ச்மசானாதிபதி ஸாதன
ஸாதகர் இரவு சுடலைக்குப் போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி மூன்று மாதங்கள் ஜபம் செய்து. அதன் பின் வரும் பௌர்ணமியில் உதரபலி கொடுத்து, மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், பால், பாயாசம் படைத்து, 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய அதிகாலை ச்மசானாதிபதி ஸாதகர் முன் தோன்றுவான். உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் " என்ன உனக்கு வேண்டும் " என்று கேட்பான். அதற்கு ஸாதகர் '' நீ எனக்கு வசமாகிய வேலைக்காரனாய் இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு ச்மசானாதிபதி அடிமையாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலையும் செய்வான். அவன் ஸாதரின் எதிரிகளை அழித்தொழித்து, ராஜ்யம், ஸாதகர் அனுபவிக்க ஆசைப்படபெண்கள், விரும்பிய சகலபொருட்கள், செல்வம், சகல ஸித்திகளையும் தருவான்.
ச்மசானாதபதி ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஹும் யம் ஆம் ஓம் ச்மசானாதிபதே ச்மசானராஜே ஆகர்ஷய ஆஹ்வய ஹூம் பட் ஸ்வாஹா.
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் ஹும் யம் ச்śமசாśāனாதிdhiபதி ச்śமசாśāனராஜே ஆகர்ஷṣaய ஆஹ்வய ஹூம் பphaட் ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹும் யம் ச்மசானாதிபதே, ச்மசானராஜே - சுடலைராஜா, ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆஹ்வய - வா, ஹூம் பட் ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வெள்ளை ரொட்டி, வெள்ளை எள், கற்கண்டு கலந்த பால், பாயாசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• ச்மசானாதிபதி - சுடலையின் அதிபதி என்று பொருள். இவன் ஒரு யக்ஷ. இவன் யக்ஷகுலத்தை சேர்ந்தவன்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக