பத்ரகடா ஸாதன
இரவு இரு ஆறுகள் சந்திக்கும் இடத்திற்கு சென்று அங்கு யந்த்ரம் வரைந்து, அதற்கு உதார பலி கொடுத்து. ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. குங்கிலியதூபம் போட்டபடி நாள் ஒன்றிக்கு 1145 விகிதப்படி ஏழு நாட்கள் மந்த்ரம் சொல்ல வேண்டும். எட்டாம் நாள் விசேஷமான படையலுடன் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய. பத்ரகடா ஸாதகரின் முன் தோன்றுவாள். அவளுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க " என் அன்பே நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் " என்று கேட்பாள் அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அந்தக் கணத்திலிருந்து அவள் ஸாதகருக்கு வசமாகி ஸாதகர் சொல்வதெல்லாம் செய்வாள். அவனுடைய சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பாள். பரிபூர்ண அதிஷ்டத்தை தருவாள். இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வாளானால் அவள் கொல்லப்படுவாள்.
பத்ரகடா ஆவாகண மந்த்ரம் :
ஒம் பத்ரகடா பாக்யவதே ஆகச்ச ஆகச்ச ஸமயம் அனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா
உச்சரிப்பு :
ஒம் பbhaத்dரகghaடா பாbhāக்gயவதே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸsaமயம் அனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
• பத்ரகடா என்றால் அதிஷ்ட குவளையே, அதிஷ்ட குடுவையே என்று பொருள். பாக்யவதே என்றால் அதிஷ்டமே என்று பொருள். இவள் ஒரு யக்ஷிணீ. இவள் இந்தக் குடுவைக்குள் எண்ணற்ற அதிஷ்டங்களை வைத்திருக்கிறாள். ஒவ்வொன்றாக ஸாதகருக்கு கொடுப்பாள். சூது விளையாட்டில் ஸாதகரை மிஞ்சியவன் எவரும் இருக்க முடியாது.
• உதார பலி - என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக