மஹிஷமர்தினீ ஸாதன
இரவு ஸாதகர் சுடலையில் முறைப்படி தயார்படுத்தப்பட்ட ஒரு சவத்தை குப்புற படுக்க வைத்து, யந்தரம் கீறி, கீலனம் செய்து. படையல் படைத்து. ஏற்கனவே படைக்கப்பட்டவைகளை கொஞ்சமெடுத்து சவத்தின் தலை முதல் கால் வரை படைத்து. அச் சவத்தின் மேலிருந்து கொண்டு மஹிஷமர்தினீ மந்திரத்தை 800 தடவை ஹோமம் செய்ய மஹிஷமர்தினீ படைத்தவைகள் எல்லாம் அவள் வாயில் நிறப்பியபடி, பண்டிகை குதூகலத்துடனும், கைகளில் பலவகையான வரங்களுடன் தோன்றி " மவனே என்னடா உனக்கு வேணும் "என்று கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய தாயாயிருந்து என்னை நீ பாதுகாக்க வேண்டும் " என்று சொல்ல வேண்டும். ஸாதகருக்கு தேவையா சகல பொருட்கள், அமானுஷ்ய பொருட்கள், பலவகையான ஸித்திகள் - ஸித்து விளையாட்டு ஆட, நோய்களை குணப்படுத்த; அஞ்சனம் போன்றவற்றை ஸாதகருக்கு கொடுத்து, அன்றிலிருந்து தாயாகயிருந்து ஸாதகரை பாதுகாப்பாள்.
மஹிஷமர்தினீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் மஹிஷமர்தினீ ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் மஹிஷṣaமர்திdiனீ ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.
ஸித்தி பெற உகந்த நேர காலம் :
பருவ காலம் - பங்குனி, சித்திரை. திதி - தெய்பிறை 8 அல்லது 14 (சிறப்பானது). கிழமை - புதன் (செவ்வாய் இரவு 12 மணிக்குப் பின்).
• மஹிஷாṣāஸுsuரமர்திdiனீ அல்லது மஹிஷṣaமர்திdiனீ - மஹிஷ என்ற அசுரனை இவள் கொன்றதால் இவளுக்கு இந்த பெயர் வந்தது. இவள் ஒரு கோரதெய்வம்.
• கீலனத்துகுள்ளே வில்வ இலை கலந்த த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) படைத்து. வழமையான படையல் படைக்க வேண்டும். கீலனத்துக்கு வெளியே ரத்தம்நிறம்பிய கபாலம், மாமிசம், இயற்கை மது படைக்க வேண்டும்.
• திவ்யபாbhaவம் வீரபாbhaவம் கொணடவர்களே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். அதாவது தெய்வீகதன்மை கொண்டவர்கள், மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் கொண்டவர்கள் மட்டுமே இந்த ஸாதனையை செய்ய வேண்டும். பாசுபாவம் கொண்டவர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. பாசுபாவம் என்றால் மிருகசுபாவம் என்று பொருள். அதாவது சாதாரண மனிதர்கள் இந்த ஸாதனையை செய்யக் கூடாது. சாதாரண மனிதர்கள் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தங்களை தெய்வீகம் அல்லது எதற்கும் பயப்படாதவர்களாக மற்றிக்கொள்ள வேண்டும்.
• சவ ஸாதன முறை, எப்படி சவத்தை தேர்வு செய்ய வேண்டும், எந்த சவத்தை தேர்வு செய்யக் கூடாது, எப்படி தயார் செய்ய வேண்டும், ஸாதனையின் போது வரும் சூழ்ச்சிககளை எப்படி சமாளித்து செல்ல வேண்டும் என்பதை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக