வஸுமதீ ஸாதன

வஸுமதீ ஸாதன

ஸாதகர் இரவு ஆறு சங்கமமாகும் கரைக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 29 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 30வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 3000 மந்த்ரம் ஹோமம் செய்ய வஸுமதீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய தாயாய் இரு " என்று சொல்ல வேண்டும். தாயாகயிருந்து அவள் ஸாதகரின் ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, சகல பொருட்களையும் தருவாள். ஆடைகள், ஆபரணங்கள், திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம், திவ்ய அஞ்சனமும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

வஸுமதீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் வஸுமதீ ஆகச்ச ஆகச்ச கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா ஸ்வாஹா

மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் வஸுமதீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் மே ஸாsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மந்த்ரதின் பொருள் :
வஸுமதீ ஆகச்ச ஆகச்ச - வா வா, கார்யம் - கரியம், மே - எனக்கு, ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• வஸுமதீ - அதிஅறிவானவள் என்று பொருள். இவள் ஒரு யக்ஷிணீ. இவள் யக்ஷகுலத்தை சேர்ந்தவள்.
• ஆறு சங்கமம் - இரு ஆறுகள் சந்திக்கும், கலக்குமிடம்.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக