முருகன்

முருகன்


முருகன் என்றால் அழகு என்று பொருள். இது ஒரு தமிழ் சொல்லாகும். ஒரு அதி சக்திவாய்ந்த கடவுளாகும். சிவனால் அசுரனை கொல்ல உண்டாக்கப்பட்ட கடவுள் - கந்தன். யுத்த கடவுள்.

நமது சமயத்தில் கிட்டத்தட்ட எல்லா கடவுள்களுமே பிரபஞ்ச கடவுள்கள், தேவலோகத்திலோ அல்லது வேறு லோகத்திலோ இருப்பவர்கள். அதனால முருகன் அந்த காலத்தில் காட்டுக்குள் வாழ்ந்ததாகவும் அவனுடைய தசைகள் முருக்கேறியதால் அவன் முருகன் என்று அழைக்கப்படுவதாகவும், என்று சொல்லப்படுவது முழுக்கமுழுக்க பொய்யாகும், தவறானதாகும். முருகன் ஒரு அதி சக்திவாய்ந்த தேவலோக கடவுளாகும்.

முருகனின் சாந்தமான வடிவங்கள் :
1. முருகன்
2. குமாரன் - பதினாறு வயது நிறம்பியன் என்று பொருள். தமிழில் குமரன்.
3. சுப்ரமணியன். 
4. கார்த்திகேயன். 
5. மஞ்ஜுஸ்ரீ - அழகுக்கு அழகு என்று பொருள்.
6. கார்த்திகேயமஞ்ஜுஸ்ரீ. 
7. சரவணபவ. 
வடிவம் : ஒரு தலை இருகைகள் வேல் வைத்திருக்கிறான்.

முருகனின் கோர வடிவம் :
ஸ்கந்த, தமிழில் கந்தன். 
அவன் வடிவம் : கோர (பயங்கர) வடிவம். ஷண்முக - ஆறு முகம், ஷத்புஜ - ஆறு கை, ஷட்சர - ஆறு கால். அறு கைகளிலும் ஆயுதங்கள் வைத்திருக்கிறான், நீண்ட கோரை பற்கள். ப்ரேதத்தின் மேல் நிற்கிறான், ரக்தாங்க - சிகப்பு அங்கமுடையவன், கந்தானுலேபனப்ரிய - வெள்ளைப்போளம் தன் மேல் பூசியிருக்க பிரியமுள்ளவன், ரக்தபுஷ் பார்சிதமூர்தி - சிகப்பு பூக்களால் அணியப்பட்ட மூர்த்தி.

ஸ்கந்தனுடைய கோர (பயங்கர) சிலையோ படமோ ஒரு இடத்திலுமில்லை. ஏனென்றால் ஒருவருக்கும் அவன் வடிவம் தெரியாது, இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.

கட்டுக் கதைகள் :
முருகன் சிவனின் மகன் என்பது உண்மையல்ல. அதோ போல் பிள்ளையாரும் மகனல்ல. இருவரும் சகோதரர்களுமல்ல.
ஞான பழக்கதை, இந்தக் கதை உண்டாக்கப்பட்டது. பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்களே உலகம் என்று காட்டுவதற்காக. ஆனால் பழம் கிடைக்காதல் முருகன் பொற்றோர்களுடன் கோபித்துக் கொண்டு போய் பழனி மலையில் நிற்கிறான். இந்தக் கதையின் மூலம் பிள்ளைககள் வீட்டைவிட்டு வெளியேற வழிவகுக்கும். இன்னுமொருகதையுண்டு பிள்ளையாருக்கு கலியாணம் செய்து வைக்க பெண் பார்த்தார்களாம், முருகன் தனக்கு பெண் பார்க்காததால் கோபித்துக் கொண்டு போய் வேறு ஒரு மலையில் நிற்கிறார். இக் கதையையியற்றிவர் மூத்த பிள்ளைக்கு தான் முதலில் கலியாணம் செய்து வைக்க வேண்டும் என்பதை காட்ட முற்படுகிறார். ஆனாலோ இந்தக் கதையின் மூலம் பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேற வழிவகுக்கும் என்பதை நினைக்கவில்லை. இந்த இரு கதைகளுமே நல்லதை சொல்லவில்லை. இந்த இரு கதைகளுமே கட்டுக் கதைகளாகும்.

ஆறு முகம் வந்தற்கு ஒரு கட்டுக் கதையுண்டு, கார்த்திகை பெண்கள் ஆறு பேர் ஆறு குழந்தைகளை எடுத்து வளர்தார்களாம், அதனால் முருகனுக்கு ஆறு முகங்களாம். என்ன? ஆறு குழந்தைகளையும் ஒட்டி ஆறு முகமுள்ள ஒரு குழந்தையாய் ஏடுத்தார்களா? கோர வடிவம் கொண்ட கந்தனுக்கல்லவோ ஆறுமுகம்.

சுவாரசியமான கந்தனின் மந்த்ரத்தை பார்போம் :
உம் கர கர குரு குரு மம கார்யம் பஞ்ச பஞ்ச ஸர்வவிக்னாம்தகதக ஸர்வ வஜ்ரவிநாயகம் மூர்தடகஜீவிதான்தகர மஹாவிக்ர்ரிதரூபினே பச பச ஸர்வதுஷ்டாம் மஹாகணபதிஜீவிதான்தகர பந்த பந்த ஸர்வக்ரஹாம் ஷண்முக ஷத்பூஜ ஷட்சாரன ருத்ரமாணய விஷ்ணுமாணய ப்ரம்மாத்யம் தேவனாணய ........... ஸ்வாஹா

பொருள் :
உம் செய்பவன் செய்பவன் | செய் செய் எனக்கு காரியம் | தகர் தகர் அனைத்து தடைகளையும் | எரி எரி அனைத்து உடைக்கமுடியாத இடையூறுகளையும் | மூர்தடகனை கொன்றவனே | அசாதாரண தோற்றத்தை கொண்டவனே | வேக வை வேக வை அனைத்து துஷ்டத்தையும் | கணபதியைக் கொன்றவனே | கட்டு கட்டு கிரகங்களை | ஆறு முகத்தானே ஆறு கரத்தானே ஆறு கால்தானே  |ருத்திரனை கொண்டு வா விஷ்ணுவை கொண்டு வா பிரம்மன் தொடங்கி தேவர்களைக் கொண்டு வா ........... ஸ்வாஹா
இந்த மந்த்ரத்தில் சொல்லபடுகிறது கணபதியை கந்தன் கொன்று விட்டதாக. இதை சும்மா அறிந்து கொள்வதற்காக சொல்லியிருக்கிறேன்.

• வெள்ளைப்போளம் - புதர்ச் செடிகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை வாசனை பிசின்.
• குமார ஸாதனயை பார்க இங்கே தட்டவும்.
• மஞ்ஜுஸ்ரீ ஸாதனயை பார்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

3 கருத்துகள்:

  1. ஐயா, சிவன் பார்வதிக்கு பிள்ளைகள் உள்ளார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவன் ஒரு முழுமுதற் கடவுள். பிரபஞ்ச கடவுள். அவனோ அல்லது அவனுடைய சக்தியோ பெற்றோர்களால் பெற்று எடுக்கப்படவில்லை. முருகன், பிள்ளையார், மாடன் சிவனின் பிள்ளைகள் என்பது எவனோ ஒருத்தனால் கட்டப்பட்ட கட்டுக் கதை. உண்மையில் சிவனுக்கு பிள்ளைகளில்லை.

      நீக்கு