தெய்வங்களுக்கு படைக்கப்படும் தெய்வீக மது
நெய்யில்லாமல் எப்படிஹோமம் செய்ய முடியாதோ, சரியான குருவில்லாமல் ஆன்மீகம் கற்க இயலாதோ, அப்படி மதுவில்லாமல் இறைவழிபாடு நடத்த முடியாது.
திரவம், வேர், கௌடீமா, தேன், மரங்கள், சக்கரை இவைகளிலிருந்து மது உருவாக்கப்படுகிறது.
மாத்வீ மது ஐந்து விதம். பைஷ்டி எட்டு விதம். கௌடீ ஏழு விதம்.
காரம், கசப்பான, கூர்மையான, இனிப்பு, மென்மையான சுவைகளை மது வகைகள் கொண்டதாகும்.
" ஓம் ஆஃ ஹூம் " இந்த மந்த்ரத்தை சொல்லி, மது சுத்தி மந்த்ரம் " ஹ ஹோ ஹ்ரீம் " சொல்ல வேண்டும். ஹ நிறத்தை நீக்கக் கூடியது. ஹோ மணத்தை அழிக்கும். ஹ்ரீம் ஆற்றலை அழிக்கும். மந்த்ரம் சொல்லிய பின்னர் அமிர்தமாக நினைத்து குடிக்க வேண்டும். ஸாதகர் இறைவனுக்கு கொடுத்த பின்னரே குடிக்க வேண்டும்.
அனந்த, வாசுகி, வருண இவர்களுக்கு மலர்கள், குங்கிலி துபம், நைவேத்தியம் பூஜை மூலம் உபசரிக்க வாருணீ திருப்தியாவாள்.
ஆறு விதமான மதுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அமலகா மது :
ஒவ்வொரு நாள் மது. இந்த மது ஒவ்வொரு நாளும் செய்யப்படும் மது. இது பரலோகத்தில், சிறந்த நடைமுறையிலுள்ளது, இனிமையானது. ஒரு கர்ஷ சிக்ரு, பத்து கர்ஷ நெல்லிகாய், ஒரு ப்ரஸ்த நீர், பத்து கர்ஷ மிளகு, ஒரு பலம் மதுதூலி இவைகளை ஒன்றாக சேர்த்து சூரிய ஒளியில் வைக்க வேண்டும். இதுவே அமலகா (நெல்லிகாய்) மது.
2. தாதகீ மது :
தாதகீ பூ, மாம்பூ, தானியம், மலய (விஷ்ணுக்ராந்தா), சாரிவ, இந்துப்பு, சிக்ரு மரத்தின் தண்டு இவற்றில் கால் பங்கு சம பங்கு எடுக்கவும். 32 பலம் தண்ணீர், எட்டு பலம் மதுதூலி. மூன்று நாட்களுக்கு பின்னே மதுவாகும். இதுவே தாதகீ (வேலக்காய்மரப் பூ) மது.
3. பத்த்திரகா மது :
பத்த்திரகா, மரிச மிளகு, மஞ்ஜிஷ்டா புல், நாககேசர, தாடிம, வால, கிராம்பு, மாகதா மிளகு, ஏழு பலம் தண்ணீர், ஒரு பலம் மதுதூலி. ஆசவ மது (பொதுவான தெய்வீக மது). அருமையான நறு மணத்துடன், தெளிவானது, குளிர்ச்சியாகவுமிருக்கும். இதுவே பத்த்திரகா (கருவாமர இலை) மது.
4. சர்கரா மது :
கருவாய்ப்பட்டை, ஏலக்காய், நலத, சக்ர, தமால, சருபாதிக, சர்கரா ஏழு நாட்கள் சூரிய ஒளியில்வைத்து எடுக்க வேண்டும். இதுவே சர்கரா (சக்கரை) மது.
5. மேதாவின் மது :
எட்டில் ஒரு பங்கு பலம் சிக்ரு வேர் சாறு, தேன், வஸ்து, பின் கொதிக்க வைத்து, கடைய வேண்டும். த்ரீபழம், குங்குமப்பூ, கஸ்தூரீ, கற்பூரம், பத்த்திரகா, அகுரு இவைகளை ஒவ்வொரு கூறுகளின் நூறாவது பகுதியாக சேர்த்து, கடைய வேண்டும். இதை தானியாக நான்கு நாட்களுக்கு விட வேண்டும். இதுவே மேதாவின் மது.
6. மதிரா மது :
சோபாஞ்ஜன, சாகல, தேன் நாலு தடவை கூடுதலாக, இரண்டு வித துஹின கற்பூரம், கஸ்தூரீ, கஸ்த்தூரீ அளவு ஜாதிக்காய். அரை பலம் தாதகீ பூ அத்துடன் தேனும். நூறு தடவை கலக்கி, அரை பலம் சுகந்தம் சேர்கவும். இதுவே மதிரா மது.
• மதுதூலி - மதுபானம் செய்ய பயன்படுத்தும் ஒரு பொருள். வெறியை தருவது. கடைகளில் வாங்கலாம்.
• உச்சிப்பு - கௌgauடீḍīமா - மதுமதூலியால் செய்யப்பட்து. மாத்dhவீ மது, சிக்gரு, ப்ரஸ்தtha, சிக்gரு வேர் சாறு, தாdhāதகீ பூ, தdhāதகீ மது, மரிசca மிளகு, நலதda சcaக்ர, சcaருபாதிdiக, சர்கரா, மதிdiர மது, சாcāகgaல, தாdāடிḍaம, மாகgaதாdā, மிளகு, கௌgauடீḍī, அகுguரு. அகராதியை பார்த்து பொருள் தெரிந்து கொள்ளவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக