ஆவாஹன ஸாதனைக்கு யந்த்ரம் வரைவது எப்படி?

ஆவாஹன ஸாதனைக்கு யந்த்ரம் வரைவது எப்படி?
ஆவாகண ஸாதனை யந்த்ரமானது ஸாதனை செய்யுமிடத்தில் நிலத்தில் வரையப்படுவதாகும். அதன் அளவு 18 அங்குலம் நீளம், 18 அங்குலம் அகலம். யந்த்ரம் காகித மட்டையில் ஏற்கவனே அச்சு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுயிருக்க வேண்டும். யந்த்ரம் வரையப்படும் நிலத்தை ஏற்கவனே மெழுகி வைத்திருக்க வேண்டும். மெழுகிக் காய்ந்த நிலத்தில் அச்சு வடிவத்திலுள்ள காகித மட்டையை வைத்து. அச்சின் மேல் சிகப்பு சந்தனத்துடன் நீர் கலந்து பூச, நிலத்தில் யந்த்ரத்தின் வடிவம் பதியும்.
 
ஸாதகருக்கு குறிப்பிட்ட தெய்வத்தின் யந்த்ரம் தெரியுமே ஆனால் அந்த தெய்வத்தின் ஸாதனையில் அந்த யந்த்ரத்தை வரையலாம். அல்லாவிட்டால் எல்லா ஸாதனைக்கும், மேலே படத்திலுள்ளது போல் யந்த்ரத்தை வரையவும். ஸாதகர் சொல்லயிருக்கும் தெய்வத்தினுடைய ஆவாகண மந்த்ரத்தை செம்மஞ்சல் நிறத்திலுள்ள மூன்று புள்ளிகளில் தொடங்கி யந்த்ரத்தை சுற்றி எழுத வேண்டும். (செம்மஞ்சல் புள்ளிகள் விளக்குவதற்காகவே போடப்பட்டு உள்ளது).

இந்த யந்த்ரம் வரைய ஒதுக்கப்பட்ட நேரம் ஜந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரையாகும். ஸாதனை செய்யும் ஒவ்வொரு நாளும் யந்த்ரத்தை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த யந்த்ரத்துக்கே ஹோமம் செய்யும் நாளன்று பலி கொடுக்க ஸாதயில் சொல்லியிருந்தால், பலி கொடுக்க வேண்டும்.

ஸாதனையில் வஸ்து குறிப்பிட்டு சொல்லியிருந்தால் உதாரணத்திற்கு குங்குமம் அல்லது சுண்ணாம்பு கொண்டு வரைய வேண்டுமென்றால், அப்படியே ஸாதனையில் சொல்லப்பட்டபடி செய்யவும்.

முக்கோணம் கீழேபார்த்தபடி - யோனி, பெண்குறி. முக்கோணம் மேலேபார்த்தபடி - லிங்கம், ஆண்குறி. யந்த்ரத்தின் கீழ் முக்கோணத்தையும் மேல் முக்கோணத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க யந்த்ரத்தின் சக்தியும் அதிகரிக்கும். அதாவது அதிக யோனிகளும் அதிக லிங்கங்களும் புணர்ச்சியில் ஈடுபடுவதற்கு சமனாகும், அதனால் சக்தி அதிகரிப்பு உண்டாகிறது. ஸாதகர் விரும்பினால் மேலும் முக்கோணங்களை உள்ளுக்குள் வரையலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக