ஸ்வப்னேச்வரீ மந்த்ரம். அவளுடன் கனவில் உரையாட
" ஓம் ஸ்ரீம் ஸ்வப்னேச்வரீ காரியம் மே வத ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் மந்த்ரம் ஜபம் செய்து, பத்தாயிரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இரவு மான் தோலின் மேல் தர்பை புள்ளை சிதறடிக்கப்பட்டது போல் போட்டு, அவள் முன் இருப்பதாக ஒப்பனை செய்து கொண்டு மந்த்ரம் ஜபித்து. ஸாதகர் தன் விருப்பமான ஆசைகளை அவளிடம் கூறிவிட்டு அதன் மேல் படுத்து உறங்க நிச்சயமாக அவள் ஸாதகரின் கனவில் வந்து பேசுவாள்.
• அவளின் உருவம்: இடது கையில் வரம், தாமரைப் பூ வைத்திருப்பாள் வலது கையில் அபய முத்திரை, தாமரைப் பூ. தங்க சிம்மாசனத்திலிருப்பாள். ஸ்வப்னேச்வரீ - கனவின் ஈச்வரீ.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
மாதம் - தை, மாசி, பங்குனி (சிறந்தது), சித்திரை (சிறந்தது). நக்ஷத்திரம் - பூஷ்ய. திதி வளர்பிறையில் இருக்க வேண்டும். கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஸ்ரீśrīம் ஸ்sவப்னேச்śவரீ காரியம் மே வதda - காரியம் எனக்கு சொல், ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக