கமலாலோசனீ ஸாதன
ஸாதகர் இரவு சுடலைக்கு போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து. 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து. உதாரபலி கொடுத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, கமலாலோசனீ ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள், அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகி அடிமையாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு அடிமையாகி ஸாதகர் சொல்லும் வேலைகளை செய்வாள். துக்கத்தை போக்கி ஸாதகரை மஹாபணக்காரனாக்குவாள். கமலாலோசனீ ஸாதனையை உதாசீனம் செய்து வராதபட்சத்தில் கமலாலோசனீ கொல்லப்படுவாள்.
கமலாலோசனீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் கமலாலோசனீ மனுஷ்யவத்ஸலே ஸர்வதுஃக விநாசினீ ஸாதகானுகூலே ப்ரியே ஆகச்ச ஆகச்ச ஜய ஜய ஹூம் ஹூம் பட் பட் நமஃ ஸ்வாஹா.
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் கமலாலோசśaனீ மனுஷ்ṣயவத்ஸsaலே ஸsaர்வதுduஃகkha விநாசினீ ஸாsāதdhaக + அனுகூலே ப்ரியே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஜய ஜய ஹூம் ஹூம் பphaட் பphaட் நமஃ ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம் கமலாலோசனீ, மனுஷ்யவத்ஸலே - மனிதர்கள் மேல் அன்புள்ளவளே, ஸர்வதுஃக விநாசினீ - ஸர்வ துக்கத்தை அழிப்பவளே, ஸாதகானுகூலே - ஸாதகருக்கு சாதகமானவளே, ப்ரியே - பிரியமே, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஜய ஜய - வெற்றி வெற்றி, ஹூம் ஹூம் பட் பட் நமஃ ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• கமலாலோசனீ தாமரைபோன்றகண்களையுடையவள் என்று பொருள். இவள் ஒரு பிசாசினீ. இவள் பிசாசகுலத்தை சேர்ந்தவள்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• கமலாலோசனீ முத்திரை இருகைகளிளும் முஷ்டி செய்யவும், ஒன்றோடு ஒன்று இணைக்கவும். மோதிரவிரல்களை விரிக்கவும் இரு நடுவிரல்களை விரித்து மோதிரவிரல்களின் மேல் பிண்ணி அழுத்தவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக