ஸமக்ரி என்றால் என்ன?
ஹோமத்தில் போடும் வாசனையுடைய பல மூலிகைகளின் கூட்டு, கலவை ஸமக்ரி என்று அழைக்கப்படும். உதாரணத்துக்கு 108 மூலிகை கலவை, 64 மூலிகை கலவை, 36 மூலிகை கலவை, 8 மூலிகையை கொண்ட கலவை அஷ்டகந்தம் என்று அழைக்கப்படும், நவகிரக கலவைகள். இப்படிப்பட்ட பல கலவைகளுண்டு. ஸாதனயில் சொல்லப்பட்டதின்படி கலவையை தேர்வு செய்து உபயோகிக்கவும்.
ஆஹுதி :
ஒவ்வொரு தடவையும் மந்த்ரத்திலுள்ள "ஸ்வாஹா" என்ற சொல்லை சொல்லும் போது ஒரு கரண்டி நெய்யை அக்னிக்குள் ஊற்றி, ஒரு பிடி ஸமக்ரி அக்னிக்குள் போட வேண்டும். இதுவே ஒரு ஆஹுதி. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய வேண்டியிருந்தால் 800 ஆஹுதிகள் வரும். ஆஹுதியா ஸமக்ரி மட்டுமல்ல பூக்கள், பழங்கள், தயிர், தானியங்களையும் போடலாம். ஸாதனயில் குறிப்பிடப்பட்டிருந்தால், இறைச்சியையும் முந்திரியபழமளவில் வெட்டி ஆஹூதியாக போடலாம்.
• ஹோமம் செய்யும் பொது. பெருவிரல், நடுவிரல்களால் மட்டுமே கரண்டியை பிடித்து நெய் ஊற்ற வேண்டும். வலது கைவிரல்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
• பெருவிரல், நடுவிரல், மோதிர விரல்களால் எடுத்தே ஸமக்ரி போட வேண்டும். வலதுகைவிரல்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
• உச்சரிப்பு : ஸமக்(g)ரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக