விகடமுகீ ஸாதன
ஸாதகர் இரவு சுடலைக்கு போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து. 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து. உதாரபலி கொடுத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, விகடமுகீ ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள், அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகி அடிமையாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு அடிமையாகி ஸாதகர் சொல்லும் வேலைகளை செய்வாள். ஸாதகரை மஹாபணக்காரனாக்குவாள். ஸாதகருக்கு விருப்பமான சகலஸித்திகளையும் தருவாள். விகடமுகீ ஸாதனையை உதாசீனம் செய்து வராதபட்சத்தில் விகடமுகீ கொல்லப்படுவாள்.
விகடமுகீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஆயாஹி விகடமுகீ தம்ஷ்ட்ராகராலினீ ஜ்வாலிதலோசனீ ஸர்வயக்ஷபயம்கரி தீர தீர கேடய கேடய போ போ ஸாதகா கிமாஞாபயஸி ஹும் ஸ்வாஹா.
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் ஆயாஹி விகடமுகீkhī தம்ஷ்ṣட்ராகராலினீ ஜ்வாலிதலோசcaனீ ஸsaர்வயக்ஷkṣaபbhaயம்கரி தீdhīர தீdhīர கேkheடய கேkheடய போbho போbho ஸாsāதdhaகா கிமாஞாபயஸிsi ஹும் ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம், ஆயாஹி - வந்து சேர், விகடமுகீ, தம்ஷ்ட்ராகராலினீ - கோரைப்பற்களுடன் இடைவெளிகளில் சிதைந்த வாய், ஜ்வாலிதலோசனீ - சுவாலைக் கண்கள், ஸர்வயக்ஷபயம்கரி - ஸர்வ யக்ஷர்களுக்கும் பயம் காட்டு, தீர தீர -அசையாதுசெய் அசையாதுசெய், கேடய கேடய - துரத்து துரத்து, போ போ - வணக்கம் வணக்கம், ஸாதகா கிமாஞாபயஸி - ஸாதகரின் கட்டளை, ஹும் ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• விகடமுகீ - அருவருப்பான அல்லது சிதைந்த வடிவம் கொண்ட முகத்தையுடையவள் என்று பொருள். இவள் ஒரு பிசாசினீ. இவள் பிசாசகுலத்தை சேர்ந்தவள்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• விகடாஸ்யா முத்திரை இருகைகளிளும் முஷ்டி செய்யவும், ஒன்றோடு ஒன்று இணைக்கவும், இரு நடுவிரல்களையும் விரிக்கவும், இரு சின்னவிரல்களை விரிக்கவும்.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக