மஹாகாத்யாயனீ ஸாதன

மஹாகாத்யாயனீ ஸாதன

சுடுகாட்டுக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, உதாரபலி கொடுத்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஏளு நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய மஹாகாத்யாயனீ ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, ரத்தம் நிரம்பிய கபாலத்தில் அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு நான் செய் வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர்  " நீ எனக்கு வசமாகிய தாயாக இரு, எனக்கு ராஜ்யம் தா என் ஆசைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய் " என்று சொல்ல வேண்டும். அவள் அன்றிலிருந்து ஸாதகருக்கு  தாயாகி, அவள் ஸாதகரை மகன் போல் அன்போடு பார்த்து கேட்பதையெல்லாம் அவனுக்கு கொடுப்பாள். செல்வத்தையும் அதிகாரத்தையும் ஆளுமையையும் வழங்குவாள். எதிரிகளுக்கு மஹாதரபதியாவான். ஸாதகர் 5000 வருங்கள் வாழ்வான். ஸாதகர் மறுபிறவியில் ராஜ குடும்பத்தில் பிறப்பான். மஹாகாத்யாயனீ வராவிட்டால் அவள் தலை காய்ந்து வெடித்து சிதறி யமலோகம் போவாள். அவளாலொரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்க முடியாது.

மஹாகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் மஹாகாத்யாயனீ ஆகர்ஷய ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச ஹும் ஜவாலா ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம் மஹாகாத்யாயனீ, ஆகர்ஷய ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஹும் ஜவாலா ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் மஹாகாத்யாயனீ ஆகர்ஷṣaய ஆகர்ஷṣaய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹும் ஜவாலா ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.


• மஹாதdhaரபதி - எதிரிகள் மிரண்டு போய் ஸாதகர் சொற்படி நடப்பர்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும். 


தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக