காத்யாயனீ முத்திரைகள்
1. ஸுரகாத்யாயனீ முத்திரை.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
அந்த இரு முஷ்டி இணைக்கவும்.
ஒரு கையை மற்றொரு கைவிரல்களாலும் மறு கையை மற்ற கை விரல்களாலும் மூடிக் கொள்ளவும்.
இரு ஆள்காட்டிவிரல்களையும் விரிக்கவும்.
ஆள்காட்டிவிரல்களை ஒன்றோடோன்று தொடவும்.
இது ஒரு உபயோகமுள்ள முத்திரை. உடலில், மந்திரத்தில், மனிதன் உறுதியான ஸித்தியை அடைவான். பூதினீயை நோக்கி, க்ரோத மந்த்ரத்தை ஆயிரம் தடவை ஜபித்துக் கொண்டு, இந்த முத்திரையை செய்தால், பூதினீ வசியமாகும். ஹோமம் செய்ய, ஸாதகருக்கு பூதினீ ஆவாஹனமாகும். இதில் எந்தொரு சந்தேகமில்லை. ஸுரகாத்யாயனீ முத்திரையுடன், நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் மந்த்ரம் ஜபம் செய்ய. இம் முத்திரையானது ஸாதகருக்கு செல்வத்தை கொடுக்கும். மற்ற வழிகளால் ஒருபோதும் அடைய முடியாத விஷயங்களைக் கூட கொடுக்கும்.
2. காத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டிவிரலை விரித்து ஒன்றோடோன்று தொடவும்.
இந்த முத்திரையால், பூதினீயானவள் எல்லா ஸித்திகளையும் தருவாள்.
3. குலபூதேச்வரீ முத்திரை.
மேலே சொன்ன காத்யாயனீ முத்திரையில் மாற்றங்கள் செய்யப்பட்டவையாகும்.
நடுவிரல்களின் நுனியைத் தொடவும்.
சின்னவிரல்களை இணைக்கவும்.
இந்த முத்திரையானது பூதினீகுல முத்திரையாகும்.
எனவே ஒரு முறை செய்தாலே பூதினீ அடுத்த கணமே ஸித்தியை தருவாள்.
4. பத்ரகாத்யாயனீ முத்திரை.
இரு கைகளிலும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டிவிரலை விரிக்கவும்.
இந்த முத்திரை ஸாதகர் ஆசைப்பட் ஸித்திகளை கொடுக்கும். செல்வத்தை தரும்.
5. குலகாத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
ஆள்காட்டி விரல்களை தொடவும்.
பூதினீ ரக்ஷணக்ஷனா முன்பு சண்ட என்று அழைக்கப்பட்டாள். வெற்றி, செல்வம் தரும். குலம், கோத்திரத்தை பாதுகாக்கும். எல்லா பூதத்திற்கும் பயத்தை உண்டாக்கக் கூடியது.
6. சுபகாத்யாயனீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
சின்னவிரல்களால் இரு உள்ளங்கைகளையும் தொடவும்.
ஆள்காட்டிவிரலை விரித்து தனியாக வைத்திருக்கவும்.
மோதிரம் போன்று வளையமாக செய்யவும்.
இதன் பின் குண்டலக்ர்ரிதீ முத்திரை செய்யவும். மூன்று உலகத்தையும் ஆகர்ஷணம் செய்யக் கூடியது. பிறக்காதவர்களால் கடைப்பிடிக்கப்படுகிற முத்திரை. வேறு என்ன இருக்க முடியும், பரிபூரணத்திற்கும் மகிழ்ச்சிக்கும்? இந்த முத்திரையை வஜ்ரா வைத்திருக்கும் ஸுபகாத்யாயனீ முத்திரை என்று அழைக்கப்படுகிறது. கந்தம், மலர்கள், மீன், இறைச்சி பூதினீக்கு உபசரித்து இந்த முத்திரையை காட்ட, உடனே சௌபாக்கியம் ஸித்தியை தருவாள்.
• பூbhūதினீ - பொதுச் சொல், பெண் தெய்வம். இன்னுமொரு அர்த்தம் பூதகுலத்தில் பிறந்த பெண்கள்.
• பூbhūதம் - பொதுச் சொல், கடவுள். இன்னுமொரு அர்த்தம் பூதகுலத்தில் பிறந்த ஆண்கள்.
• பிறக்காதவர்கள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்.
• உச்சரிப்பு - ஸுsuரகாத்யாயனீ, குலபூbhūதேச்śவரீ, பbhaத்dரகாத்யாயனீ, ரக்ஷkṣaணக்ஷkṣaனா, சcaண்ட, ஸுsuபகாத்யாயனீ.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக