சந்த்ரத்ரவ ஸாதன
இரவு ஆலமரத்தடிக்குச் சென்று அங்கு யந்த்ரம் வரைந்து உதார பலி கொடுத்து, சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவன் ரூபம் துணியில் வரைந்து. குங்கிலியதூபம் போட்டபடி நாள் ஒன்றிக்கு 1145 தடவை ஏழுநாட்கள் மந்த்ரம் ஜபம் செய்து. 8வது நாள் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, சந்தரத்ரவ ஸாதகர் முன் தோன்றுவன். அப்பொழுது தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க, அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். திவ்ய ரஸம், ரஸாயனம், சிறிய பல பொருட்கள், ஸித்திகள், மற்றும் அனைத்து வகையான பொருட்களும் தருவான். குறி சொல்லுதலும் ஸித்தியாகும். இது சங்கரனால் சொல்லப்பட்டது. சொல்லப்பட்ட மாதிரியே இருக்குமே தவிர வேறு மாதிரி இருக்காது. இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வானானால் சந்தரத்ரவ கொல்லப்படுவான்.
சந்தரத்ரவ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹரீம் நமஸ் சந்த்ரத்ரவே கர்ணாகர்ணகாரனே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம், நமஸ் - வணக்கம், சந்த்ரத்ரவே கர்ணாகர்ணகாரனே ஆகச்ச - வா, ஆகச்ச - வா, ஸ்வாஹா.
ஓம் ஹ்ரீம், சcaந்த்dரத்dரவே கர்ணாகர்ணகாரனே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, வழமையான படையல்.
ஸமக்ரி -அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞயிறு, செவ்வாய், சனி.
• சந்த்ரத்ரவ என்றால் சந்தர திரவமே என்று பொருள். இவன் ஒரு யக்ஷ.
• கர்ணாகர்ணகாரன் காதுக்குகாது முணுமுணுப்பவன் என்று பொருள்.
• ரஸாயனம் - நீண்டகாலம் வாழ்வதற்கான அமிர்தம்
• வஸ்த்ரம் - ஆடைகள்.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக