கோரோசனம்

கோரோசனம்

கோரோசனம் - கோ என்றால் பசு அதனுடைய ரோசனம். பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப் பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப் பண்டமாகும். இதற்கு அதீதவசிய சக்கியுண்டு. இதை திலகமாகயிட்டுச் செல்ல மூன்றுலோகங்களும் வசியமாகும். சகல ஆவாகண ஸாதனைகளிலும் கோரோசனத்தை கண்டிப்பாக உபயோகிக்கவும், ஸித்தி சீக்கிரம் வரும். இன்றைய சந்தை நிலவரப்படி, கடைகளில் 50 - 100 ரூபாய்க்கு விற்கப்படுவது போலி. அசல், அதாவது உண்மையான கோரோசனம் 1 கிராம் 3000 - 6000 ரூபாய் வரும். சுத்தி செய்யப்பட்ட கோரோசனத்தை மருந்தாக உள்ளுக்குள்ளும் எடுத்துக் கொள்ளலாம்.

மயில்ரோசனம் இது மயிலிலிருந்து எடுக்கப்படுவது. இதை திலகமாகயிட்டுச் செல்ல மூன்றுலோகங்களும் வசியமாகும்.

ப்ரேதரோசனம் இறந்த மனிதனிலிருந்து எடுக்கப்படுவது. இதை திலகமாகயிட்டுச் செல்ல மூன்றுலோகங்களும் வசியமாகும்.

• புனுகு - புனுகுப் பூனையயிலிருந்து பெறப்படும் வாசனைப் பொருள் புனுகு எனப்படும். வெண்ணெய் பழுப்பு மஞ்சள் போன்ற நிறக் களிம்பு போலிருக்கும். நாள் செல்லச் செல்ல கருப்பு நிறத்துக்கு மாறி வரும். புதிதாக எடுக்கப்பட்ட புனுகு, குமட்டல் வாசனையை தரும். ஒரு முறை நீர்த்துப் போகும் போது அது இனிமையான நறுமணத்தை தரும். புனுகுப் பூனையிலிருந்து எப்படி புனுகு பெறப்படுகிறது ? புனுகு எடுப்பதற்காக வழமையாக புனுகுப் பூனைகள் கொல்லப்படுவதில்லை. கூம்பு சுரப்பியை தேய்ப்பதின் மூலமே புனுகு எடுக்கப்படுகிறது. அல்லது புனுகுப் பூனையின் கூண்டின் நடுவில், சுமார் 1 மீட்டர் நீளமும், 5 செண்ட்டி மீட்டர் விட்டம் கொண்ட ஒரு மரக் குச்சியை வைத்திருப்பர். புனுகுப் பூனை அதன் புனுகை அதில் வெளியிடும். தினமும் காலையில் குச்சியில் இருந்து புனுகு சேகரிக்கப்பட்டு, குச்சி மாற்றப்படும். நாளொன்றிறகு 3 கிராம் புனுகு எடுக்கலாம். புனுகின் பயன்பாடுகள் : மைகள் செய்யும் போது சேர்க்கப்படுகிறது, பூசாரி பூஜையின் போது தெய்வத்தை வசியம் செய்ய பூசிக் கொள்கிறான், ஸாதகர் ஆவாஹன ஸாதனையின் போது தெய்வத்தை உடனே ஆகர்ஷணம் செய்ய பூசிக் கொள்கிறான், ஸாதகர் தெய்வத்துடன் உரையாடும் போது பூசிக் கொள்கிறான். சுத்தி செய்யப்பட்ட புனுகுகை மருந்தாக உள்ளுக்குள்ளும் எடுத்துக் கொள்ளலாம்.
• ஜவ்வாது - புனுகுடன் வாசனை பொருட்களை கலந்தது செய்யப்படுவது ஜவ்வாது எனப்படும்.
• அரகஜா - ஜவ்வாதுடன் இன்னும் மூலிகைகள், பூக்களை கறுக்கி, கலந்தது செய்யப்படுவது அரகஜா எனப்படும்.
• கஸ்தூரீ - ஒரு குறிப்பிட்டவகை மான்களில் இருந்து பெறப்படும் வாசனைப் பொருள். இந்த மான்களுக்கு கொம்பு இருப்பதில்லை. கஸ்தூரீ பொடியாகவோ, திரவமாகவோ விற்கப்படுகிறது அல்லது இந்த மானின் விதைபையை வாங்கி அதனுளிருந்து காஸ்தூரீயை எடுத்துக் கொள்ளலாம். கஸ்தூரீயின் பயன்பாடுகள் : மைகள் செய்யும் போது சேர்க்கப்படுகிறது, பூசாரி பூஜையின் போது தெய்வத்தை வசியம் செய்ய பூசிக் கொள்கிறான், ஸாதகர் ஆவாஹன ஸாதனையின் போது தெய்வத்தை உடனே ஆகர்ஷணம் செய்ய பூசிக் கொள்கிறான், ஸாதகர் தெய்வத்துடன் உரையாடும் போது பூசிக் கொள்கிறான். சுத்தி செய்யப்பட்ட கஸ்தூரீயை மருந்தாக உள்ளுக்குள்ளும் எடுத்துக் கொள்ளலாம்.
• யானை மதநீர் - ஆண் யானை மதம் பிடிக்கும் போது அல்லது க்ஷோம்பணம் ஆகும் போது அதன் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் இருந்து வரும் திரவம் யானை மதநீர் எனப்படும்.
• சொக்கு நீர் கல், சொக்கு நீர் தமிழ். குளம்புநக முயலின் கல் போன்ற மலம், சொக்கு நீர் கல் என்று அழைக்கப்படும். கற்கள் பழுப்பு மற்றும் உடையக் கூடியது. அதை உடைத்து திறக்க கருமை நிறமான எண்ணை வரும், அதுவே சொக்கு நீர் என்று அழைக்கப்படும். சொக்கு நீர் இனிமையான புத்துணர்ச்சி தரக்கூடிய வாசனைப் பொருளாகும். ஆங்கிலம் hyraceum.
• நீர்நாய் பிட்ட நீர், நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி நீர் தமிழ். நீர்நாய் கொல்லப்பட்டே இந்த நீ எடுக்கப்படுகிறது. ஆங்கிலம் castoreum.
• திமிங்கில வாந்தி என்பது மெழுகு போன்ற நோயியல் வளர்ச்சியாகும், இது நூறு விந்தணு திமிங்கலங்களில் ஒன்றின் வயிறு மற்றும் குடலில் காணப்படுகிறது. ஆங்கிலம் ambergris.
• சுச்சுந்தரம் - சுச்சுந்தர என்ற எலியிலிருந்து எடுக்கப்பபடும் வாசனைப் பொருள். சமஸ்கிருதம் chucchundara.
• புனுகு, கஸ்தூரீ, யானை மதநீர், சொக்கு நீர், நீர்நாய் பிட்ட நீர், திமிங்கில வாந்தி, சுச்சுந்தரம் இவைகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு வித வாசனைகளுண்டு. ஒன்று மூக்கினால் உணரக் கூடியது. மற்றது மதியால் மட்டுமே உணரக் கூடியது. இந்த மதியால் மட்டும் உணரக் கூடியதை, இனக்கவர்ச்சி வசனை (pheromone) என்று அழைக்கப்படும். இந்த வாசனைக்கு கவரும் தன்மை, காம கிளர்ச்சியை தூண்டும் திறனுமுடையது.
• புனுகு, கஸ்தூரி, அரகஜா, ஜவ்வாது இவைகளின் அசல், இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் 3000 - 6000 ரூபாய் வரும். ஆனால் கடைகளிள் 50 - 100 ரூபாய்க்கு இவையாவும் விற்கப்படுகின்றன, சகலதும் போலியே.
• ஆவாகண ஸாதனை என்பதின் பொருள் தெய்வத்தை முன்னால் வரவழைத்து ஸாதகர் தன் விருப்பம்போல் அத்தெய்வத்தை தாய், மனைவி, சகோதரீ அல்லது அடிமையாக ஏற்றுக் கொள்ளுதல்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக