வித்யுதகராலீ ஸாதன
ஸாதகர் இரவு சுடலைக்கு போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து. 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து. உதாரபலி கொடுத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, வித்யுதகராலீ ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள். அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகி அடிமையாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு அடிமையாகி ஸாதகர் சொல்லும் வேலைகளை செய்வாள். ஸாதகரை மஹாபணக்காரனாக்குவாள். ஸாதகரை எவராலும் வெற்றி கொள்ள முடியாத வரம், பல அற்புதமான ஸித்திகளை தருவாள். வித்யுதகராலீ ஸாதனையை உதாசீனம் செய்து வராதபட்சத்தில் வித்யுதகராலீ கொல்லப்படுவாள்.
வித்யுதகராலீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் த்ருவி த்ருவி ஸரு ஸரு கடு கடு ஸ்தம்பய ஸ்தம்பய சாலய சாலய மோஹய மோஹய வித்யுதகராலீ ஆகச்ச ஆகச்ச அப்ரதிஹதவர ஸித்திதாயிகே ஹ ஹ ஹ ஹூம் பட் ஸ்வாஹா
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் த்dhருவி த்dhருவி ஸsaரு ஸsaரு கடு கடு ஸ்sதம்பய ஸ்sதம்பய சாcāலய சாcāலய மோஹய மோஹய வித்dயுதகராலீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha அப்ரதிஹதவர ஸிsiத்dhதிdhiதாdāயிகே ஹ ஹ ஹ ஹூம் பட் ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம் த்ருவி த்ருவி - நிலையாக நிலையாக, ஸரு ஸரு - பற்றிக்கொண்டு நகர் பற்றிக்கொண்டு நகர், கடு கடு, ஸ்தம்பய ஸ்தம்பய - ஸ்தம்பனம் செய் ஸ்தம்பனம் செய், சாலய சாலய - நகரச் செய் நகரச் செய், மோஹய மோஹய - மோஹனம் செய் மோஹனம் செய், வித்யுதகராலீ, ஆகச்ச ஆகச்ச - வா வா, அப்ரதிஹதவர ஸித்திதாயிகே - (என்னை எவராலும்) வெற்றிகொள்ள முடியாத வரம் சித்திகளை தா, ஹ ஹ ஹ ஹூம் பட் ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• வித்யுதகராலீ - மின்னல் போன்றவளும் இடைவெளிகளில் சிதைந்த வாயையுடையவள் என்று பொருள். இவள் ஒரு பிசாசினீ. இவள் பிசாசகுலத்தை சேர்ந்தவள்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• வித்யுதகராலீனீ முத்திரை இருகைகளையும் சேர்த்து முஷ்டிசெய்யவும், இரண்டு நடுவிரல்களையும் விரித்து, இரண்டு ஆள்காட்டிவிரல்களால் நடுவிரல்களின் மேல் இணைக்கவும்.• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக