பூவங்குருந்தல்
1. பூவங்குருந்தல் பூ அல்லது பழத்தை ஒரு கிழமை வெற்றிலையில் சுற்றி வைத்து, அந்த பூ அல்லது பழத்தை அரசனிடம் போகும் போது ஸாதகர் தன்னுடன் எடுத்துச் செல்ல அரசன் வசியமாவான். அரசனே வசியமாகும் போது சாதாரண மக்களை சொல்லவா வேண்டும்.
2. பூவங்குருந்தல் பூவுக்கு அல்லது பழத்துக்கு வாசாடக மந்த்ரத்தை " ஓம் நமோ வாசாட பத பத ஹிடி த்ராவஹி ஸ்வாஹா " என்று ஏழுதடவை உருஏற்றி வேண்டியவருக்கு கொடுக்க அவர் வசியமாவார்.
3. அஷ்டமி அல்லது சதுர்தசி தேய்பிறையில் முறைப்படி பூஜை செய்து பூவங்குருந்தல் மழு மரத்தையும் கொண்டு வந்து பொடி செய்து அந்தப் பொடியை வெற்றிலையிலோ அல்லது உணவிலோ கலந்து கொடுக்க வசியமாவர்.
4. பூவங்குருந்தல் வேர் கோரோசனத்தையும் சம அளவு எடுத்து திகலகமிட்டுச் செல்ல எல்லோரும் வசியமாவர்.
5. பூவங்குருந்தல் வேர், மனோசிலை இரண்டையும் அரைத்து மை செய்து, ஸாதகர் இமைகளில் இந்த மையை இட்டுச் செல்ல, உலகத்தில் எவரை வேண்டுமானாலும் வசியம் செய்யலாம்.
• பூவங்குருந்தல் - சமஸ்கிருதத்தில் ஸஹதேவீ sahadevī என்பர்.
• வாசாcāடக மந்த்ரம் உச்சரிப்பு - ஓம் நமோ வாசாcāட பதtha பதtha ஹிடி த்dராவஹி ஸ்sவாஹா.
• கண்டிப்பாக இந்த மந்த்ரத்தில் ஸாதகர் ஏற்கனவே ஸித்தி பெற்று இருக்க வேண்டும். அப்போது தான் பலிக்கும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக