யோகினீகள் ஓர் அறிமுகம்
பல யோகினீகளிருக்கிறார்கள். யோகினீ பெண், யோகின் ஆண். இவர்கள் யோகின்குலத்தைச் சேர்ந்தவர்கள். சில யோகினீகளின் பெயர்கள் டாகினீ, சாகினீ, கண்டரோஹா. பொதுவாக யோகினீகள் யாவரும் போகம் கொள்ள அபாரஆசை கொண்டவர்கள். இவர்களை ஸாதகர் நினைத்தால் நன்றியுள்ள அடிமைகளாக வைத்திருக்கலாம்.
சில டாகினீகளின் பெயர்கள் சும்பிகா, ரூபிகா, லாமா பராவ்ர்ரித்தா, அனிவர்திகா, ஐஹிகீதேவீ.
இந்த டாகினீகளின் குணங்கள் :
சும்பிகா - பொருள் முத்தம் தருபவள். செய்த பாவங்களை அழிக்கூடியவள்.
ரூபிகா - முதலில் உருவம் தெரியும் பின் மறையும்.
லாமா - இவள் சுவாசிப்பது அதி பயங்கரமாயிருக்கும். இவளை கண்டால் எல்லா மிருகங்களும், சரப முதற்கொண்டு பரமசிவனிடமுள்ள பாம்புகள் கூடபயப்படும்.
பராவ்ர்ரித்தா - இவள் எப்பவும் சிரித்துக் கொண்டேயிருப்பாள்.
அனிவர்திகா - இவளை ஆவாகணம் செய்வதில்லை ஏன்னென்றால் இவள் தொட்டாள், இவள் நடந்துபோன மண் பட்டால், அல்லது ஆடைபட்டாலோ மரணமுண்டாகும்.
ஐஹிகீதேவீ - சும்மா அலம்புவாள், சிரிப்பாள், அழுவள், ஆத்திரத்தைக்காட்டுவாள், எப்பொழுதும் குதுாகலமானவள்.
• பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் யோகினீகளை வழிபடுகிறார்கள்.
• டாகினீகளை வழிபடும் முறைகள் ஸ்தோத்திரங்கள் என்பன தந்த்ர சாஸ்த்திரத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
• இதிலிருந்து என்ன தெரிகிறது தெய்வங்கள் கூட அழும், வெகுளியாகயிருக்கும்.
• இன்னும் சில தெய்வங்களுள்ளன மனிதர்களைப் போல் தங்கத்தின் மேல் ஆசை கொண்டவர்கள்.
• உச்சரிப்பு
டாḍāகினீ.
சாśāகினீ.
கkhaண்டḍaரோஹா.
சுcuம்பிகா.
பராவ்ர்ரிṛத்தா.
சரபbha.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.