சவ ஸாதன
சவ ஸாதன (ப்ரேத ஸாதன) - சவத்தின் மேலிருந்து செய்யும் ஸாதன .
சவத்தை தேர்வு செய்யும் முறை :
நீரில் மூழ்கி, மின்னலடித்து, விபத்தில், தற்கொலை செய்த, கொலை செய்யப்பட்ட, போரில், சண்டையில், தண்டனையில், பாம்பு கடித்து, காயப்பட்டு, வாள், கத்தி, ஈட்டி, தடியால் அடித்து, துப்பாக்கியால், மற்ற ஆயுதங்களால் கொல்லப்பட்ட சவத்தையே சவ ஸாதனைக்கு பயன்படுத்த வேண்டும்.
மேற் சொன்னபடி இறந்த ஆண் அல்லது பெண்ணின் சவம்.
மேற் சொன்னபடி இறந்த சண்டால குழந்தையின் சவம்.
மேற் சொன்னபடி இறந்த பதினாறுவது நிரம்பிய கன்னிப்பெண்ணின் சவம் மிக சிறப்பானது.
சவ ஸாதனைக்கு தடை செய்யப்பட்ட சடலங்கள் :
பிராமண குலத்தை சேர்ந்த மனிதன், விசுவாசமுள்ளவர், வயதான மனிதன், குஷ்டரோகி, பிறப்புறுப்பு தெளிவாக தெரியாத வண்ணமிருக்கும் ஆண், அலி, பைத்தியம், குருடு, செவிடு, முடம், நொண்டி, பட்டினி அல்லது பஞ்சம் காரணமாக இறந்த ஒரு மனிதன் இவர்களின் சவத்தை உபயோகிக்கக் கூடாது.
மேலும் சடலம் புதியதாக இருக்க வேண்டும் சடலத்தின் அங்கங்களெல்லாமிருக்க வேண்டும். ஒரு விரல் இல்லாவிட்டாலும், சடலம் தகுதியற்றது.
சவத்தை முறையாக தயார் படுத்தும் முறை :
சவத்தை இரவு சுடலைக்கு கொண்டு வந்து நிர்வாணமாக்கி குளிப்பாட்டி நன்றாக துடைத்து தலைமுடியை அழகாக சீவி திருநீறு பூசி பொட்டு வைத்து வாசனைத் திரவியம் பூசி காதில் பூ வைத்து கழுத்தில் பூச் சரத்தால் ஒரு சுற்று சுற்றி தயார்படுத்த வேண்டும்.
இரவு சுடலைக்கு போய் கீலனம் செய்து கீலனத்துக்கு வெளியே முழுமையாக ரத்தம் நிறப்பப்பட்ட கபாலமும் அதற்கருகே மாமிசமும் படைத்து. இயற்கை மதுவும் வைத்து.
முறை 1
கீலனத்துக்குள்ளே விளக்குகள் ஏற்றி ஸிந்துரம் சந்தனம் கலந்த கலவையால் காளீ யந்திரம் தரையில் வரைந்து. புதிய சிகப்பு துணி விரித்து அதன் மேல் தர்பை புல்லை போட்டு அதன் மேல் முறைபடி தயார் செய்யப்பட்ட சவத்தின் தலை கிழக்குமுகமாக பார்க்கும் வண்ணம் கீலனம் செய்த வட்டத்தின் நடுவே மல்லாக்கபடுக்க வைத்து. சவத்தின் வாயை திறந்து ஐந்து அரிசிகளை போட்டு சவம் வாயை மூடாத வண்ணம் ஒரு குச்சியை செருகி வாய்க்குள் நெய்யூற்றி அதற்குள் திரி போட்டு திரியை பற்ற வைத்து சவத்தின் மேல் இருக்குமிடத்தில் ஒரு சிறு துணி போட்டு. சவத்தின் மேல் குதிரையில் போவது போல் அல்லது பத்மாசனத்தில் இருந்து கொண்டு இந்த காளீ மந்த்ரத்தை ஜபம் செய்ய " ஓம் ச்மசானகாளீகே சண்டிகாளீகே நமஃ ".
முறை 2
கீலனத்துக்குள்ளே விளக்குகள் ஏற்றி புதிய சிகப்பு துணி விரித்து அதன் மேல் தர்பை புல்லை போட்டு அதன் மேல் முறைபடி தயார் செய்யப்பட்டசவத்தின் தலை கிழக்குமுகமாக பார்க்கும் வண்ணம் கீலனம் செய்த வட்டத்தின் நடுவே குப்புறபடுக்க வைத்து. சவத்தின் முதுகில் கூரிய ஆணியினால் ஸிந்துரம் சந்தனம் கலந்த கலவையால் தொட்டு காளீ யந்திரம் வரைந்து. ஆணியால் கீறபட்டயித்தில் ரத்தம் இலேசக கசிந்திருக்க வேண்டும். சவத்தின் மேல் இருக்குமிடத்தில் ஒரு சிறு துணி போட்டு. சவத்தின் மேல் குதிரையில் போவது போல் அல்லது பத்மாசனத்தில் இருந்து கொண்டு இந்த காளீ மந்த்ரத்தை ஜபம் செய்ய " ஓம் ச்மசானகாளீகே சண்டிகாளீகே நமஃ ".
இந்த தருணத்தில் சவம் உயிர் பெறும், உடனே ஸாதகரை கட்டிபிடிக்க பார்க்கும் அல்லது அந்தயிடத்தைவிட்டு ஓடப் பார்க்கும். அப்பொழுது ஸாதகர் அடித்து அல்லது ஒரு குத்து ஒன்று போட்டு சவத்தை மீண்டும் படுக்க வைக்கத்துக் கொண்டு ஸாதகர் தொடர்ந்து மந்த்ரத்தை ஜெபம் செய்ய வேண்டும்.
இந்தக் கட்டத்தில் ஸாதகர் அதிபயங்கரமான காட்சிகளை பார்க்க நேரிடும் அவையவன புலிகள், சிங்கங்கள் கரடிகள், பாம்புகள், பல தரப்பட்ட ஊனுண்ணிகள், இவ்வுலகில் பார்த்திருக்க முடியா பயங்கரவிலங்குகள் மற்றும் கொடூரமான தோற்றங்கள், ப்ரலயம், நிலம் வெடிப்பது போன்றவையாகும்.
இவைகளை பார்த்து ஸாதகர் பயப்பட்டால் ஸாதகர் செவிடாகலாம், கண்பார்வையற்று போகலாம், பைத்தியக்காரனாகலாம், உடலில் சிலபாகங்கள் துண்டிக்கப்பட்டு போகலாம், ஏன் மரணம் கூட அந்த இடத்தில் ஸாதகருக்கு ஏற்படலாம்.
இந்த பயங்கரகட்சிகள் முடியும் வேளை ஒரு மிருகம் ஒன்று ஸாதகரரை நோக்கி வரும் வழமையாக சிங்கம் அல்லது புலி, அந்த மிருகத்தின் நாக்கு கபாலத்திலுள்ள இரத்தத்தில் பட்டதும் உடனே ஒரு பெண்ணின் உருவம் தோன்றும் அவளின் தலைமுடி எழும்பி நிமிர்ந்து நிற்கும், தேகம் முழுக்க தவறான வாசனையுடன் கூடிய சிதைந்த மாமிசம் பூசப்பட்டிருக்கும். அவளுடைய முடி, நெற்றியில் ஸிந்துரம் பூசப்பட்டிருக்கும். அவள் படுமோசமானபயங்கரமான அரை நிர்வாண தோற்றத்திலிருபாள்.
இப்படிப்பட்ட உருவத்தை ஸாதகர் பார்த்ததும் ஸாதகர் சொல்ல வேண்டும் " திஷ்ட மம பூஜா க்ர்ரிஹ்யதாம் ". அதன் பின் இந்த மந்த்ரத்தை சொல்ல வேண்டும் " ஓம் சண்டிகாளீகே ச்மசானகாளீகே ரக்தவர்ணா த்ரிநயனா பூதாதி ப்ரேஆதி ஸங்கம் ஹாரத பராயணா ப்ரஸீத தேவீ பூத்யாஸ்தவ மமகான் ஸர்வ ஸித்தி ஸர்வார்தம் தேஹி மே ஓம் ஹ்ரீம்ஹ்ரீம்ல்ரீம்ல்ரீம் ஸ்வாஹா ".
அதிபயங்கரமான தேவீ சொல்வாள் "என்ன உன்னுடைய தேவை ? " அதற்கு ஸாதகர் " என்னுடைய ஒரேயோரு கோரிக்கை அதாவது நீ எப்போதும் என்னுடன் இருந்து, சகல ஆசைகளையும் நிறைவேற்றி வைக்க வேண்டும்." தேவீ ஸாதகரின் கோரிக்கையை திசைதிருப்ப முயற்சிப்பாள். ஸாதகரோ விடாப்பிடியாக கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
இறுதியில் தேவீ காளீ இரண்டு பொருட்களை கொடுப்பாள். ஒன்றை நெருப்புக்கருகில் கொண்டு செல்ல உடனே காளீ ஸாதகர் முன் தோன்றி ஆசைகளை நிறைவேற்றி வைப்பாள். மற்றதை ஸாதகர் எப்பொழுதும் தன்னுடன் வைத்திருக்க வேண்டும், கெட்டசக்திகள் ஸாதகரை அண்ட நினைத்துக் கூட பார்க்காது.
இவை இரண்டையும் கொடுத்து விட்டு காளீ மறைந்து விடுவாள்.
அதன் பின் அந்த இடத்தை சாந்தி செய்து ஸாதனையில் உபயோகிக்கப்பட்ட சகலதையும் ஒரு ஆற்றில் கொண்டுபோய் போடவேண்டும்.
ஸித்தி பெற உகந்த நேர காலம் :
பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - தெய்பிறை 8 அல்லது 14 (சிறப்பானது). கிழமை - புதன் (செவ்வாய் இரவு 12 மணிக்குப்பின்).
• சண்டால குழந்தை - பிராமண தாய்க்கும், சூத்திர தந்தைக்கும் பிறந்ந்த குழந்தை.
• சவ ஸாதன கோரதெய்வங்களான காளீ, தாரா, மஹிஷமர்தினீ போன்ற தெய்வங்களை ஆவாஹனம் செய்ய வழமையாக பயன்படுத்தப்படுகிறது.
• சவ ஸாதன நன்மைகள், மிக மிக குறைந்த அளவு மந்த்ர ஜபம் செய்தால் போதும் ஸாதனையின் நோக்கம் நிறைவேறிவிடும்.
• இந்த ஸாதனையை செய்யும் ஸாதகர் ஒரு மாதத்திற்கு முன்பே மாமிசம், மது, புகை, ஸம்போகம் போன்றவைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
• ஸாதனைக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே ஸாதகர் ஒரு வேளை மட்டுமே பால், பழங்கள் சாப்பிட வேண்டும்.
• திஷ்ட மம பூஜா க்ர்ரிஹ்யதாம் - உட்காரு என்னுடைய பூஜையை ஏற்றுக் கொள்.
• உச்சரிப்பு : ஓம் ச்śமசாśāனகாளீகே சcaண்டிகாளீகே நமஃ.
• இந்த மந்த்ரத்தை எத்தனை தடவை ஜபம் செய்ய வேண்டும் என்ற வரையறையில்லை. சிலவேளை 50 தடவை ஜபம் செய்ய காளீ தோன்றுவாள், சிலவேளை 108 தடவை. அதாவது குறிப்பிட் ஜபம் செய்ய வேண்டிய தொகையை சொல்ல முடியாது. இது ஸாகருக்கு ஸாதகர் மறுபடும்.
• உச்சரிப்பு : ஓம் சcaண்டிகாளீகே ச்śமசாśāனகாளீகே ரக்தவர்ணா த்ரிநயனா பூbhūதாதி ப்ரேதாதி ஸsaங்கgaம் ஹரத பராயண ப்ரஸீsīதda தேdeவீ பூbhūத்யாஸ்sதவ மமகான் ஸsaர்வ ஸிsiத்dhதிdhi ஸsaர்வார்தthaம் தேஹி மே ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ல்ரீம் ல்ரீம் ஸ்sவாஹா.
• பொருள் : சண்டிகாளீ சுடலைக்காளீ ரத்தநிறம் மூன்றுகண்கள் பூதத்திற்கு ஆதி பிரேதத்திற்கு ஆதி சங்கமம் முழு விசுவாசத்துடன் கருணை காட்டு தேவீ புகழுக்காக எனக்கு ஸர்வ ஸித்திகள் ஸர்வ செல்வம் தா ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ல்ரீம் ல்ரீம் ஸ்வாஹா.
• இந்த பயங்கரமான கட்சிகளைக் கண்டு, அந்த இடத்தை விட்டு எழும்பி ஓட நினைத்தால் அந்த இடத்திலேயே மரணமுண்டாகும். இதை சமாளிப்பதற்கு சில தியான வழிகளுள்ளன அவைகளில் ஏற்கனவே பயிற்சி பெற்று இருக்க வேண்டும். மற்றும் ஸாதனையின் போது போதைவஸ்து எடுத்துக் கொள்ளுதலாகும்.
• முறை 1, 2 இடத்திற்குயிடம் குருவுக்கு குரு மாறுபடும். நீங்கள் உங்களுக்கு பிடித்த முறை 1 அல்லது முறை 2 தேர்வு செய்யலாம்.
• எப்படி காளீ கோரிக்கையை திசை திருப்ப முயற்சிப்பாள்? அதெல்லாம் வேண்டமப்பா வேற ஏதாவது கேள் அல்லது சுடலைக்கு வா நான் எப்பவுமிங்கேயிருப்பேன் என்று. ஸாதகர் கேட்டதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லி கேட்க வேண்டும்.
• திவ்யபாbhaவம் வீரபாbhaவம் கொணடவர்களே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். அதாவது தெய்வீக தன்மை கொண்டவர்கள், மனதில் அதி தைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் கொண்டவர்கள் மட்டுமே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். பாசுபாவம் கொண்டவர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. பாசுபாவம் என்றால் மிருகசுபாவம் என்று பொருள். அதாவது சாதாரண மனிதர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. சாதாரண மனிதர்கள் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்களை தெய்வீகம் அல்லது எதற்கும் பயப்படாதவர்களாக மற்றிக் கொள்ள வேண்டும்.
• மஹாப்ரேத ஸாதனயை பார்க்க இங்கே தட்டவும்.
• கீலனம் செய்யும் முறையை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக