ஆவாஹன ஸாதனயில் வெற்றி பெற அடிப்படை விதிகள்
1. குருவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தீட்சை தந்த்ர முறைப்படி கலசம் வைத்து, மஹாநிர்வாண தந்த்ரம் என்ற நூலில் சொல்லப்பட்ட முறைப்படி எடுத்து கொள்வது விரும்பத்தக்கது. போலி குருக்கள் நிறைந்த இந்த காலத்தில், ஆவாஹன ஸாதனை முறையாக கற்றுத் தர இன்று சரியா குருக்களில்லை.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில், மூன்று நான்கு பேர் இருக்கிறார்கள்; அவர்கள் குட்டிசாத்தான், குறளீ, கருடன் போன்ற தெய்வங்களை ஆவாஹனம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த தெய்வங்களை வைத்து ஸித்து விளையாட்டுக்களையும் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் அவர்கள் இந்த கலையில் பெரிய கைதேர்ந்தவர்களுமில்லை, உதாரணத்துக்கு சரியான முறையில் ஹோமம் கூட, செய்ய தெரியாதவர்கள். அவர்கள் முறைப்படி இக் கலையை அறியாதவர்கள். மேலும் அவர்கள் ஒரு போதும் இந்த கலையை ஒருவருக்கும் சொல்லிக் கொடுக்கமாட்டார்கள், ஏனென்றால் நீங்கள் அவர்களை மிஞ்சி விடுவீர்கள் என்ற பயமும், மக்கள் மத்தியில் அவர்களுடைய செல்வாக்கும் குறைந்து விடுமென்ற பயமும் தான். எப்பவும் அவர்களை மக்கள் சித்தர்கள் என்று எண்ணி, அவர்களை சித்தர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இந்த கலையை சொல்லி கொடுக்க முன் வந்தாலும் கூட அவர்கள் இவ்வுலகை விட்டு பிரியும் முன் ஒருவருக்கு மட்டுமே சொல்லி கொடுப்பர்.
அப்படியென்றால் என்ன செய்வது? மந்த்ர ஸித்தி உள்ளவரிடமிருந்து, மந்த்திர சக்தியை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பொற்றுக் கொண்டால் உங்களிடம் மந்த்ரசக்தியுண்டாகும் அதனால் இந்த இணைத் தளத்திலுள்ள எந்தொரு ஸாதனையைச் செய்தலும், அதில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும்.
இந்த மந்த்ர சக்தியை பெறுவதற்கு காயத்ரீ மந்த்ரத்தில் ஸித்தி பெற்ற பிராமணர்களையோ அல்லது கோயில் அர்ச்சகர்களையோ நாடலாம். எப்பவும் அவர்களுடைய முகத்தில் பிரகாசமிமருக்கும், இதை வைத்தே அவர்களிடம் மந்த்ர சக்தியிருப்பதை கண்டுபிடித்து விடலாம். இப்படிப்பட்ட மந்த்ர சக்தி உள்ளவரிடமிருந்து மந்த்ர தீட்சை பெற்றவுடன், சொல்லித் தந்த மந்த்திரத்தை ஒவ்வொரு நாளும் காலையில் துயிலெழுப்பிய உடன் காலைக் கடன்களை முடித்த பின், குறைந்தபட்சம் ஒரு ஏழு முறை ஜெபம் செய்தால் போதும். அதாவது உங்களுக்கு மந்த்ரசக்தியுண்டு இந்த இணைத் தளத்திலுள்ளவைகை முறைப்படி செய்தால் உங்களுக்கு எப்பவும் வெற்றியே.
2. நம்பிக்கை, பக்தி, விடாமுயற்சி, துப்பரவு, பொறுமை உங்களிடமிருக்க வேண்டும்; மூடநம்பிக்கைகளை தவிர்த்து, ஆடம்பர நவீன வாழ்கையை வாழ ஊக்கமுள்ளவராக இருக்க வேண்டும்; தன் தாய்மொழியில் கதைக்க தெரிந்திருக்க வேண்டும், அதாவது ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச வேண்டும்; நம்மினத்தின் பெருமை, இனமுன்னேர்கள் இனத்துக்காக செய்த தியாகங்கள், நம்மினத்துக்கு மஹிமை சேர்த்தவர்களை பற்றி தெரிந்திரு்க வேண்டும்.
3. எப்பவும் நேர்மறை எண்ணங்களையே சிந்திக்க வேண்டும்.
4. எல்லா ஜிவராசிகள் மேலும் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு உதவ வேண்டும். மிருகங்கள், பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும். கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் ஈடுஇல்லத உள்ளம். இதனல் வசிய சக்தியுண்டாகும்
5. உங்களை தாய் நேசிகும் படியான உறவிலிருக்க வேண்டும்.
6. உடலுறவில் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும். அது விளைமாதாகக்கூட இருக்கலாம். குறைந்தது இரண்டு வேறுபட்ட பெண்களுடன் அனுபவம் வைத்திருந்திருப்பது நல்லது. ஏனென்றால் இது சக்கரங்கள், உடலில் சுழர்ச்சியிலுள்ள பத்து வித வாயுக்களை சரியாக இயக்க வழி வகுக்கும். இதனால் உடலிலுள்ள எல்லா மண்டலங்களும் நேர்த்த்தியாக இயங்கும். இது உங்களுக்கு ஆரோக்கியத்தை, ஆளுமையை தரும். வசிய சக்தியை கூட்டும்.
7. தரிசு நிலத்தில் எப்படி விளையாதோ அப்படி ஆரோக்கியமற்ற உடலில் சித்து குடி கொள்ளாது. உடலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைஉண்ண வேண்டும்
மேலே உள்ள ஏழு விதிமுறைகளை பின் பற்றி, அத்துடன் பிராணாயாமம், தியானம், ஹோமம் பயிற்ச்சி செய்ய, இந்தக் கலையில் நீங்கள் செய்வதெல்லாம், வெற்றியை தரும்.
• இந்த பதிவு இதற்கு அடுத்த வரும் பதிவு <ஆவாஹன ஸாதனைக்கு தயார்படுத்திக் கொள்ளும் முறை> அதற்கும் அடுத்தவரும் பதிவு <ஆவாஹன ஸாதன படிப்படியான செய்முறை> இந்த மூன்று பதிவுகளும் யார் யாரெல்லாம் ஆவாஹன ஸாதன செய்யப் போகிறார்களோ அவர்களுக்கு முக்கியமானது.
• யாரெல்லாம் ஆவாஹன ஸாதனை செய்யலாம் யாரெல்லாம் செய்யக் கூடாது?
உலகத்திலுள்ள இனமத பேதமின்றி யாரும் ஆவாஹன ஸாதனையை செய்யலாம். எந்த ஸாதகர்கள், பிராமணர்களாயிருகிறார்களோ அவர்களுக்கு ஆவாஹன ஸாதனை பொருந்தாது. இது க்ரோதபைரவரால் சொல்லப்பட்டது. மேலும் சொல்லுகிறார் யார் யாருக்கெல்லாம் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று, இந்த சாஸ்த்திரம் - களவாடப்பட்ட பொருள்கள், களவாடப்பட்ட செல்வம் வைத்திருப்பவனுடன் பிணைக்கப்படக் கூடாது, கடுமையான பக்தி இல்லாதவன், மோசமான மனநிலை உள்ளவனுக்கு, வன்முறைக்கு விரும்புவனுக்கு, செயலற்றவனுக்கு, மோசமான பிறப்புடையவனுக்கு, பாவங்கள் செய்தவதவனுக்கு, குரு மேல் பக்தியில்லாதவனுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக