குறி சொல்ல மந்திரம்

குறி சொல்ல கர்ண பிசாசினீ மந்த்ரம்

" ஓம் ஹ்ரீம் கர்ணபிசாசினீ கர்ணே மே கதய ஸ்வாஹா " சுடுகாட்டுக்கு இரவு போய், குங்கிலியதூபம் போட்டபடி நாளொன்றுக்கு ஆயிரம் மந்த்ரம் விகிதம் பத்து நாட்கள் ஜபித்து. பதினொன்றாவது நாள் உதாரபலி கொடுத்து, பிபீதக மரக் குச்சிகளை வைத்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய, இந்த மந்த்ரத்தில் ஸித்தி கிடைக்கும். இதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த கர்ணபிசாசினீ அன்றிலிருந்து ஸாதகரின் காதில் ரகசியம் பேசுவாள். பிறர் மனதில் உள்ள கருத்துக்கள், இறந்த, நிகழ், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்கள் பற்றிய செய்திகளை ஸாதகரின் காதில் சொல்லுவாள்.

• பிbiபீbhīதக - தான்றி மரம். அதே போல் பகல் அல்லது இரவு நேரங்களில் பbaதdaரி மரம் - இலந்தை மரத்தடிக்கு சென்று தேர்ச்சி பெறலாம். அதாவது இந்த மந்த்ரத்தை ஜபம் செய்யலாம்.
• இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்ததன் மூலம் தான் தமிழ்நாட்டில் பலருடைய பிழைப்பே ஓடுது. இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்தவர் முன் பின் தெரியாதவரி
ன் பெயரை சொல்லலாம். அவரின் வீடு அதன் சுற்றுச் சூழல் எப்படியிருக்குமென்று கூறலாம், தொலைவில்/ வெளிநாட்டிலுள்ளவருக்கு தொலைபேசி மூலமே முக்காலம் கூறலாம். முக்காலம் மட்டுமல்ல, வரலாற்று சான்றுகளை அறியலாம், கொலை களவு நடந்த இடத்திற்கு சென்று அவை எப்படி நடந்தது என்று கூறலாம், எதிரி நாட்டு ராணுவ பதுங்கு குழிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பிடத்தையும் சரியாக சொல்லலாம்.

இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்தவர்கள் ஜோதிடம், நாடிஜோதிடம், பிரசன்னம், முகத்தைப் பார்த்து சொல்லுதல், காண்டம் சொல்லுதல், ஏட்டை வைத்து ஏட்டில் எழுத்துக்கள் ஒடுகின்றன, ஆவியுடன் கதைப்பது, மூன்றாம் கண் திறந்து விட்டதாகவும் சொல்வர். மேற் சொன்ன போர்வையிலே வெளி உலகத்திற்கு காட்டிக் கொள்வர். நடக்க போவதை நாட்காட்டியாக (கலண்டர்) வெளியிடுபவர்கள் எல்லோருமே கர்ண பிசாசினீயை வைத்தே எல்லாம் செய்கிறார்கள்.

• தமிழ்நாட்டில் மட்டுமல்ல சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்ற சிறு சிறு, ஆசிய பக்கமுள்ள நாடுகளிலும் இந்த குறி சொல்லும் விதம் பிரபலமாகும். அங்கு அனேகமாக பெண்களே ஈடுபடுகின்றனர்.
• இந்த மந்திரத்துக்கு ஷடங்க ந்யாஸ - 1, 1, 6, 3, 3, 2.
• படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், வழமையான படையல். எரிபொருள் - நெய். விறகு - தான்றி மரக் குச்சிகள். குந்து - யோனிக் குந்து.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
மாதம் - பங்குனி, சித்திரை. திதி - பௌர்னமி இரவு. கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• உச்சரிப்பு, பொருள்: ஓம் ஹ்ரீம் கர்ணபிசாśāசிciனீ, கர்ணே மே கதthaய - என் காதில் கதை, ஸ்sவாஹா
• கர்ண பிசாசினீ : கர்ண - காது, காது பிசாசினீ என்று பொருள். அதாவது காதுக்கருகில் முக்காலம் சொல்லுபவள். இவள் ஒரு பிசாசினீ. பிசாச குலத்தை சேர்ந்தவள்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• கர்ண பிசாசினீயை ஒருவர் தன் முன்னே அழைத்து, அவளை வேலைக்காரீயாக, அடிமை போல் எப்படி வைத்திருப்பது என்ற ஸாதனையை பார்க்க இங்கே தட்டவும் 1. தட்டவும் 2.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக