ககன முனி ஸாதன

ககன முனி ஸாதன

இரவு ஓரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து, நாளோன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி பக்தியோடு ஏழு நாட்கள் ஜபம் செய்து. 8ம் நாள், ஹோம நாளன்று பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ககன முனி ஸாதகர் முன் உடனே தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் " உன் ஆசை என்ன கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர்  " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகி விடுவான். பொன், பொருள், சகல ஆசைகளையும் நிறைவேறற்றி வைப்பான், புதையல்களெல்லாம் கொண்டு வந்து தருவான். வேகுவிரைவில் ஸாதகர் பணக்காரனாவான், நினைத்ததைச் சாதிக்கலாம். ககன முனி வராமல் போனால் ககன முனியின் தலை காய்ந்து வெடித்து சிதறி யமலோகம் போவான் (கொல்லப்படுவான்). அவனால் ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்கமுடியாது.

ககன முனி ஆவாஹன மந்த்ரம் :
ஓம் முனிமுனி ககனே ககனகஞ்ஜே ஆகச்ச ஆகச்ச ஸர்வம் ஆணய லஹு லஹு ஸமயம் அனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா.

மந்த்ரதின் பொருள் :
ஒம், முனிமுனி ககனே ககனகஞ்ஜே, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸர்வம் ஆணய லஹு லஹு - சகலதும் ஆணை உடனே உடனே,  ஸமயம் அனுஸ்மர - சமயஉடன்படிக்கை, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் முனிமுனி கgaகgaனே கgaகgaனகgaஞ்ஜே, ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸsaர்வம் ஆணய லஹு லஹு ஸsaமயம் அனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள்,  மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி  - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• முனி என்றால் முனிவர் என்று பொருள்.
• ககன என்றால் வானம் என்று பொருள்.
• ககனகஞ்ஜே என்றால் வானத்துப்புதையல் என்று பொருள்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக