சுபகாத்யாயனீ ஸாதன

சுபகாத்யாயனீ ஸாதன

ஒரு கோயிலின் கதவு அருகில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, உதாரபலி கொடுத்து. நாள் ஒன்றிற்கு 1428 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஏளு நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய சுபகாத்யாயனீ ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, ரத்தம் நிரம்பிய கபாலத்தில் அர்க்யம் கொடுக்க அவள்  " என்ன உனக்கு நான் செய் வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகிய வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் அன்றிலிருந்து ஸாதகருக்கு வேலைக்காரீயாகி ஸாதகர் செல்லும் வேலைகளை பணிவோடு செய்வாள். அவள் ஸாதகருக்கு ஒவ்வொரு நாளும் ஐந்து பொற்காசுகளும், ஸாதகர் விருப்பப்படும் உணவு வகைகளையும் கொடுப்பாள். ஸாதகர் 105 வருடங்கள் வாழ்வான்.

சுபகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் சுபகாத்யாயனீ மாத்ர்ரீ ப்ராத்ர்ரீ மாபீதகினீ கடு கடு ஜய ஜய ஸர்வாஸூரப்ரேதபூஜ்தே ஆகச்ச ஓம் ஹுஆஃ ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் சுபகாத்யாயனீ, மாத்ர்ரீ - தாய், ப்ராத்ர்ரீ - தங்கை மகள், மாபீதகினீ - ஒரு ருத்ராக்ஷ கொட்டை அணிந்திருப்பவளே, கடு கடு - உடனே உடனே, ஜய ஜய - வெற்றி வெற்றி ஸர்வ +அஸூர +ப்ரேத +பூஜ்தே - அசுர ப்ரேதர்களால் பூஜிக்கப்படுபவளே, ஆகச்ச - வா ஓம் ஹுஆஃ ஸ்வாஹா

உச்சரிப்பு :
ஓம் சுśuபbhaகாத்யாயனீ மாத்ர்ரீ ப்bhராத்ர்ரீ மாபீbhīதdaகிgiனீ கடு கடு ஜய ஜய ஸர்வாஸூரப்ரேதபூஜ்தே ஆகgaச்cசcha ஓம் ஹுஆஃ ஸ்வாஹா  .

மேலும் குறிப்புகள்  :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• சுபகாத்யாயனீ முத்திரை -
• ப்ரேத - இங்கு ப்ரேத என்பது ப்ரேத குலத்தை சேர்ந்தவர்கள்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும். 

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக