சாந்தி கர்மம் என்றால் ஏன்ன?
இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியால் நோய், விஷம், கோபம், பயம், உளவியல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல். பில்லி, சூனியம், கெட்டசக்திகள், பிறர் மாந்த்ரீகங்களை விரட்டுதல். உலக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல். சாந்தி செய்தல், சாந்தப்படுத்தல். மேலும் இவ் மந்த்ரங்கள் எதுவித வெகுமதியையோ அல்லது ஒரு பலனையோ எதிர் பார்காமல் செய்யப்படுவதுண்டு. சாந்தி கர்மம் 36 கர்மாக்களில் ஒரு கர்மம்.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - ஹேமந்த காலம் (கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை).
திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி).
மந்த்ரத்தில் பெண் கடவுள் இருந்தால் கிழமை - சந்திர நாட்களான : திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
மந்த்ரத்தில் ஆண் கடவுள் இருந்தால் கிழமை - ஸூரிய நாட்களான : செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் சரியான நேர காலத்தில் செய்தால் மட்டுமே ஸித்தி கிடைக்கும்.
• இந்த ஸித்தியானது ஹோமம் செய்து முடிந்தவுடன் உடனே கிடைக்கும்.
• சாந்தி கர்ம மந்திரங்களை பற்றி வேறு பதிவில் விபரமாக பார்போம்.
• இதுவரைக்கும் ஒருவருக்கும் தெரியாது இருந்த ரஹஸ்யத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக