குட்டி சாத்தான் வசியம்

குட்டி சாத்தான் வசியம்
 
மயானத்திற்கு இரவு போய் யந்த்ரம் வரைந்து அதற்கு உதாரபலி கொடுத்து, ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவன் ரூபம் துணியில் கோரோசனமும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகம் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து, 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, குட்டி சாத்தான் ஸாதகர் முன் தோன்றுவான் உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் என்ன வேண்டும் என்று கேட்பான் அதற்கு ஸாதகர் '' எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வேலைக்காரனாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்வான். பணம், பொருள், உணவு, கேட்பது எல்லாம் கொண்டு வந்து தருவான். சூதாட்டத்தில் உதவுவான். வியாபாரத்தில் வாடிக்கையாலர்களை அதிகமுண்டாக்கி அபார லபத்தை ஈட்டித் தருவான். இச் ஸாதனையை செய்தவர் குறுகிய காலத்தில் பணக்காரனாக முடியும். குட்டிசாத்தான் வராமல் போனால் குட்டிசாத்தான் கொல்லப்படுவான்.
 
குட்டிசாத்தான் ஆவாகண மந்த்ரம் :
ஓம் வாமனே சைத்தானே கணககேசே விச்வரூபிணே ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா
 
உச்சரிப்பு :
ஓம் வாமனே சைchaiத்தானே கgaணககேசேśe விச்śவரூபிணே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஸ்sவாஹா
 
மந்த்ரதின் பொருள் :
வாமனே - குட்டி, சைத்தானே - சாத்தான், கணககேசே - கணக்க முடிக்காரனே, விச்வரூபிணே - பலரூபங்கள், ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் ஸாதய - காரியம் ஸாதிப்பாய், ஸ்வாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர் செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.
 
• ஸாதகர் - யார் தந்த்ர ஸாதனைகளை செய்கிறாரோ, அவர் ஸாதகர் என்று அழைக்கபடுவார். சமஸ்கிருதத்தில் ஸாதக (sādhaka).
• சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம்(உலோகம்) - சமஸ்கிருதத்தில் sindura, ஆங்கிலத்தில் red ead.
• யந்த்ரமும் அவன் ரூபமும் வரைய வேண்டும்.
• குட்டிசாத்தானின் வடிவம் குள்ளமானவன் பறட்டைமுடி.
• குட்டிச்சாதான் அஸுரகுலத்தை சேர்ந்தவன். அவன் ஒரு அஸுரன். சாத்தான் என்பதின் பொருள் அஸுரன். இவனை கும்பிடக் கூடாது, ஆனால் வேலைக்காரனாக வைத்திருக்கலாம். கோயில் கட்டிக்கூட வழிபடுகிறார்கள். அதுவுமல்லாமல் சில புதிர்களையும் புரளிகளையையும் கிளப்பி விட்டிருக்கிறார்கள் அவையாவன : சிவனின் மைந்தன், சிவனை இதற்குள் புகுத்தினால் தான் பக்தர்களை கவரமுடியும், காசுக்காக எவ்வளவு பொய்யும் புரளியும். கவனத்தில் கொள்ளவும் குட்டிசாத்தானுக்கும் சிவனுக்கும் எந்த தொடர்புமில்லை. குட்டிசாத்தான் முன்தோன்றும் போது வழமையா கேட்பார்கள் "நான் சொல்லும் வேலைகளை செய்வாய் என்று சிவன் மேல் சத்தியம் செய்து கொடு"என்று இது தவறானது. குட்டிசாத்தான் சொல்லும் வேலைகளை செய்து கொடுப்பான் பின்னர் தனக்கு வேண்டியதையும் கேட்பான், அது தா இது தா என்று. அதனால ''எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு" என்று கேட்பதே சரியான முறை இதனால் ஸாதகர் என்ன சொல்கிறானோ அதை செய்வானே தவிர, சாத்தானால் ஒன்றும் ஸாதகரிடம் கேட்க முடியாது. அங்கை இங்கை என்று அலைந்து திரியாமல் இந்த ஸாதனையை செய்து பலன் அடையவும். ஸ்ரீ டி சாய்பாபாவும் குட்டிசாத்தானையே வசியம் செய்து வைத்திருந்தார்.
• இந்த ஸாதனையை குட்டிசாத்தான் ஸாதன அல்லது குட்டிசாத்தான் வசியம் என்றும் கூறலாம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக