ஆவாஹன ஸாதனையில் அழைத்த தெய்வம் வராத போது அந்த தெய்வம் கொல்லப்படுவது ஏன்?

ஆவாஹன ஸாதனையில் அழைத்த தெய்வம் வராத போது அந்த தெய்வம் கொல்லப்படுவது ஏன்?

க்ரோதபைரவ (மஹாக்ரோதராஜா) தேவ மரண மந்த்ரத்தை சொல்லுகிறான். இந்த மந்த்ரத்தை க்ரோதபைரவரிடமிருந்து சும்மா அறிந்தால் போதும் தெய்வமரணமுண்டாகும், இந்த மந்த்ரத்தினால், க்ரோதபைரவரிடமிருந்து எற்படும் வஜ்ர ஒளிக் கற்றையால், ப்ரமாத மற்றும் தெய்வங்கள் காய்ந்து போனன. பிரம்மா, ஈஷன், இந்த்ர போன்ற கடவுள்களுக்கு இது அதிபயத்தை ஏற்படுத்தியது. அவர்கள் ருத்ரனையும் சூரியனையும் கூப்பிடுகிறார்கள், ருத்ரனும் சூரியனும் க்ரோதபைரவ பார்த்து  "நாங்கள் சாகாவரம் பெற்ற கடவுள்கள். கொன்று விடு" என்கிறார்கள்.
 
மனித குலத்தின் நன்மைக்காக இறந்தவர்களை உயிர்பிக்கும் மந்த்ரத்தை சொல்லுகிறான் க்ரோதபைரவ. ப்ரமாத மற்றும் தெய்வங்கள் உயிர்த்தெழுகின்றன.
 
உடனே தெய்வங்கள் தலையை குனிந்து, க்ரோதபைரவின் பதங்களை பார்த்தவண்ணம் "ஏவராலும் வெல்ல முடியாத கடவுளே நீ உயர் ரக்ஷகராக இருக்கிறாய், பகவனே இந்ந கலியுகத்தில் ஜம்பூத்வீபத்தில் எங்களை ரக்ஷிப்பாயக, கெட்டசக்திகளிடமிருந்து" என்றார்கள்.
 
அழகான அப்ஸரஸ்கள், நகினீகள், ஆசைப்படகூடிய யக்ஷிணீகள், கவர்ச்சியான பூதினீகள், மயக்கும் கின்னரீகள், அறிவாற்றலுள்ள வித்தியாதாரீகள் மற்றும் தெய்வங்கள் "எங்களை காப்பத்து" என்று வேண்டிக் கொண்டு மஹாக்ரோதராஜாயை பார்த்து பணிவோடு வணங்குகிறார்கள்.
 
"மனித குலத்திலிருந்து யார் என்னுடைய மந்த்ரத்தை ஜபம் செய்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் தேவையான பொன்னுடனும் மற்றும் பொருட்களை பரிசாக கொடுக்க வேண்டும்" என்று மஹாக்ரோதராஜா இவர்கள் எல்லாரையும் பார்த்து கட்டளையிடுகிறான்.
 
 " தேவாதிதேவ உன் மந்த்ரத்தை ஜபம் செய்பவர்களுக்கு மரியாதை, அன்பு, செல்வம், குடும்ப உறவினர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டுயிருந்தால் அவர்களை ஒன்று சேர்த்து வைப்போம், அவர்கள் செய்த சகல கர்மாக்களையும் அழித்தொழிப்போம். "  என்று இந்த தெய்வங்கள் எல்லாம் உறுதிமொழி கொடுக்கிறார்கள்.

"உறுதிமொழியை செய்யத் தவறினால் பகவானே உன் வஜ்ரத்தால் எங்கள் தலையை சுக்குநூறாக்கி நரகத்திற்கு அனுப்பிவிடு" என்று சபதம் எடுக்கிறார்கள் இந்த தெய்வங்கள்.

இந்த உறுதிமொழியை மீறும் பட்சத்தில் தெய்வம் கொல்லப்படுகிறது.
 
இந்தக் காரணத்தாலே ஆவாஹன ஸாதனையில் ஸாதகரின் அழைப்புக்கிணங்கி, வராத தெய்வம் கொல்லப்படுகிறது, இது ஒரு விதி. பிரம்மா விஷ்ணு முதற்கொண்டு எந்த ஒரு தெய்வமும் கொல்லப்படும். இதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. கொல்லப்பட்ட தெய்வங்கள் நரகம் போகும், ஒரு யுகத்திற்கு மறுபிறவி எடுக்கமுடியாது

விதிவிலக்குண்டு மஹாதேவ ஸாதனையில் மஹாதேவ வராவிட்டால் ஸாதகருக்கு இறப்புண்டாகும். மற்றும் பைரவ ஸாதனையின் போது கண்டிப்பாக பைரவ வருவான், வராமல் இருக்கமாட்டான். இதில் கடுகளவு சந்தேகமுமில்லை.
 
அதனால் ஸாதகர் மஹாக்ரோதராஜாவை இஷ்டதெய்வமாய் ஏற்று, மஹாக்ரோதராஜாவின் மந்த்ரத்தை ஒவ்வொரு நாளும் ஜபம் செய்பவர்களுக்கு ஆவாஹன ஸாதனையில் (தெய்வ அழைப்பு) எப்பவும் வெற்றியே கிடைக்கும்.

• க்ரோதபைரவ சொன்ன தேவமரண மந்த்ரத்தையும் தேவ உயிர்பிக்கும் மந்த்ரத்தை வேறு பதிவில் பார்போம்.
• மஹாக்ரோதராஜாவை இஷ்டதெய்வமாய் வணங்கும் முறைகளை வேறுபதிவில் கண்டிப்பாகப் பார்ப்போம்.
• இந்த பதிவை வாசித்வர்கள், இந்த பதிவையும் கண்டிப்பாக வசிக்கவும். வாசிக்க இங்கே தட்டவும்.

ளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக