சந்திரனை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

சந்திரனை அடிமையாக்கி வேலை வாங்குவது எப்படி?

ஒரு மலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய சந்திரன் ஸாதகர் முன் தோன்றுவான். அவனுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி அடிமையாய் இரு " என்று சொல்ல வேண்டும். சந்திரகிரகத்திலுள்ள சகலதும் ஸாதகருக்கு அடிமையாகிவிடும். அவன் ஸாதகருக்கு 100 பொற்காசுகள் ஒவ்வொருநாளும் தருவான், அடிமை போல் வேலைக்காரனாக இருப்பான். சந்திரன் வராமல் போனால் கொல்லப்படுவான்.

சந்திர ஆவாகண மந்த்ரம் :
ஓம் சந்த்ரே ஸோமே ஆஹ்வய ஆகச்ச ஆகச்ச மம தீனாரம் ஸாதய ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் சந்த்ரே ஸோமே ஆஹ்வய - அழைப்பு, ஆகச்ச - வா, ஆகச்ச - வா, மம - எனக்கு, தீனாரம் - பொற்காசுகள், ஸாதய - ஸாதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் சcaந்த்dரே ஸோsoமே ஆஹ்வய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம தீdīனாரம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• கடவுளை அடியாக்கும் ஸாதனைகள் கிங்கார ஸாதன என்று அழைக்கப்படும்.
• 100 பொற்காசுகள் கிட்டத்தட்ட 4.4 கிலோகிராம் வரும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக