சண்டகாத்யாயனீ ஸாதன

சண்டகாத்யாயனீ ஸாதன

ஏகலிங்கமிருக்குமிடத்திற்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து.  8000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, மூன்று நாட்கள் பக்தியோடு ஜபம் செய்ய முதல் நாள் சலங்கை சத்தம் கேட்கும். இரண்டாாவது நாள் சண்டகாத்யாயனீ ஸாதகர் முன் தோன்றுவாள். ஆனால் கதைக்கமாட்டாள். மூன்றாவது நாள் தோன்றுவாள் தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க " சொல்லு உனக்கு என்ன வேண்டும் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர்  " ஓ தேவீ நீ எனக்கு வசமாகி என் வாழ்நாள் முழுக்க என்னை மிக சிறப்பாகவும் சாதகமாகவும் பார்த்து கொள் " என்று சொல்ல வேண்டும். அவள் அன்றிலிருந்து ஸாதகருக்கு செல்வம், விலையுயர்ந்த ரத்தினங்கள், திவ்யஸ்த்ரீகள், திவ்யகன்னிகள், ராஜகுமாரீகள், அவனுக்கு ஆசைப்பட்டதெல்லாம் கொடுப்பாள். ஸாதகர் அவளுடைய முதுகிலேறியிருக்க பெருங்கடல்கள் முழுவதும் மட்டுமின்றி மேரு மலையும் கொண்டு சென்று காட்டுவாள். அப்படியே குபேரனின் வீட்டுக்கு போய், செல்வமுள்ள தங்கம் அவனுக்கு தங்கத்தைத் தரும். அங்கிருந்து ஜம்பூத்வீப வடக்குக் கரையோரமாக போக ஆடம்பரமான சகல நகைகளுமணிந்த கன்னிகளை ஸாதகருக்கு தருவாள். 500 வருடங்கள் வாழ்வான். ஸாதகர் மறுபிறவியில் ஸாமந்தராஜகுலத்தில் பிறப்பான். 
 
சண்டகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் சண்டகாத்யாயனீ ருத்ரபயங்காரீ அட்டாஹாஸினீ ஸாதகப்ரியே மஹாவிசித்ரரூபகாரீ ஸ்வர்ணஹஸ்தே யமக்ர்ரிந்தனீ ஸர்வதுஃக் ப்ரசாமனீ ஓம் ஈம் ஹும் ஹும் ஹும் ஹும் சீக்ரம் ஸித்திம் மேம் ப்ரயச்ச ஹௌம் ஆஃ ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் சண்டகாத்யாயனீ, ருத்ரபயங்காரீ -அச்சமூட்டும் பயங்காரீ, அட்டாஹாஸினீ - உரத்து சிரிப்பவளே, ஸாதகப்ரியே - ஸாதகரிடம் பிரியமாக இருப்பவளே, மஹாவிசித்ரரூபகாரீ - மஹா அற்புதமான ரூபமுடையவளே, ஸ்வர்ணஹஸ்தே - தங்க கைகளுடையவளே, யமக்ர்ரிந்தனீ - யமனை அழிப்பவளே, ஸர்வதுஃக் ப்ரசாமனீ -ஸர்வ துக்கங்களையும் நிவர்த்தி செய்பவளே, ஓம் ஈம் ஹும் ஹும் ஹும் ஹும், சீக்ரம் ஸித்திம் மேம் ப்ரயச்ச - சீக்கிரம் ஸித்தியை எனக்கு தந்தருள்வாய்யாக, ஹௌம் ஆஃ ஸ்வாஹா

உச்சரிப்பு :
ஓம் சcaண்டḍaகாத்யாயனீ ருத்dரபbhaயங்காரீ அட்டாஹாஸிsiனீ ஸாsāதகப்ரியே மஹாவிசிciத்ரரூபகாரீ ஸ்sவர்ணஹஸ்தே யமக்ர்ரிந்தனீ ஸsaர்வதுduஃக்kh ப்ரசாśāமனீ ஓம் ஈம் ஹும் ஹும் ஹும் ஹும் சீśīக்ghரம் ஸிsiத்dhதிdhiம் மேம் ப்ரயச்cசcha ஹௌம் ஆஃ ஸ்sவாஹா

மேலும் குறிப்புகள்  :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - புதன், வியாழன், வெள்ளி.
 
• இந்த ஸாதனை மட்டுமல்ல எல்லா ஸாதனைகளும் உணர்த்துவது பெண்களுக்கும், ஆண்களுக்கும் வாழ்க்கையில் அதி முக்கியமானது செல்வமும், சுதந்திர போகமும் தான் என்று. தர்மமும் மோக்ஷமும் இதற்கு பின்னால் தான்.
• இது ஒரு சவாலான ஸாதனையாகும் ஏனென்றால் மூன்று நாட்களுக்குள் 8000 மந்த்ரம் ஜபம் செய்ய வேண்டும். எப்படி இதை செய்வது? 8000 மூன்றால் வகுத்தால் கிட்டத்தட்ட 2666 இதை பத்தால் வகுத்தால் 266. 266 ஹோமம் செய்ய வேண்டும். அதாவது
முதல்நாள் : செவ்வாய் முடிந்து, புதன் இரவு 12 மணியிலிருந்து 2666 மந்த்ரம் ஜபம் செய்து. 266 மந்த்ரம் ஹோமத்தை காலை 6 மணிக்குள் செய்யவும்.
இரண்டாம் நாள் : புதன் இரவு 8 மணியிலிருந்து 2666 மந்த்ரம் ஜபம் செய்து. 266 மந்த்ரம் ஹோமத்தை வியாழன் காலை 6 மணிக்குள் செய்யவும்.
மூன்றாம் நாள் பௌர்ணமியன்று : வியாழன் இரவு 8 மணியிலிருந்து 2666 மந்த்ரம் ஜபம் செய்து. 266 மந்த்ரம் ஹோமத்தை வெள்ளி காலை 6 மணிக்குள் செய்யவும்.
• ராஜகுமாரீகள் - ராணீகள்.
ஸாமந்தராஜகுலம் - ராஜகுலத்தில் பிறந்து தலைவனாவான்.
சண்டḍaகாத்யாயனீ பொருள் உக்கிரமான காத்யாயனீ.
• ஏகலிங்கம் தனிமையாக இருக்கும் லிங்கம்.
• சண்டகாத்யாயனீ முத்திரை -
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும். 

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக