மூலிகை சாபநிவர்த்தி செய்வது எப்படி?
மாந்த்ரீகம், அஞ்சனம் செய்வதற்கு எடுக்கப்படும் மூலிகைகள் சரியான விதிபடி சரியான மந்த்ரம் சொல்லி சேகரித்து பெற்றுக் கொண்டால் மட்டுமே பலன்தரும். விதிமுறைப்படி எடுக்கா விட்டால் மூலிகை சும்மா ஒரு மரத்துண்டுக்கு சமன். ஸித்தி கிடைக்காது. இந்த முழுமுறையும் க்ரோதபைரவரால் சொல்லப்பட்டது.
மூலிகைகள் பலன் தராது :
எறும்புபுற்று, கிணறு, தெருஓரம், மரத்துக்குகீழ், கோயில், அல்லது மயானம் இப்படிப்பட்ட இடங்களில் வளரும் மூலிகைகள் முறைப்படி எடுத்தாலும் பலன் தராது.
மூலிகைகள் குறைபாடுகளுடன் :
தண்ணீர் காரணமாக சிதைவுற்ற, தீயாலெரிந்த, பருவகாலம் மாறி வளர்ந்த அல்லது புழுகடித்த மூலிகைகளை உபயோகிக்ககூடாது. அது மட்டுமல்ல தேவைக்கு ஏற்ற அளவுமட்டுமே மூலிகைகளை எடுக்க வேண்டும். குறைவாகவோ கூடுதலாகவோ எடுக்கக்கூடாது.
வழக்கதில் பின்பற்ற வேண்டியவை :
காலையில் படுக்கையை விட்டு எழுந்த ஸாதகர் குளித்து, தன் உடம்பை பூதசுத்தி செய்து, சிவனையும் தன்னுடைய தெய்வங்களையும் வணங்கிய பின்னர் மட்டுமே மூலிகை பறிக்கசெல்ல வேண்டும்.
மூலிகை எடுக்கும் முறை :
மூலிகைக்கு அருகில் சென்று மூலிகையை பார்த்த வண்ணம் தூபதீபம் காட்டியபடி இந்த மந்த்ரத்தை சொல் வேண்டும்.
ஓம் வேதாளாச்ச பிசாசாச்ச ராக்ஷஸாச்ச ஸரீஸ்ர்ரீபஃ அபஸர்பந்து தோ ஸர்வே வ்ர்ரிக்ஷாஸ்மச்சவாஞயா
பின்னர் வணங்கி விட்டு இந்த மந்த்ரத்தை சொல்ல வேண்டும்.
ஓம் நமமஸ்தே ம்ர்ரிதஸம்பூதே பலவீர்யவிவர்தினீ பலமாயுச்ச மே தேஹி பாபான்மே த்ராஹி தூரதஃ
இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஸாதகர் வணங்கி மரியாதை செலுத்தி தூபதீபம் காட்ட வேண்டும்.
அதன் பின்னர் கீழுள்ள இந்த மந்த்ரத்தை சொல்ல வேண்டும்.
யேன த்வாம் கந்தே ப்ரஹ்ம யேன த்வாம் கந்தே ப்ர்ரிகு யேன இந்த்ரோ"தே வருணோ யேன த்வாமுபசக்ரமே த்வாம் தேனாஹம் கனிஷ்யாமி மந்த்ரபூதேன பாணினா மா தே பாதே மானிபாதி மா தே தேஜோ ந்யதாபவேத் அத்ரைவ திஷ்ட கல்யாணி மாம கார்யகரீ பவ.
ஸாதகர் வேரை தோண்டி எடுக்க வேண்டும்.
அதன் பின் வேரை வெட்டும் பொழுது சொல்ல வேண்டிய மந்த்ரம்.
ஓம் ஹ்ரீம் க்ஷரோம் ஸ்வாஹா
உச்சரிப்பும் பொருளும் :
• வேதாளாச்śசca - வேதாளம்.
• பிசாsaசாcaச்śசca - பிசாசு.
• ராக்ஷஸாச்śசca - ராக்ஷஸ.
• ஸsaரீஸ்sர்ரீபஃ - பாம்புகள்.
• அபஸsர்பந்து - பின்வாங்கி.
• ஸsர்வே வ்ர்ரிṛக்ஷkṣa அதdaஸ் மச்cசchiவ ஆஞயா - முழு மரத்தின் சமூலத்திற்கும் கட்டளை.
• நமமஸ்தே - வணக்கம்.
• ம்ர்ரிṛத ஸம்பூbhūதே - மரண பிறவி, அமிர்தத்திலிருந்து பிறந்த.
• ப baல வீர்ய விவர்திdhiனீ - பலம் வீரியம் அதிகப்படுத்தினீ.
• பbaல மாயுச்śசca மே தேdeஹி - பலம் ஆயுசு எனக்கு தா.
• பாபான்மே த்ராஹி தூdūரதஃ - பாவத்தை முடி உதவு இதுவரை இருந்த.
• யேன த்வாம் கkhaந்தே ப்ரஹ்ம - ஏனெனில் நீ வெட்டி எடுப்பவர் பிரம்மன்.
• யேன த்வாம் கkhaந்தே ப்bhர்ரிṛகுgu - ஏனெனில் நீ வெட்டி எடுப்பவர் ப்ர்ரிகு.
• யேன இந்த்ரோ"தேthe - ஏனெனில் இந்திரன்.
• வருணோ யேன த்வாமுப சcaக்ரமே த்வாம் - வருணன் ஏனெனில்
• தேனாஹம் கkhaனிஷ்ṣயாமி - தோண்டி.
• மந்த்ரபூதேன பாணினா - இந்த மந்த்ர எழுதப்பட்ட.
• மா தே பாதே மானிபாதி - அளவு.
• மா தே தேஜோ - தேஜஸ்.
• ந்யதாthā பbhaவேத் - அது கடைசியாக இருக்கட்டும்.
• அத்ரைவ திஷ்ṣடṭha - இந்த இடத்திலிருந்து
• கல்யாணி மாம கார்யகரீ பbhaவ - எனக்கு மங்களகாரியம் செய்.
• மூலிகைக்கு பலிகொடுக்க குறிப்பிட்டிருந்தால் பலியும் கொடுக்கலாம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக