமம் செய்யவும்.
• இந்திரனின் வடிவம் : கட்டையான உயரம், பெரிய வண்டி, நீண்ட கோரைபற்கள், இரு கைககள்
• இந்த ஸாதனையின் மறுபெயர் இந்திர ஸாதன.
• கடவுளை அடியாக்கும் ஸாதனைகள் கிங்கார ஸாதன என்று அழைக்கப்படும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக