கணபதி மந்த்ரங்கள்
1) 6 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" வக்ரதுண்டாய ஹும் " ஷடங்க ந்யாஸ செய்து. ஒரு சதுர்த்தியிலிருந்து மறு சதுர்த்திவரை ஆறு லட்சம் ஜபம் செய்து. கற்கண்டு, வறுத்த மா, வாழைப்பழங்கள், அவல், இஞ்சி விதைகள், இனிப்பான இறைச்சி, தேங்காய், வறுத்த தானியங்கள் இவை எட்டும் ஆஹுதியாக போட்டு 60 ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய, எல்லா துன்பங்கள் நீங்கும். ஏழ்மை முற்றிலும் விலகும்.
உணவை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்ய செல்வமுண்டாகும்.
மேலே சொன்ன எட்டு பொருட்களுடன் சீரகம், வெள்ளை குங்கிலியம், மிளகு இவைகளை ஆஹுதியாக போட்டு, ஹோமம் செய்ய இரண்டு வாரத்தில் ஸாதகர் குபேரனாவான்.
ஒவ்வொரு நாளும் 444 தர்பணம் செய்ய ஒரு மண்டலத்தில் ஸாதகருக்கு என்னென்ன ஆசைகளிருக்கோ அவைகளை அடைவான்.
2) 31 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ராயஸ்போஷஸ்ய ததிதா நிதிதோ ரத்னதாதுமான் ரக்ஷோஹணோ பலகஹனோ வக்ரதுண்டாய ஹும் " 5, 3, 8, 4, 5, 6. ஷடங்க ந்யாஸ செய்து. லட்சம் ஜபித்து, மேலே சொன்ன எட்டு பொருட்களுடன் சீரகம், வெள்ளை குங்கிலியம், மிளகு இவைகளை ஆஹுதியாக போட்ட வண்ணம், பத்தாயிரம் ஹோமம் செய்ய, புதையல் கிடைக்கும். செல்வமதிகரிக்கும்.
3) 6 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" மேதோல்காய ஸ்வாஹா " ஷடங்க ந்யாஸ செய்து. லட்சம் ஜபித்து, மேலே சொன்ன எட்டு பொருட்களுடன் சீரகம், வெள்ளை குங்கிலியம், மிளகு இவைகளை ஆஹுதியாக போட்ட வண்ணம், பத்தாயிரம் ஹோமம் செய்ய, விருப்பங்கள் நிறைவேறும்.
4) 9 எழுத்துக்களை கொண்ட உச்சிஷ்ட கணபதி மந்த்ரம்.
" ஹஸ்தி பிசாசிலிகே ஸ்வாஹா " 2, 3, 2, 2, 2. பஞ்சாங்க ந்யாஸ செய்து. ஒரு லட்சம் ஜபித்து, இஞ்சி விதை ஆஹுதியாக போட்ட வண்ணம், பத்தாயிரம் ஹோமம் செய்ய, ஸித்தி கிடைக்கும்.
சிகப்பு சந்தன மரக் கட்டை அல்லது வெள்ளெருக்கு மரக் கட்டையில் ஸாதகர் தன்னுடை பெருவிரல் அளவு கணபதியின் உருவம் செய்து. அதை தேனில் குளிப்பாட்டி. சாப்பிட பின் வாயை கழுவாமல் இருந்து கொண்டு. சதுர்த்தி தேய்பிறையிலிருந்து சதுர்த்தி வளர்பிறை வரை பாயாசம், மதுர நைவேத்தியமாக வைத்து ஒரு லட்சம் மந்த்ரம் ஜபம் செய்து. இஞ்சி விதையை போட்ட வண்ணம் பத்தாயிரம் ஹோமம் செய்ய, ஸாதகர் அரச குலத்தில் பிறந்தானோ இல்லையோ கண்டிப்பாக இரு வாரத்துக்குள் ராஜ்யம் கிடைக்கும்.
சிலையின் உருவம் - களிமண்ணில் செய்தால் ராஜ்யம் கிடைக்கும்.
எறும்பு புற்று மண்ணில் செய்தால் லாபங்களுண்டாகும், ஆசைகள் நிறைவேறும்.
மதுதூலி, மதுர கொண்டு செய்தால் சகல சௌபாக்கிங்களும் கிடைக்கும்.
உப்பு கொண்டு செய்தால் எதிரி வசியமாவான்.
வேப்ப மரத்தினால் செய்தால் எதிரி அழிந்து போவான்.
வறுத்த தானியங்கள் தேன் கொண்டு செய்தால் மூன்று லோகமும் வசியமாகும்.
சாப்பிட்ட பின் தன் வாயை கழுவாமல் படுக்கையில் படுத்த வண்ணம் மந்த்ரத்தை ஜபம் செய்து கருத்த கடுகின் பூக்களை, கடுகு எண்ணெயில் தோய்த்து ஹோமம் செய்ய எல்லா எதிரிகளும் வித்வேஷணமாவர்.
சூது, பந்தயம், விவாதம், சண்டையின் போது மந்த்ரத்தை ஜபிக்க வெற்றியுண்டாகும்.
ஸாதகர் சிகப்பு நிற உடையணிந்து சிவப்பு, சந்தனம் திலகமிட்டு வெற்றிலையை மென்று கொண்டு அல்லது இறைச்சி கறியிலுள்ள இறைச்சியை மென்று கொண்டு மந்த்ரத்தை ஜபித்து. இறைச்சி கறி, பழங்கள், வெற்றிலை நைவேத்தியமாக வைத்து. பலி கொடுக்க மந்த்ரம். பலி மந்த்ரம்: "கம் ஹம் க்லௌம் க்லௌம் உச்சிஷ்ட கணேசாய மஹாயக்ஷாயாயம் பலிஃ".
5) 11 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ஓம் கம் ஹஸ்தி பிசாசிலிகே ஸ்sவாஹா " 2, 3, 2, 2, 2. பஞ்சங்க ந்யாஸ.
6) 19 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ஓம் நமோ உச்சிஷ்ட கணேசாய ஹஸ்தி பிசாசிலிகே ஸ்வாஹா " 3 7 2 3 2 2. ஷடங்க ந்யாஸ.
7) 37 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
"ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்டமஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா " 7, 10, 5, 7, 4, 4. ஷடங்க ந்யாஸ செய்து. கணபதி அவனுடைய நிர்வாணமாக இருக்கும் சக்தியை புணர்ந்து கொண்டு இருப்பது போன்று தியானம் செய்து. ஒரு லட்சம் மந்த்ரம் ஜபித்து, பத்தாயிரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும்.
எட்டாம் திதி தேய்பிறையிலிருந்து பதின்நான்கம் திதி தேய்பிறை வரை 8500 மந்த்ரம் ஜபம் செய்து. 850 மந்த்ரம் ஹோமம் செய்து. தர்பணம் செய்ய செல்வம், தானியங்கள், மனைவிகள், மகள்கள், மகன்கள், பேத்தி, பேரன், சகல சௌபாக்கியம், இணையற்ற மதிப்பும் கிடைக்கும்.
வேப்பமர கட்டையில் உருவம் செய்து ப்ராணப்ரதிஷ்டை செய்து. மந்திரத்தை ஜபம் செய்ய, தெய்வம் ஸாதகருக்கு அடிமை போல் ஸாதகரின் கட்டுப்பாட்டில் வரும்.
ஆற்றில் கொஞ்ச தண்ணீரெடுத்து அதற்கு இருபத்தியேழு தடவை ஜபித்து அதில் முகத்தை கழுவி நீதிமன்றத்துக்கு செல்ல ஸாதகரை பார்ப்பவர்களெல்லாம் அடுத்த கனமே வசியமாவர்.
அரசனை வசியம் செய்ய, ஸாதகர் 4000 ஊமத்தை பூவால் ஹோமம் செய்ய வேண்டும்.
ஸாதகர் பெண்ணின் இடது காலடி மண்ணை எடுத்து கணபதியின் சிலைக்கு கீழ் வைத்து. அந்த பெண்ணை தியானம் செய்தபடி மந்த்ரத்தை ஜபிக்க அவள் ஸாதகரிடம் வருவாள், அதி தூரத்திலிருந்தாலும் கூட.
உருவ சிலையை வெள்ளெருக்கு அல்லது வேம்பில் செய்து. ப்ராணப்ரதிஷ்டை செய்து. சிகப்பு பூக்கள் சந்தனத்தால் சதுர்த்தியில் வழிபட்டு. அன்று இரவு ஆயிரம் தடவை மந்த்ரம் ஜபம் செய்து, ஆற்றங்கரையில் வீசி எறிய கணபதி கனவில் வந்து ஸாதகரின் ஆசைபட்ட பொருட்களை எப்படி அடைவது என்று கூறுவான்.
வேப்பங்குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய, எதிரிகள் உச்சாடனமாவர்.
வஜ்ரிகுச்சிளை வைத்து ஹோமம் செய்ய, எதிரி யமலோகம் போவான்.
குரங்கு எழும்புத் துண்டை எடுத்து மந்த்ரீத்து எதிரி வீட்டில் போட உச்சாடனமுண்டாகும்.
மனித எழும்புத் துண்டை எடுத்து மந்த்ரீத்து பெண் வாழும் வீட்டில் போட, ஸாதகர் அவளை அடைவான்.
களிமண், பெண்ணின் இடது காலடி மண்ணையுமெடுத்து சிலை செய்து பெண்ணின் பெயரை சிலையின் நெஞ்சில் எழுதி. வேப்பங்குச்சியையும் சிலையையும் மந்த்ரீத்து. வேப்பங்குச்சியையும், சிலையையும் நிலத்தில் புதைத்து வைக்க. அந்த பெண் பைத்தியமயவாள். இந்த இரண்டையும் வெளியே எடுக்க பைத்தியம் அகலும்.
மேற் சொன்னதை வெள்ளைப்பூண்டை எடுத்து செய்ய எதிரி பைத்தியமாவான்.
சிலையை தட்டில் வைத்து எதிரி வீட்டில், வாயிற் கதவு உள்ள இடத்தில் புதைத்து வைக்க எதிரி உச்சாடனமாவன்.
உருவ சிலை வெள்ளெருக்கு அல்லது வேம்பில் செய்து. சிகப்பு பூக்கள் சந்தனத்தால் அலங்கரித்து. மது நிறம்பிய சிறு பானையை எடுத்து அதன் மேல் சிலையை வைத்து இரண்டையும் குழி தோண்டி புதைத்து, அதன் மேலிருந்து கொண்டு பகல் இரவாக ஜபம் செய்ய, சிரமங்கள் சகலதும் ஒரு கிழமைக்குள் நீங்கும். எல்லா எதிரிகளும் வசமாவார்கள். செல்வமதிகரிக்கும், சொத்துக் கூடும்.
அடங்காத பெண்ணைவசியம் செய்தல் - அந்த பெண்ணின் இடது காலடி மண்ணை எடுத்து, அதை ஸாதகர் தன் மூத்திரம், உடலில் பல பாகங்களிலிருந்து ஊத்தையை எடுத்து, களிமண் எடுத்து இவைகளை கொண்டு சிலை செய்து. சிலையை மது உள்ள பானைக்குள் வைத்து மந்த்ரீத்து ஒரு கை அளவு (23cm) ஆழத்தில் புதைத்து. அதன் மேல் செவ்வளரி பூவை போட்ட வண்ணம் ஹோமம் செய்ய. ஸாதகருக்கு அப் பெண் அடிமையாவாள்.
8) 32 எழுத்துக்களை கொண்ட மந்த்ரம்.
" ஓம் ஹஸ்தி முகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் கே கே உச்சிஷ்ட ஸ்வாஹா " 6, 5, 7, 6, 6, 2. ஷடங்க ந்யாஸ செய்து. நான்கு லட்சம் ஜபம் செய்து. நாற்பதாயிரம் மந்த்ரம் மேற் சொன்ன எட்டு பொருட்களுடன், மோதகம், தேன் சேர்த்து ஆஹுதியாக போட்ட வண்ணம் ஹோமம் செய்து. தர்பணம் செய்ய ஸித்தி கிடைக்கும்.
சமைத்த உணவை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்ய ஒரு வருடத்துக்குள் ஏராளமான உணவு, தானியங்கள் கிடைக்கும்.
பாயாசம், தயர், கற்கண்டு ஆஹுதியக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய மகிமையும் அதிஷ்டமும் கிடைக்கும்.
வாழைப்பழம், தேங்காய், அவல் ஆஹுதியக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய செல்வம் கிடைக்கும்.
உப்பு, தேன், மோதகம் ஆஹுதியக போட்ட வண்ணம் ஹோமம் செய்ய ஆழகிகளின் மனதை கொள்ளை கொள்ளலாம். அரசனும் வசமாவான்.
9) 32 எழுத்துக்களை கொண்ட ஸர்வ ஜன வசிய மந்த்ரம்.
" ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதயே வரவர்த ஸர்வ ஜனம் மே வசமாணய ஸ்வாஹா " ஷடங்க ந்யாஸ செய்து. நான்கு லட்சம் ஜபம் செய்து. நாற்பதாயிரம் மந்த்ரம் வில்வமர குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.
மந்த்ரத்தில் "ஸர்வஜனம்" என்ற சொல்லை நீக்கி விட்டு 'த்ரிலோகம்" என்ற சொல்லை வைத்து, அசோக மர குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய மூன்று லோகமும் வசியமாகும்.
பாயாசம் ஆஹுதியாக போட்ட வண்ணம், செங்கருங்காலி குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய அரசன் வசமாவான். மதிப்பும், அதிஷ்டமும் கிடைக்கும்.
10) ஸர்வ ஜன வசிய மந்த்ரம்.
" வக்ரதுண்டாய தம்ஸ்த்ராய க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் கம் கணபதே வரவரத ஸர்வ ஜனம் மே வசமாணய ஸ்வாஹா " 12 4 5 4 6, 2. ஷடங்க ந்யாஸ. நான்கு லட்சம் மந்த்ரம் ஜபம் செய்து. கற்கண்டு, வறுத்த மா, வாழைப்பழங்கள், அவல், இஞ்சி விதைகள், இனிப்பான இறைச்சி, தேங்காய், வறுத்த தானியங்கள் இவை எட்டையும் போட்டுக் கொண்டு 4o ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.
தாமரை பூக்களை ஆஹுதியாக உபயோகித்து ஹோமம் செய்ய அரசனும் அவனுடைய மந்திரிகளும் வசமாவார்கள்.
அத்தி மரக் குச்சிகளை வைத்து ஹோமம் செய்ய அரசர்கள் வசமாவர்.
தேன் ஆஹுதியாக போட தங்கம் சேரும்.
பசும்பால் ஆஹுதியாக போட பசு சேரும்.
தயிர் ஆஹுதியாக போட செழிப்பு உண்டாகும்.
11) 32 எழுத்துக்களை கொண்ட ஜனங்களின் மனதை ஸ்தம்பனம் செய்யும் ஹரித்ராகணபதி மந்த்ரம்.
" ஓம் ஹூம் கம் க்லௌம் ஹரித்ராகணபதி வரவரத ஸர்வஜன ஹ்ர்ரிதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா " 4, 8, 5, 7, 6, 2. ஷடங்க ந்யாஸ. நாற்பதாயிரம் மந்த்ரம் ஜபம் செய்து மஞ்சளுடன் தானியங்கள் கலந்து 4 ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.
சதுர்த்தி வளர் பிறையில் ஒரு பெண்ணால் ஸாதருக்கு மஞ்சள் பூசப்பட்டு, பின்னர் குளித்துவிட்டு கணபதியை வழிபட்டு தர்பணம் செய்து 1008 மந்த்ரத்து ஜபம் செய்து. வறுத்த தானியங்கள், மோதகம், நெய் கொண்டு ஹோமம் செய்ய ஸாதகருக்கு நல்ல மனைவி அமைவாள். பெண்ணாயிருந்தால் நல்ல கணவன் அமைவான்.
இந்த மந்த்ரத்தில் முறையாக ஸித்தி பெற்றல் நீர், நெருப்பு, திருடர்கள், சிங்கம், ஆயுதங்கள், எதிரிகளின் வாய் ஸ்தம்பனமாகும்.
• உச்சிஷ்ட கணபதி - உச்சிஷ்ட: சாப்பிட்ட பின் வாய் கழுவாத என்று பொருள். தந்த்ர வழிபாட்டுக்குரிய தெய்வம். கோர வடிவம் (பயங்கர). மண்டையோடுகளின் மேலிருக்கிறான். உன்மத்த குணம் (பைத்தியக்காரனை போன்ற).
• பிள்ளையாரின் பெயர்கள் - விக்ghனேச - விடுதலையின் பட்டம், மேதோல்க - அறிவு/ஞானம் ஜோதி, லம்போதர - தொங்குகிற தொப்பை, ஏகதம்ஷ்ட்ர - ஒரு தந்தம், வக்ரதுண்ட - முறுக்கன துதிக்கை, விகட - உருக்குலைந்த, தூdhūம்ரவர்ண - சாம்பல் நிறம், கgaஜானன - யானை முகத்தான், வினாயக - (தடைகளை) நீக்குபவன், கgaணபதி - ஒரு குழுமத்தின் தலைவன், ஹஸ்திதdaந்த - பச்சை தந்தம், ஹரித்dராகணபதி - மஞ்சள்கணபதி.
• ஷடங்க ந்யாஸ மந்த்ரம்:
ஷடங்க ந்யாஸ என்றால் ஆறு அங்கங்களை தொடுதல். பஞ்சாங்க என்றால் ஜந்து அங்கங்களை தொடுதல் என்று பொருள். கீழேயுள்ள மந்த்ரங்களை சொல்லிக் கொண்டு அந்தந்த பாகங்களைத் தொடவும்.
ஓம் __ ஹ்ர்ரிதயாய ஸ்வாஹா. வலதுகை விரல்களால் நெஞ்சை தொடவும்.
ஓம் __ சிரஸே ஸ்வாஹா. வலதுகையால் இடது கையை தொடவும்.
ஓம் __ சிகாயை ஸ்வாஹா. வலதுகை விரல்களால் உச்சந்தலையை தொடவும்.
ஓம் __ கவசாய ஸ்வாஹா. இடதுகையால் வலதுதோள்பட்டை, வலதுகையால் இடதுதோள்பட்டை தொடவும்.
ஓம் __ நேத்ரநேத்ரயாய ஸ்வாஹா. வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை இடது நடுவிரலாலும் தொடவும்.
ஓம் __ அஸ்த்ராய பட். வலதுகை சுட்டுவிரல் நடுவிரலை இவை இரண்டையும் ஒன்று கூட்டி, இடது உள்ளங்கையில் "பட்" என்ற சத்தம் வரும் மாதிரி அடிக்கவும்.
ஷடங்க ந்யாஸ எப்படி செய்வது? உதாரணத்துக்கு 31 எழுத்துக்களை கொண்ட மந்த்ரத்தை எடுப்போம். 5, 3, 8, 4, 5, 6. ஷடங்க ந்யாஸ." ரா ய ஸ்போ ஷ ஸ்ய :- 5 த தி தா :- 3, நி தி தோ ர த்ன தா து மான் :- 8, ர க்ஷோ ஹ ணோ :- 4, ப ல க ஹ னோ :- 5, வ க்ர து ண்டா ய ஹும் :- 6 "
ஓம் ராயஸ்போஷஸ்ய ஹ்ர்ரிதயாய ஸ்வாஹா. வலதுகை விரல்களால் நெஞ்சை தொடவும்.
ஓம் ததிதா சிரஸே ஸ்வாஹா. வலதுகையால் இடது கையை தொடவும்.
ஓம் நிதிதோ ரத்னதாதுமான் சிகாயை ஸ்வாஹா. வலதுகை விரல்களால் உச்சந்தலையை தொடவும்.
ஓம் ரக்ஷோஹணோ கவசாய ஸ்வாஹா. இடதுகை - வலதுதோள்பட்டை, வலதுகை - இடதுதோள்பட்டை தொடவும்.
ஓம் பலகஹனோ நேத்ரநேத்ரயாய ஸ்வாஹா. வலது கண்ணை இடது சுட்டுவிரலாலும் இடது கண்ணை நடுவிரலாலும் தொடவும்.
ஓம் வக்ரதுண்டாய ஹும் அஸ்த்ராய பட். வலதுகை சுட்டுவிரல் நடுவிரலை இவை இரண்டையும் ஒன்று கூட்டி இடது உள்ளங்கையில் "பட்" என்று சத்தம் வரும் மாதிரி அடிக்கவும்.
உச்சரிப்பு: ஹ்ர்ரிதdaயாய, ஸ்sவாஹா, சிśiரஸேse, சிśiகாkhaயை, கவசாcaய, அஸ்sத்ராய, பphaட்.
• 31 எழுத்துக்களை கொண்ட மந்த்ரத்தின் பொருள்: செல்வத்தை தருபவனே புதையலை தருபவனே ரத்தினம் உலோகங்களை தருபவனே பாதுகாப்பவனே பலம் வாய்ந்தவனே வக்ரதுண்டாய ஹும்.
• ப்ராண ப்ரதிஷ்டை - புதிதாக நிறுவப்பட்ட சிலைக்கு உயிர் கொடுத்தல். இதற்கென்று குறிப்பிட்ட மந்த்ரமுண்டு.
• மதுர - சர்க்கரை சுத்திகரிக்கப்படும் பொழுது கிடைக்கப்படும் கெட்டியான பொருள்.
• மந்த்ர உச்சரிப்பு: "வக்ரதுண்டாḍāய ஹும்" "ராயஸ்sபோஷṣaஸ்sய தdaதிdiதா நிதிdhiதோdo ரத்னதாdhāதுமான் ரக்ஷோkṣoஹணோ பலகgaஹனோ வக்ரதுண்டாḍāய ஹும்" "மேதோdhoல்காய ஸ்sவாஹா" " ஹஸ்sதி பிசாśāசிciலிகேkhe ஸ்sவாஹா' "ஓம் கgaம் ஹஸ்sதி பிசாśāசிciலிகேkhe ஸ்sவாஹா" "ஓம் நமோ உச்cசிchiஷ்ṣட கgaணேசாśāய ஹஸ்sதி பிசாśāசிciலிகேkhe ஸ்sவாஹா" "ஓம் நமோ பகgaவதே ஏகதdaம்ஷ்ṣட்ராய ஹஸ்sதிமுகாkhaய லம்போboதdaராய உச்cசிchiஷ்ṣடமஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் கgaம் கேghe கேghe ஸ்sவாஹா" "ஓம் ஹஸ்sதி முகாkhaய லம்போboதdaராய உச்cசிchiஷ்ṣட மஹாதமனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹூம் கேghe கேghe உச்cசிchiஷ்ṣட ஸ்sவாஹா" "ஓம் ஸ்ரீśrīம் கgaம் ஸௌsauம்யாய கgaணபதயே வரவர்தda ஸsaர்வ ஜனம் மே வசśaமாணய ஸ்sவாஹா" "வக்ரதுண்டாḍāய தdaம்ஸ்sத்ராய க்லீம் ஹ்ரீம் ஸ்ரீśrīம் கgaம் கgaணபதே வரவரதda ஸsaர்வ ஜனம் மே வசśaமாணய ஸ்sவாஹா' "ஓம் ஹூம் கgaம் க்gலௌம் ஹரித்dராகgaணபதி வரவரதda ஸsaர்வஜன ஹ்ர்ரிதdaயம் ஸ்sதம்பbhaய ஸ்sதம்பbhaய ஸ்sவாஹா " "கgaம் ஹம் க்லௌம் க்gலௌம் உச்cசிchiஷ்kṣaட கgaணேசாśāய மஹாயக்ஷாkṣāயாயம் பbaலிஃ.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக