அர்க்யம் தெய்வத்துக்கு கொடுப்பது எப்படி?

அர்க்யம் தெய்வத்துக்கு கொடுப்பது எப்படி?

அர்க்யம் - ஒரு தெய்வத்திற்கு மரியாதைக்குரிய வரவேற்பில் வழங்கப்படும் நீர். அதாவது தெய்வத்துக்கு நீரளித்தல். தமிழ் - ஆர்கிய அல்லது ஆர்க்கியம். சமஸ்கிருதம் - அர்க்ய. ஆவாகண ஸாதனையில் தெய்வம் ஸாதகர் முன் தோன்றியதும் தூபம் காட்டி, தீபம் காட்டி முத்திரை காட்டி அதன் பின் அர்க்யம் கொடுக்க வேண்டும்.

ஆவாகண ஸாதனையில் அர்க்யம் கொடுக்கும் விதம் :
தெய்வத்தை கண்டதும் ஸாதகர் வலது முழங்காலை நிலத்தில் வைத்து, இடது காலை மடக்கி முழுப் பாதமும் நிலத்தில் படும்படி வைத்து நின்று கொண்டு, முன்னுக்கு ஒரு தட்டை வைத்து, செம்பு நிறைய நீர் எடுத்து, அந்த தட்டிற்கு நேர் மேலக செம்பை இரு கைகளாலும் உயர்த்திப் பிடித்து, தெய்வத்தை பார்த்து, கீழே உள்ள மந்த்ரத்தை சொல்லிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீரை தட்டில் ஊற்ற வேண்டும்.

ஸாதனையில் வஸ்து குறிப்பிட்டு சொல்லியிருந்தால் உதாரணத்திற்கு நீருடன் சந்தனம் கலந்து அல்லது பூக்கள் கலந்து அல்லது கபாலம் நிரம்பிய ரத்தத்தை அர்க்யம் கொடுக்க வேண்டுமென்றால் அப்படியே ஸாதனையில் சொல்லப்பட்டபடி செய்யவும்.
 
அர்க்ய மந்த்ரம் :
ஓம் "_________" அர்க்யம் ப்ரதீச்ச ப்ரதீச்ச அபய ஸமயம் அனுஸ்மர திஷ்ட ஸ்வாஹா.

உச்சரிப்பு பொருள் : ஓம் "_________" அர்க்ghயம் ப்ரதீச்cசcha ப்ரதீச்cசcha அபய - அர்க்யம் ஏற்றுக் கொள் ஏற்றுக் கொள் பெற்றுக் கொள், ஸsaமயம் அனுஸ்sமர - சமய உடன்படிக்கைப்படி, திஷ்ṣடtha - இரு, ஸ்sவாஹா.

"_________" என்ற இடத்தில் ஆவாகணம் செய்யப்பட்டு ஸாதகர் முன் தோன்றியிருக்கும் தெய்வத்தின் பெயரை வைத்து மந்த்ரம் சொல்ல வேண்டும்.

மந்த்ரம் சொல்லாமல் அர்க்யம் கொடுத்தால் தெய்வம் அந்த அர்க்யத்தை ஏற்றுக் கொள்ளாது. அதே போல் தான் தூபதீபம், படையல், நைவேத்யம், புஷ்பம், பலி கொடுக்கும் பொதும் மந்த்ரம் சொல்லாவிட்டால் தெய்வம் ஏற்றுக் கொள்ளாது.

ஸாதனையின் போது இந்த மந்த்ரம் நினைவுக்கு வராவிட்டால் தமிழிலும் இந்த மந்த்ரத்தை சொல்லலாம்.
 
• எந்த முத்திரை காட்டுவது, தூபதீபம் காட்டும் போது சொல்ல வேண்டிய மந்த்ரத்தை பற்றி வேறு ஒரு பதிவில் பார்ப்போம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக