வித்யுஜ்ஜிஹா ஸுமுகீ ஸாதன
ஸாதகர் சுடுகாட்டுக்கு இரவு போய் 8000 மந்த்ரங்கள்/7 நாட்கள் சொல்ல வேண்டும். யந்த்ரம் வரைந்து, அவள் ரூபம் துணியில் கோரோசனமும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகம் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்ய வேணடும், 8ஆம் நாள் மீன் மாமிசம் படைத்து உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, வித்யுஜ்ஜிஹா ஸாதகர் முன் தோன்றுவாள், உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரைகாட்டி அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள் உடனே அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள் அதற்கு ஸாதகர் ''எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு'' என்று சொல்ல வேண்டும். அன்றில் இருந்து வேலைக்காரீயாகி முக்காலம் சொல்லுவாள்.
வித்யுஜ்ஜிஹா பிசாசினீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஸுமுகீ வித்யுஜ்ஜிஹ்வே ஆகச்ச ஓம் ஹூம் சேடகேச சேடகேச ஸ்வாஹா
மந்த்ர உச்சரிப்பு :
ஓம் ஸுsuமுகீkhi வித்dயுஜ்ஜிஹ்வே ஆகgaச்cசch ஓம் ஹூம் சேceடகேசśa சேceடகேசśa ஸ்sவாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம், ஸுமுகீ - அழகானமுகம், வித்யுஜ்ஜிஹ்வே - கொல்லிவாய், ஆகச்ச - வா, ஓம் ஹூம், சேடகேச சேடகேச - அடிமை அடிமை, ஸ்வாஹா
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம் வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளா வெட்டி த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவள் தயங்காமல் உடனே வருவாள்).
எரிபொருள் - நெய்.விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸாதகர் - யார் தந்த்ர ஸாதனைகளை செய்கிறாரோ, அவர் ஸாதகர் என்று அழைக்கபடுவார். சமஸ்கிருதத்தில் ஸாதக sādhaka.
• சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம் (உலோகம்) - சமஸ்கிருதத்தில் sindura, ஆங்கிலத்தில் red lead.
• வித்யுஜ்ஜிஹா பிசாசினீ - கொல்லிவாய், மின்னலான நாக்கை உடையவள். இவள் பிசாசகுலத்தை சார்ந்தவள்.
• ஸமக்ரி - samagri.
• அஷ்டகந்தம் ashtagandha.
• யந்த்ரமும் அவள் ரூபமும் வரைய வேண்டும்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• முந்திய ஒரு பதிவில் வித்யுஜ்ஜிஹா ஸாதனையை பார்த்தோம் ஆனால் அங்கு அவளுடைய முகம் மண்டையோட்டு முகம். அதைப் பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக