குண்டலகாத்யாயனீ ஸாதன

குண்டலகாத்யாயனீ ஸாதன

இரவு ஒரு பூந்தோட்டத்திற்கு சென்று யந்த்ரம் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1333 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, ஆறு நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்ய வேணடும். மூன்றாம் நாள் சலங்கையொலி சத்தம் கேட்கும். நான்காமைந்தாம் நாட்களில் அவளுடையயுருவம் ஸாதகர் கண்ணுக்கு தெரியும். ஆறாவது நாள் பொற்காசுகள் தருவாள். 7 வது நாள் ஸாதகர் வாசனை பொருட்கள், குங்கிலிய சகிதம் சிவன் கோயிலுக்கு போய் யந்த்ரம் வரைந்து பிரம்மாதமான படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய குண்டலகாத்யாயனீ திவ்ய கன்னி வடிவத்தில் ஸாதகர் முன் உடனே தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுத்து ஸாதகர் அவளுடன் ஸம்போகங்கொள்ள அன்பான மனைவியாவாள் அதிகாலை வரை ஸாதகரோடிருந்து ஸாதகரைவிட்டு விலகும் போது ஒரு முத்து மாலையை விட்டு செல்வாள். அதை ஸாதகர் எடுக்கக் கூடாது. 25 பொற்காசுகள், 2 அழகான உடையையும் தருவாள். அவன் எதிரிகளையும் அழித்தொழிப்பாள். ஸாதகர் 1000 வருடங்கள் வாழ்வான். ஸாதகர் மறுபிறவியில் ராஜகுடும்பத்தில் பிறப்பான். இதில் ஏந்த சந்தேகத்திற்குமிடமில்லை.

குண்டலகாத்யாயனீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹேமகுண்டலினீ தீர தீர ஜ்வல ஜ்வல திவ்ய மஹாகுண்டல விபூஷிதே வாரணமதினீ ஆகச்ச பகவனாஜ்ஞாபயஸி ஸ்வாஹா


மந்த்ரத்ததின் பொருள் :
ஒம் ஹேமகுண்டலினீ - காதில் தங்கத்திலான ஆபரணமணிந்திருப்பவளே, தீர தீர -ஆற்றல் ஆற்றல், ஜ்வல ஜ்வல - நெருப்பு நெருப்பு, திவ்ய மஹாகுண்டல - தெய்வீக மஹாகாதுஆபரணமே, விபூஷிதே - அலங்காரிக்கபட்டவளே, வாரணமதினீ - கூச்சமுடைய மதியே, ஆகச்ச - வா, பகவனாஜ்ஞாபயஸி - இது பகவான் கட்டளை, ஸ்வாஹா.  

உச்சரிப்பு :
ஒம் ஹேமகுண்டḍaலினீ தீdhīர தீdhīர ஜ்வல ஜ்வல திdiவ்ய மஹாகுண்டḍaல விபூbhūஷிṣiதே வாரணமதிthiனீ ஆகgaச்cசcha பbhaகgaவனாஜ்ஞாபயஸிsi ஸ்sவாஹா.   

மேலும் குறிப்புகள்  :
படையல் - பால், பழங்கள், தானியங்கள், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• குண்டḍaலகாத்யாயனீ பொருள் காதில் ஆழகான  ஆபரணமணிந்திருப்பவள்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக