குங்கிலியம் சாம்பிராணி இவைகளின் வேறுபாடுகள்

குங்கிலியம் சாம்பிராணி இவைகளின் வேறுபாடுகள்

இவை இரண்டுமே நறுமணங்கொண்டவை. உள்ளத்தை கொள்ளை கொள்ளும், உற்சாகப்படுத்தும் வாசனை குங்கிலியத்திலிருக்கிறது.

எருமைகன் மரம் - இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் குங்கிலியம் எனப்படும். தாவரவியல் பெயர்: commiphora wightii. ஆங்கிலம்: myrrh tree. சமஸ்கிருதம்: guggula. குங்கிலியம் தெய்வத்திற்கு மிகவும் பிடித்த வசனைப் பொருளாகும். ஆவாகண ஸாதனையில் உபயோகிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த, ஒரு சிறப்பான வாசனை தரும் பொருளாகும்.

பறங்கி மரம் - இந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின் சாம்பிராணி எனப்படும். தாவரவியல் பெயர்: boswellia serrate. ஆங்கிலம்: frankincense. சமஸ்கிருதம்: kundara, śallakī.

குங்கிலியம் சாம்பிராணி இவை இரண்டையும் சம அளவாக எடுத்து சுத்தி செய்து, மாத்திரையாக 750mg இரண்டு தடவை நாள் ஒன்றிக்கு உள்ளுக்குள் சாப்பிட்டால் தோல், மூட்டுக்கு சிறந்தது. அழற்சியை குணப்படுத்தும், வீக்கத்தை நீக்குகிகும், வலியை குறைக்கும். இதே அளவுப்படி குங்கிலியத்தை மட்டும் மாத்திரையாக உட்கொண்டால் மேற் சொன்ன நன்மைகளுடன் தேகத்தில் நல்ல வாசம் வீசும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக