மந்திரம் என்றால் என்ன?

மந்திரம் என்றால் என்ன?

மந்திரம் தமிழில். சமஸ்கிருதத்தில் மந்த்ர.

மந்த்ர - மந்த்ரன என்ற மூலச் சொல்லிலிருந்து தான் வருகிறது. அதாவது அதன் அர்த்தம் "அறிவுரை" "சலுகை" என்பதாகும்.

மந்த்ரத்தினால் உளவியல் ரீதியானமாற்றத்தை மனிதனுடைய உடலிலும், உணர்வுகளிலும், எண்ணங்களிலும் உண்டாக்க முடியும்.

• சில மந்த்ரங்கள் அமானுஷ்ய ஒலிகளை மட்டும் கொண்டவையாகயிருக்கும். உதாரணத்துக்கு பீஜ மந்த்ரங்கள் அல்லது சுருக்கப்பட்ட ஒலிகள்.
• சில அமானுஷ்ய ஒலிகளைளுடன் சேர்ந்து தெய்வத்திடம் வேண்டு கோளுடனிருக்கும். உதாரணத்திற்கு "ஒம் க்லீம் ஜஃ குபேரா எனக்கு செல்வம் தா தா ஹூம் பட் ஸ்வாஹா" அல்லது "ஹ்ரீம் ஸ்த்ரீகளை வசியம் செய்து தா தா"
• சில மந்த்ரங்கள் தனி ஏதாவது ஒரு வேண்டுகோளாகவுமிருக்கலாம். உதாரணத்திற்கு "ஒம் சக்தியே ஆரோக்கியத்தை தா ஸ்வாஹா"
• சில மந்த்ரங்கள் தெய்வத்தின் அருளை பெறுவதற்கு மட்டுமாகயிருக்கலாம். உதாரணத்திற்கு "நமசிவாய"
• வேறு சில வழமையான தெய்வங்களுக்கான பூஜை மந்த்ரமாகயிருக்கலாம்.
• வேறு சில பாட்டாகக் கூடயிருக்கலாம் - பஜனை.

சிவபொருமான் தந்த்ர சாஸ்த்திரங்களில் அடிக்கடி கூறுகிறார், இந்த கலியுகத்தில் வேதமந்த்ரங்கள் அவைகளுடைய சக்தியை இழந்துவிட்டதாக. ஆகையால் தந்த்ர மந்த்ரங்களை மட்டுமே உபயோகிக்க கூறூகிறார்.

வழமையாக வேத மந்த்ரங்கள் பெரிய பாட்டாய் இருக்கும். ஆனால் தந்த்ர மந்த்ரங்கள் சிறியதாகவும் கச்சிதமாகவுமிருக்கும்.

பீஜ மந்த்ரங்கள் தந்த்ர சாஸ்த்திரத்துக்குறியவைகளாகும். அவைகள் தந்த்ர மந்த்ரங்களில் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு சில பீஜ மந்த்ரங்கள் - கம், ஹ்ரீம், க்லீம், ஸ்ரீம், லம், வம், இம், ஜஃ, ஹூம் ........

இந்த இணைத்தளத்திலுள்ள சகல மந்த்ங்களுமே, தந்த்ர மந்த்ரங்களாகும்.

மந்த்ரம் கத்தியை போன்றது நல்லதற்கும் உபயோகிக்கலாம் கெட்டதற்கும் உபயோகிக்கலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக