மஞ்ஜுஸ்ரீ ஸாதன
ஸாதகர் இரவு தன்னுடன் ஸர்வதுஷ்டபந்த யந்த்ரத்துடன் ஒரு மலைக்கு சென்று. யந்த்ரம் வரைந்து. மஞ்ஜுஸ்ரீ ரூபம் துணியில் வரைந்து. திரிசூலம் வைத்து, அதற்கு ஒவ்வொரு நாளும் உணவு, பால் வைத்து. ஆறு லட்சம் மந்த்ரம், ஆறு மாதங்களுக்குள் ஜபம் செய்து. அதன்பின் பிரம்மாதமான படையல் வைத்து, உதாரபலி கொடுத்து, நைவேத்தியம் வைத்து, செங்கருங்காலி கட்டைகளை வைத்து ஹோமம் உண்டாக்கி. அத்தி மரகுச்சி, தயிர், தேன், விளா மரகுச்சி இவைகளை ஆஹுதியாக போட்டவண்ணம் 8000 மந்த்ரம் ஹோமம் செய்ய அஸுரீ மஹாக்ர்ரிஷ்ணமேகவதமண்தலீ தோன்றுவாள். ஸாதகர் அவளை கண்டு பயப்படக் கூடாது. தொடர்ந்து மந்த்ரத்தை சொல்லிக் கொண்டிருக்க வேணடும். அஸுரீ மறைந்து விடுவாள். அதை தொடர்ந்து பல அழகான பெண்கள் தோன்றுவார்கள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி; வாசனை, மல்லிகைப் பூ கலந்த நீரினால் அர்க்யம் கொடுத்து, மல்லிகைப் பூ கொடுத்து, படையளை அப் பெண்களுக்கு உபசரிக்க வேண்டும். அதன்பின் அந்த அழகிய பெண்களும் மறைந்து விடுவார்கள். ஸாதகர் மீதமுள்ள இரவை அதே மலையில் வேறு ஒரு இடத்திற்கு சென்று, மீதமுள்ள மந்த்ரத்தை ஹோமம் செய்ய வேண்டும். அதன்பின் கோபத்துடன், மதியம், மஞ்ஜுஸ்ரீ படம் வைத்து செங்கருங்காலி கட்டைகளை வைத்து, மூவேளைகள்; வெள்ளை பூ, தேன், தயிர் போட்ட வண்ணம் 8000 மந்த்ரம் ஹோமம் செய்ய, அர்த்ராத்திரி சமயம் மஞ்ஜுஸ்ரீ ஸாதகர் முன் தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி சிகப்பு சந்தனம் கலந்த நீரினால் அர்க்யம் கொடுக்க அவன் ஸாதருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்பான். அதற்கு ஸதகர் தன்விருப்பம் போல் பறத்தல், மறைதல், தன்விருப்பம் போல் தேவையானதை பெறுதல், நீண்ட ஆயுள், எதையும் தெரிந்து கொள்ளகூடிய அறிவு, பரமஇன்பம், ராஜ்யம், சகலசௌபாகியம், எந்த ஒரு தெய்வத்தையும் அடுத்த கணத்தில் ஆகர்ஷணம் செய்யக்கூடிய சக்தி, மஞ்ஜுஸ்ரீயுடன் உலவித் திரிதல். இந்த ஸித்திகளை கேட்க. இவையாவற்றையும் தந்துவிட்டு மறைந்து விடுவான்.
மஞ்ஜுஸ்ரீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் மஞ்ஜுஸ்ரீ குமாரபூதனே ஆகர்ஷய ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஹூம் பட் ஸ்வாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம் மஞ்ஜுஸ்ரீ குமாரபூதனே - குமரக்கடவுளே, ஆகர்ஷய ஆகர்ஷய -ஆகர்ஷணமாகு ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - ஸாதி, ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் மஞ்ஜுஸ்ரீśrī குமாரபூbhūதனே ஆகர்ஷṣaய ஆகர்ஷṣaய, ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸாsāதdhaய ஹூம் பphaட் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், தேன், தயிர், மல்லிகைபூ ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு, வளர்பிறை நவமி இரவு,தேய்பிறை சதுர்த்தி இரவு, தேய்பிறை அஷ்ட்மி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• மஹா க்ர்ரிஷ்ண மேகgha வாத மண்டலீ - மஹா கருப்பு மேக புயல் மண்டலக்காரீ. இவள் ஒரு அஸுரீ.
• ஸர்வ துஷ்ட பந்த யந்த்ர - கெட்டவைகளிடமிருந்து பாதுகப்பதற்கான யந்திரம்.
• யந்த்ரம் வரைந்து - வெள்ளை சந்தனத்தால் நிலத்தில் வரையும் மஞ்ஜுஸ்ரீயின் யந்த்ரம்.
• மஞ்ஜுஸ்ரீ - கந்தனின் சாந்தமான வடிவம் (முருகன்).
• மூவேளைகள் - காலை மதியம் மாலை.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக