ஆவாஹன ஸாதனயை சரியா செய்தும் ஸித்தி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?

ஆவாஹன ஸாதனயை சரியா செய்தும் ஸித்தி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?

ஸாதகர் ஸாதனையை முறைப்படி செய்தும், அதாவது மாதம், திதி, கிழமை., ஸாதனையில் சொன்ன முறைப்படி செய்தும் அழைத்த தெய்வம் வரவில்லை. அதை சரி செய்யும் நுட்பத்தை பற்றிப் பார்பபோம்.

தெய்வம் வராததிற்கு காரணங்களிருக்கலாம்.
1 ஸதகர் படைத்த படையல் சரியில்லாததாகயிருந்திருக்கலாம். அழகும் துப்பரவற்று இருந்திருக்கலாம். அதாவது புது துணிவிரித்து இலைகளிலும் தட்டுகளிலும், மண் புலுதி படாமல் சுத்தமாகயிருக்க படையலை பார்த்துக் கொள்ளாமலிருந்திருக்கலாம். ஸாதனைப் பிரகாரம் செய்யமலிருந் திருக்கலாம்.
2 ஸாதகரிடம் வசியசக்தி குறைவாக இருந்தியிருந்திருக்கலாம். அதாவது கோரோசன பொட்டு, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரீ ஸாதகர்தன் உடம்பில் பூசாமலிருந்திருக்கலாம், அல்லது வசிய தாயத்துகளில்லாமலிருந்திருக்கலாம். ஏற்கனவே ஸாதகர் ஆகர்ஷண மந்த்ரத்தில் ஸித்தி பெற்றுயிருக்காமை. "ஓம் ஆதிபுருஷாய த்ரைலோகம் மே  ஆகர்ஷணம் குரு குரு ஸ்வாஹா" பொருள்: ஆதிபுருஷனே மூன்றுலோகத்தையும் எனக்கு ஆகர்ஷணம் செய் செய் ஸ்வாஹா. ஆகர்ஷணத்தைப்பற்றி மேலும் அறிய இங்கே தட்டவும்.

 
முதலில் சினிமா நடிகையை எடுத்துக் கொள்வோம். சினிமா நடிகையை ஒரு இடத்துக்கு கூப்பிடுவதென்றால் அது இலகுவான காரணயில்லை நல்ல பணம் கேட்பர், அந்த பழச்சாறு, அந்த உணவு, விலையுயர்ந்த மதுபானம், ஒரு குறிப்பிட்ட பூக்கள் தங்குமறையிலிருக் வேண்டுமென்பர், ஊடங்களுக்கு எல்லாம் அறிவித்திருக்க வேண்டுமென்று அடுக்காய் அடுக்கிக் கொண்டே போவர். சிலர் போதைவஸ்துவுக்கு புனைச் சொல் வைத்து அந்த புனை சொல் மூலம் அதையும் கேட்பர். இது மட்டமல்ல கூடப்பிடுபவர் ஒருபெரிய புள்ளியா என்றும் பார்த்துக் கொள்வர். 
 
இதே போல் தான் தெய்வங்களும். தெய்வங்களுக்கு மேற்சொன்ன இரண்டு காரணங்களும் சரியாக இருக்க வேண்டும்.
 
சினிமா நடிகைக்கு மிக பெரிய நடிகர் அல்லது ஐனாதிபதி தொலைபேசி முலம் நீ அங்கு போக வேண்டும் என்று கேட்டுக் கொணடால், சினிமா நடிகை வழமையாக கேட்கிற மாதிரி அது தேவை இது தேவை என்று கேட்காமல், தேவையைத் தளர்த்திக் கொள்வர். இதே நுட்பத்தை தெய்வ ஆவாகண ஸாதனையில் உபயோகிப்போம்.

yadi na āgacchati dvitīye vāre krodharāja sahitaṃ japenniyatama āgacchati / na ceducchuṣyaṃ mṛyate.
இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் பொருள் :
ஒரு வேளை தெய்வம் வராவிட்டால் க்ரோதராஜா ஸகிதம் ஜபம் செய்ய, தெய்வத்தை அடிபணியவைத்து வரவழைக்கலாம் ; வரத பொருட்டு (அந்த தெய்வம்) உலர்ந்து சாவும்.
 
உதாரணத்திற்கு யக்ஷிணீ நடீகா ஸாதனைக்கு வருவோம். ஸாதகர் 800 மந்த்ரம் ஹோமம் செய்தும் நடீகா வரவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடனே தொடர்ந்து ஹோமத்தை இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்ப்பட்டபடி " க்ரோதராஜா ஆஜ்ஞாபயதி " என்ற சொல்லை ஸ்வாஹா என்ற சொல்லுக்கு முன் சேர்த்து 108 மந்த்தரம் ஜபம் செய்ய, கிடுகலங்கி நடீகா விரைவில் ஸாதகர் முன் தோன்றுவாள். இதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.

ஸாதகர் 800 மந்த்ரங்கள் சொல்லி முடித்த போதே வராத தெய்வத்திற்கு சாவு உறுதியாகி விட்டது. ஆனால் இந்த நுட்பத்தை உபயோகிப்பது வராத தெய்வத்திற்கு இரண்டாவது சந்தர்ப்பம் கொடுப்பது போன்றதாகும். இண்டாவது சந்தர்ப்பத்தை உதாசீனம் செய்தால் வராத தெய்வத்திற்கு 100% இறப்பு நிச்சயம். இதை யாராலும் மாற்ற முடியாது. மஹாக்ரோதராஜா வராத தெய்வத்தை, பயங்கரமான ரௌரவ நரகத்திற்கு வீசி எறிவான். ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்க முடியாது.
 
இது யக்ஷிணீ நடீகா ஆவாகண மந்த்ரம் :
ஓம் நடீ மஹாநடீ ஆகச்ச ஆகச்ச திவ்யரூபிணீ ஸ்வாஹா.
" க்ரோதராஜா ஆஜ்ஞாபயதி " சொல்லை ஸ்வாஹா என்ற சொல்லுக்கு முன் சேர்க்கவேண்டும்.
அதன் படி நடீகா ஆவாகண மந்த்ரம் :
ஓம் நடீ மஹாநடீ ஆகச்ச ஆகச்ச திவ்யரூபிணீ க்ரோதராஜா ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா.
 
இன்னுமொரு உதாரணம் எடுத்துக்கொள்வோம் ஊர்வசீ ஸாதன.
ஊர்வசீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் சல சல ஊர்வசீ ஸ்ரீம் கடு கடு ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய ஹூம் பட் ஸ்வாஹா.
ஓம் சல சல ஊர்வசீ ஸ்ரீம் கடு கடு ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய ஹூம் பட் க்ரோதராஜா ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா.
 
• க்ரோதபைரவ மறுபெயர் க்ரோதராஜா.
• " க்ரோதராஜா ஆஜ்ஞாபயதி " பொருள் க்ரோதராஜாவின் கட்டளை.
• இந்த பதிவை வாசித்வர்கள், இந்த பதிவையும் கண்டிப்பாக வசிக்கவும். வாசிக்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக