யக்ஷிணீ முத்திரைகள்
1. க்ரோதாங்குசி முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
சின்னவிலை இணைக்கவும்.
ஆள்காட்டிவிரலை பிறம்பாக விரிக்கவும்.
இந்த முத்திரை மூலம் த்ரிலோகத்திலிருந்து அன்பை பெற்றுக் கொள்ளலாம்.
2. யக்ஷிணீ முத்திரை.
இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையொன்று பார்த்தபடி இருக்குமாறு வைக்கவும்.
நடுவிரலை, மோதிரவிரலின் மேல் சாய்வாக வைக்கவும்.
ஆள்காட்டிவிரலால் சின்னவிரலைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவைகள் இரண்டும் நீட்டி இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
பெருவிரலால் அவளை வரவேற்கவும்.
" ஓம் ஹ்ரீம் ஆகச்ச ஆகச்ச "____" ஸ்வாஹா "
"____" இந்த இடத்தில் வரவேற்கப்படும் யக்ஷிணீயின் பெயர்.
முத்திரையை காட்டிக் கொண்டு இந்த மந்த்ரத்தை சொல்ல வேண்டும்.
3. ஸம்முககரணீ முத்திரை. அவளை முன்னால் கொண்டு வாரும் முத்திரை.
இரு கைகளிளும் பிறம்பாக முஷ்டி செய்யவும்.
நடுவிரலை விரிக்கவும்.
" ஓம் மஹாயக்ஷிணீ மைத்துனப்ரியே ஸ்வாஹா ". அவள் அருகில் வருவாள்.
முத்திரையை காட்டிக்கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
4. ஸானித்யகாரிணீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
சிறுவிரல்கள் இரண்டையும் விரிக்கவும். ஒன்றோடோன்று இணைக்கவும்.
" ஓம் காமபோகேச்வரீ ஸ்வாஹா "
முத்திரையை காட்டிக்கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
5. அரவணைக்கும் முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
அந்த முஷ்டியை இதயத்தில் வைத்துக் கொண்டு கீழுள்ள மந்த்ரத்தை ஜபிக்கவும்.
" ஓம் ஹ்ரீம் ஹ்ர்ரிதயாய நமஃ "
மூன்று உலகத்தையும் அரவணைக்கும் முத்திரை.
6. ப்ரமுகீ முத்திரை.
இரு கைவிரல்களையும் ஒன்றோடோன்று இணைத்து முஷ்டி செய்யவும்.
நடு, ஆள்காட்டிவிரல்களை விரிக்கவும்.
பஞ்சோரசாரம் செய்யவும்.
" ஓம் ஸர்வமனோகரணீ ஸ்வாஹா "
முத்திரையை காட்டிக் கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
• பஞ்சோரசாரம் (ஜந்து உபசரிப்பு) : கந்தம் - சந்தன பசை, குங்குமம், மஞ்சள்; தூபம் - குங்கிலியத்தில் காட்டவும்; தீபம் - நெய் தீபம் காட்டவும்; புஷ்பம் - மலர்களை அவளின் காலடியில் தூவவும்; நைவேத்தியம் நீருடன் - சமைத்த உணவு, பழங்கள், பால், இனிப்பானவை, தண்ணீர்.
• க்ரோதாங்குசி - க்ரோத அங்குசம். இந்த முத்திரையை ஸாதனை தொடங்கும் முன் காட்டலாம்.
• ஸம்முககரணீ முத்திரை, ஸானித்யகாரிணீ முத்திரை, அரவணைக்கும் முத்திரை - எந்த ஸாதகர் யக்ஷிணீயை, ஸாதனைப் பிரகாரம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறானோ அவனுக்கு மட்டுமே.
• இந்த மந்த்ரங்களை தமிழிலும் விரும்பினால் சொல்லலாம். மேலும் முதல் முத்திரையை தவிர மற்ற எல்லா முத்திரைகளும் மந்த்ரங்களும், ஸாதகர் முன் யக்ஷிணீ தோன்றிய பின்னரே காட்டப்படுவதாகும், சொல்லப்படுவதாகும். சிலவேளைகளில் அரிதாக, ஒரு சில பெண் தெய்வங்கள் இருக்கின்றன, அவளுடைய உச்ச கமா அரிப்பின் காரணமாக, ஸாதகருக்கு பின்னாலோ அல்லது முன்னாலோ வந்தவுடனே, கட்டித் தழுவி முத்தம் கொடுத்து போகங்கொள்ள தொடங்கி விடுவாள்.
• உச்சரிப்பு, பொருள் - " ஓம் ஹ்ரீம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ____ ஸ்sவாஹா " ஓம் ஹ்ரீம் வா வா ____ ஸ்sவாஹா. " ஓம் மஹாயக்ஷிkṣiணீ மைத்துthuனப்ரியே ஸ்sவாஹா " ஓம் மஹாயக்ஷிணீ உடலுறவில் பிரியமானவளே ஸ்sவாஹா. ஸsaம்முகkhaகரணீ. ஸாsāனித்dhயகாரிணீ. பஞ்சோśoரசாcāர. " ஓம் காமபோbhoகேgeச்śவரீ ஸ்sவாஹா ". " ஓம் ஹ்ரீம் ஹ்ர்ரிதdaயாய நமஃ ". " ஓம் ஸsaர்வமனோகரணீ ஸ்sவாஹா ". கgaந்தdhaம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக