ஜலபாணீ ஸாதன
சுத்தமாக இருக்கும் குளத்தடிக்குச் சென்று யந்த்ரம் வரைந்து, அவளின் அழகிய ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் காய்கறிகளால் செய்யப்பட்ட ரஸம், பழச்சாறு, ஸக்து, பாயாசம் படைத்து இவைகள் யாவற்றையும் ஒரு பகுதி எடுத்து வைத்து ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஜலபாணீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். தாயாகவோ அல்லது மனைவியாகவோ இவளை ஏற்றுக் கொள்ளளாம். " எனக்கு வசமாகிய தாயாக இரு " அல்லது " எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று ஸாதகர் தன் விருப்பத்திற்கினங்க சொல்ல வேண்டும். இவள் ஆயிரம் உலகங்களுக்கு உணவு கொடுப்பவள். ஸாதகருக்கு வாய்க்கு ருசியான வித வித உணவுப் பண்டங்களை நித்தமும் தருவாள். மற்றும் ஸாதகர் நூறு ஆயிரம் தெய்வீக ஆண்டுகள் வாழ்வான். இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வாளானால் அவள் கொல்லப்படுவாள்.
ஜலபாணீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹரீம் ஜலபாணீ பீஜ்வல பீஜ்வல ஆகச்ச ஆகச்ச ஹூம் ப்லூம் தூம் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம்,ஹரீம் ஜலபாணீ பீஜ்வல பீஜ்வல ஹூம் ஆகச்ச - வா, ஆகச்ச - வா, ப்லூம் தூம் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் ஹரீம் ஜலபாணீ பீஜ்வல பீஜ்வல ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ப்bலூம் தூdhūம் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - காய்கறிகளால் செய்யப்பட்ட ரஸம், விதவிதமான பழச்சாறுகள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஜலபாணீ என்றால் தண்ணீரை வைத்திருப்பவள் என்று பொருள். பீஜ்வல என்றால் என்று பொருள். இவள் ஒரு யக்ஷிணீ.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக