ஆவாஹன ஸாதனைக்கு தயார்படுத்திக் கொள்ளும் முறை
என்னத்தை தான் சொன்னாலும் ஒரு சாமானிய மனிதன் தெய்வத்துட உரையாட, அதற்கான மனப்பக்குவம் தேவை. உதாரணத்துக்கு ஒருவர் புன் சிரிப்புடன் தோன்றும் உமாதேவீயை நேருக்கு நேர் சந்திக்கிறான் என்று எடுத்துக் கொள்வோம், அப்படி சந்திக்கும் போது அவனுக்கு கை காலெல்லாம் பதறிப் போய், கையுமோடாமல் காலுமோடாமல், சொக்கிப் போய் நிற்பான். அதனால் இப்படிப்பட்ட சூழ்நிலையை சிறப்பாக கையாள பயிற்சிகள் தேவை. அதாவது தெய்வங்களை நேரில் பார்பதற்கான மனஉறுதியும் தைரியமும் தேவை.
அது யக்ஷிணீகள், பூதினீகள், தேவீகள், கின்னரீகள், அப்ஸரஸ்கள் போன்ற சாந்தமான தெய்வங்காளாய் இருந்தாலும் சரி அல்லது காளீ, பைரவீ, சாமுண்ட, மஹாகால போன்ற கோர (பயங்கர) தெங்வங்களாக இருந்தாலும் சரி, நேரில் பார்பதற்கான மனஉறுதியும் தைரியமும் தேவை. நேரில் பார்த்து ஸர்வ சாதராணமாக பயப்படமல் பழக மனஉறுதியும் தைரியத்தையும் எப்படி வளர்த்துக் கொள்வது என்று பார்ப்போம். அதுவும் கோர தெய்வமென்றால், இன்னும் வீர சுபாவமும் தேவை.
சாந்தமான தெய்கங்களை நேரில் சந்திக்கும் போது பயம் வராமலிருக்க பயிற்சி - இந்த தெய்கங்கள் மனிதர்களை போன்றவர்கள் தான் ஆனால் வேற்று உலகங்களில் வாழ்பவர்கள் அவர்களும் எங்களை போன்றவர்கள் தான் என்று அடிக்கடி நினைத்து; மனோபலம், மனோபாவம், தன்நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நிர்வாணமாக, ஊன்றி சொல்ல கையில் ஒரு தடியுடன் மலைகளில் அல்லது காட்டுப் பகுதியில் உலாவித் திரிய வேண்டும்.
கோர (பயங்கர) தெங்வங்களை நேரில் சந்திக்கும் போது பயம் வராமலிருக்க பயிற்சி - மேலே சென்ன பயிற்சியை பயிலவும். அடுத்த பயிற்சியாக கண்களை மூடிக் கொள்ளுங்கள், உங்களுக்கு முன் ஒரு அசுரன் நிற்கிறான் என்று ஒப்பனை செய்யுங்கள், அனிடமும் உங்களிடமும் ஆயுதங்களுள்ளன, அவனுடன் சண்டையிடுகிறீர்கள், வெற்றி கொள்கிறீர்கள். அதன் பின் கண்களை திறக்ககவும். இப்படிப்பட்ட பயங்கர தோற்றமுடையவர்களை பார்க்க இங்கே தட்டவும்.
க்ரோதபைரவர் சொல்லுகிறான், ஸாதனை செய்யும் இடத்திற்கு அருகாமையிலே கூடாரம் அமைத்து அங்கயே தங்கி ஸாதனையை செய்யவுமென்று. வீட்டிலிருந்தால் வீட்டிலுள்ளவர்கள் ஏதாவது சொல்லலாம், அது கோபத்தை உண்டக்கலாம்; தொலைக்காட்சி, பத்திரிகைகள் மனதை குழப்பலாம், இவைகள் மனதை கலங்கப்படுத்தும். ஆகவே மனதை ஒரு நிலைப்படுத்த, இந்த ஸாதனை செய்யும் நாட்களில், தனி வீட்டிலோ அல்லது உங்கள் வீட்டில் மேலே சொன்னவற்றிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட பட்சத்தில் நீங்கள் வீட்டிலிருந்தே ஸாதனை செய்யுமிடத்திற்கு சென்று வரலாம். இப்படி வீட்டில் சும்மா இருக்கும் போது தந்த்ர (தாந்திரீக) நூல்களை வாசிக்கவும்.
மது, ஸம்போகம். புகை, மாமிசம் இவைகளை ஸாதனை செய்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஸாதனையின் முதல் நாட் கொண்டு ஸாதனை முடியும் வரை, ஒரு வேளையே சாப்பிட வேண்டும். பாலும், பழங்களும் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். உதரணத்துக்கு இரவு ஏழு மணியளவில். நீர் எப்ப வேண்டுமானாலும் அருந்திக் கொள்ளளாம்.
ஸாதனை செய்யும் நாட்களில், ஒவ்வொரு நாளும் காலையில் குளிக்க வேண்டும். மேலும் எதைச் செய்தாலும் துப்பரவாகவும் சுத்தமாகவும் செய்ய வேண்டும்.
ஹோமம் செய்யும் நாளன்றின் திதி, அந்த திதி குறிப்பிட்ட கிழமையில் வருகிறதா என்பதை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சிலர் இதில் தவறிழைப்பதுண்டு. உதாரணத்துக்கு
நீங்கள் பஞ்சாங்கம் பார்த்தபடி ஹோமம் செய்யும் நாள் திங்கட்கிழமையில் வருவதாக எடுத்துக் கொள்வோம், அதாவது ஞாயிற்றுக் கிழமை முடிந்து திங்கள் கிழமை தொடங்குமிரவு. சிலர் திங்கள் இரவு என்று எண்ணிக் கொண்டு திங்கள் இரவு 12.00 மணிக்கு பின் ஹோமத்தை தொடங்குவர் அது ஏற்கவவே செவ்வாய்க் கிழமை. அதனால் நீங்கள் எடுத்த முயற்சி எல்லாம் வீணாக போய் விடும். இதில் எப்பவும் கவனமாக இருக்கவும்.
கண்காணித்தல், தரவுகளை சேகரித்தல்.
நீங்கள் ஸாதனயின் போது என்னென்ன பொருட்களை எடுத்து சொல்கிறீர்கள், எந்தெந்த நேரத்தில் எதை செய்கிறீர்கள் என்று விபரமாக ஒரு கொப்பியில் எழுதி வைத்து கொள்ளுங்கள். இது ஸாதனையில் ஸித்தி கிடைக்காவிட்டால், எங்கே தவறு நடந்தது என்று கண்டு பிடிக்க உதவும். அடுத்த முறை ஸாதனை செய்யும் போது அந்த தவறுகளை சரிப்படுத்திக் கொள்ளலாம்.
பாதுகாப்பு.
முதல் பாதுகாப்பே மஹாக்ரோதராஜாயை இஷ்ட தெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல். துஷ்ட பந்தன யந்த்ரம் அல்லது ரக்ஷ யந்த்ரம் புஜத்திலோ அல்லது கழுத்திலோ ஸாதனையின் போது அணிந்திருக்க வேண்டும். அதே போல் பாதுகாப்பிற்காக செந்நாயுருவி வேரை உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
உடம்பில் வசிய சக்தியை அதிகரித்தல்.
இதில் முன்று விதமாக வசிய சக்தியை அதிகரிக்கும் முறையை பார்போம். மந்த்ரம், முலிகை தாயத்து, மை. " ஓம் ஆதிபுருஷாய "________" மே ஸம்ஆகர்ஷணம் குரு குரு ஸ்வாஹா ". இந்த இடத்தில் "________" த்ரைலோகம் அல்லது த்ரீபுவனம் என்ற சொல்லை வைத்து ஜபம் செய்யவும். இல்லாவிட்டால் எந்த குலத்தை சேர்ந்த தெய்வத்தை ஆவாஹனம் செய்ய போகிறீர்களோ அந்த குலத்தை குறிப்பிடலாம். உதாரணத்துக்கு யக்ஷிணீ என்றால் யக்ஷகுலம் என்று வைத்து ஜபம் செய்யலாம். இப்படி பிசாசகுலம், பூதகுலம், கந்தர்வகுலம், கின்னரகுலம். நாககுலம். அரககுலம். அஸுரகுலம். வித்யாதாரகுலம் என்றும் வைத்து ஜபம் பண்ணலாம். இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெற்றதும், மற்ற லோகங்களிலுள்ளவர்கள் மட்டுமல்ல பூலோகத்திலுள்ளவர்களும் ஆகர்ஷணமாவார்கள். அதுமட்டுமல்ல இதில் ஸித்து பெற்றவர்களுக்கு சுவாரசியமான சம்பவம் நடக்கு அதாவது இரவில் ஆள் நடமாட்டம் குறைந்த தெருவில் சொல்லும் போது உங்களை யாரோ பின் தொடர்வதை போல் உணர்வீர்கள். தெரு மூலையில் திரும்பும் போது உங்களை முண்டியடித்துக் கொண்டு யாரோ பின்னாலிருந்து முன்னோக்கி சொல்வதையும் அப்போது வீர்... என்ற காற்று கடப்பதையும் உணர்வீர்கள். பயப்படத் தேவையில்லை, மகிழ்ச்சி அடையுங்கள். அதாவது தெய்வங்கள், ஆகர்ஷணமாகி உங்களுக்கு பின்னாலே திரிகின்றன. ஆகர்ஷணம் என்பதின் பொருளை பார்க்க இங்கே தட்டவும். இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெறுவது எப்படி என்று அறிய இங்கே தட்டவும். கோரோசனம், புனுகு, ஜவ்வாது, கஸ்தூரீ, பூவங்குருந்தல். ஆந்தை, நீலத்தாமரை, விழுது, பொற்சீந்தில், கொத்தான் செடி, வெள்ளெருக்கு, சங்குப்பூக் கொடி, நாயுருவி இந்த பதிவுகளை பார்க்கவும். உங்களால் எவகைகள் முடியுமோ அவைகளை தேர்வு செய்யுங்கள். ஆனால் கண்டிப்பாக ஸாதனையின் போது கோரோசன பொட்டு இட்டும். செந்நாயுருவி வேரையும் வைத்திருக்கவும்.
எந்த ஆவாஹன ஸாதனையானாலும், சிகப்பு நிற பட்டு துணி, மான் தோல் அல்லது புலித் தோலின் மேல் நிர்வாணமாக இருந்து கொண்டு, இரவிலே செய்ய வேண்டும்.
வழமையாக ஒரு ஆவாஹன ஸாதனை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்போம்.
முதலில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய் ஸாதனை செய்ய சொல்லப்பட்டிருக்கும். அது மலையாக, இரு ஆறுகள் சந்திக்கமிடம் இடமாக அல்லது சுடுகாடாகக் கூட இருக்கலாம். நீங்கள் தேர்வு செய்த ஸாதனையில் எந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அந்த இடத்திற்கு, ஸாதன செய்யும் நாள் அன்று மதியம் சென்று அந்த இடத்தை பார்வை செய்து, எந்த இடத்திலிருந்து ஸாதன செய்ய போகிறீர்களோ அந்த இடத்திலுள்ள கற்கள், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, யந்த்ரம் கீறுவதற்கான தெரிவு செய்த இடத்தை அழகாக தண்ணீரை ஊற்றி மெழுகிவிட வேண்டும்.
அதன் பின் ஸாதனயில் யந்த்ரம் கீற சொல்லியிருக்கும். யந்த்ரம் எப்படி கீறுவது என்று அறிய இங்கே தட்டவும். இந்த யந்த்ரம், ஸாதனை செய்யும் முதல் நாளன்று இரவு 12.00 மணியானதும் கீற வேண்டும். அகல் விளக்கில் நெய்யூற்றி விளக்கை எரிய விட வேண்டும். எத்தனை நாள், ஸாதன செய்ய வேண்டுமோ அத்தனை நாளும் கீறப்பட்ட யந்த்ரத்தில் அழிந்த கோடுகளிருந்தால் அதை அழகாக கீறி சரிப்படுத்தி கொள்ள வேண்டும்.
அதன் பின் ஸாதனையில் சொல்ப்பட்டிருந்தால், ஆவாஹன செய்ய இருக்கும் தெய்வத்தின் படம் வரைய வேண்டும். இதை நீங்கள் ஏற்கனவே வீட்டிலிருந்து வரைந்து எடுத்து வரலாம். எப்படி வரைவது என்று பார்க்க இங்கே தட்டவும்(விரைவில்). அந்த படத்தின் முன் அகல் விளக்கை வைத்து, படத்தின் கீழே பூக்களையும் வைக்கவும், அந்த படத்திற்கு கற்பூரம் காட்டி, பழம், ஊது பத்தி, ஒரு சின்ன நைவேத்தியம் வைக்க வேண்டும்.
அடுத்ததாக தூபத்தை உண்டாக்க வேண்டும். ஒரு சட்டிக்குள்ளோ அல்லது நிலத்திலோ செங்கருங்காலி மரக் கட்டைகளை வைத்தது எரியாவிட்டு தனலை உருவாக்க வேண்டும். இதை 12.00 கொஞ்சம் முன்னதாவே செய்யலாம். ஏனென்றால் தனல் உருவாக நேரமெடுக்கும். அதான் பின் குங்கிலியத்தை தனலின் மேல் போட்டுக்கொண்டு, அந்த இரவு எத்தனை தடவை மந்திரம் சொல்ல வேண்டுமோ அத்தனை தடவை மந்த்ரம் சொல்ல வேண்டும். இப்படியே ஒவ்வொரு நாளும், ஹோமம் செய்யும் நாள் வரை இப்படியே செய்ய வேண்டும்.
அடுத்தது ஹோமம் செய்யும் நாள். ஹோமம் செய்யும் நாள் அன்று மதியம் அந்த இடத்துக்கு சென்று சென்று ஹோமம் செய்வதற்கான குழியை தோண்டி தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாளன்று இரவு தான் படையலுக்கான பொருட்கள், பூஜை பொருட்கள், நைவேத்தியங்கள், ஸமக்ரி, ஹோமத்தை உண்டாக்குவதற்கான விறகு, பூக்கள், சகல ஹோமத்திற்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்து எடுத்து செல்ல வேண்டும். ஸாதனையில் பலி கொடுக்க சொல்லப்பட்டு இருந்தால், ஹோமம் தொடங்கும் முன் கீறிய யந்த்ரத்திற்கு அருகில் குறிப்பிட்ட விலங்கை பலி கொடுக்க வேண்டும். உங்களுக்கு நீங்களாகவே அந்த விலங்கை பலியிடுவதில் சங்கடமிருந்தால், பலி கொடுப்பதற்கென்று, அதற்குரிய நபரை கூட்டி வந்து, விலங்கை பலியை கொடுக்கலாம். அந்த நபருக்கு மனம் குளிரும்படியாக பணமளித்து அனுப்பி வைக்க வேண்டும். பலியை வாழையிலை விரித்து, புதிய பிரம்பு கூடையிலோ அல்லது புதிய தட்டிலிலோ வைக்கலாம். பலி கொடுத்தின் மூலமாக வரும் இரத்த வாசனைக்கு சுற்றுப் புறத்திலுள்ள விலங்குகள், பாம்புகள் அந்த இடத்திற்கு வரக் கூடும். நேரத்தை வீணடிக்காமல் இரவு 12.15 கெல்லாம் ஹோமத்தை தொடங்கிவிட வேண்டும்.
அடுத்தபடியாக ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வம் உங்கள் முன் தோன்றும், அந்த தெய்வத்துடன் எதுவித பதட்டமுமில்லாமல் தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுத்து படைத்தவைகளை எடுத்து கொள்ளும்படியா சொல்லி, கைகளால் காட்டி (முத்திரை) வேண்டும். அர்க்யம் எப்படி கொடுபப்பது என்று பார்க்க இங்கே தட்டவும்.
அடுத்த கட்டமாக தெய்வம் உங்களுடன் கதைக்கும் தெய்வம் தன் பாணியில் கேட்கும், என்ன உங்களுக்கு வேண்டுமென்று. அதற்கு பதிலாக நீங்கள் தேர்வு செய்யப்பட்ட ஸாதனையில் யாராக ஏற்றுக் கொள்ள வேண்டு என்று சொல்லப்பட்டுள்ளதோ, அதன் பிரகாரம் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு தாய், மனைவி, சகோதரீ, வேலைக்காரீ, அடிமை. அதன் பின் தெய்வம் உங்களுக்கு பொற் காசுகள்; ரஸம்; ரஸாயனம்; ஸித்திகள்; உணவு வகைகள், இதில் மாமிசமும் அடங்கும்; உடைகள்; அலங்கார பொருட்களை தரும்.
• இந்த பதிவு இதற்கு அடுத்த வரும் பதிவு <ஆவாஹன ஸாதன படிப்படியான செய்முறை>. இதற்கு முந்தைய பதிவு <ஆவாஹன ஸாதனயில் வெற்றி பெற அடிப்படை விதிகள்>. இந்த மூன்று பதிவுகளும் யார் யார் ஆவாஹன ஸாதன செய்ப் போகிறார்களோ அவர்களுக்கு முக்கியமானது.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
ஐயா, ஆவாகன சாதனையை ஏன் நிர்வாணமக செய்ய வேண்டும்?
பதிலளிநீக்குயக்ஷிணீகள், பூதினீகள், தேவீகள், கின்னரீகள், அப்ஸரஸ்கள் - இடுப்பில் சிறு பாவாடை போன்ற ஆடை அணிந்திருப்பர், மர்பகங்கள் நிர்வாணமாக இருக்கும். பொரும்பாலும் மற்ற எல்லா தெய்வங்களும், முழு நிர்வாணமானவை. அதனால் போது விதி "ஆவாஹன ஸாதன" நிர்வாணமாக செய்ய வேண்டுமென்று வகுக்கப்பட்டுள்ளது.
நீக்குநன்றி ஐயா.
பதிலளிநீக்கு