மனோரத ஸாதன
சுடலைக்கு இரவு போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழு நாட்கள் ஜபம் செய்து. 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து. உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, மனோரத ஸாதகர் முன் தோன்றுவான். உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் என்ன வேண்டும் என்று கேட்பான், அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகி அடிமையாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு அடிமையாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலையும் செய்வான். ஸாதகரின் சகல ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பான். மனோரத வராமல் போனால் மனோரத கொல்லப்படுவான்.
மனோரத ஆவாஹன மந்த்ரம் :
ஓம் மனோரத பிசாசே ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஸ்வாஹா
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் மனோரதtha பிசாśāசேce ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸsāதdhaய ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
மனோரத பிசாசே, ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் ஸாதய - காரியம் ஸாதிப்பாய், ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• மனோரத - ஆசை என்று பொருள். இவன் ஒரு பிசாசு. இவன் பிசாசகுலத்தை சேர்ந்தவன்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக