சேடிகா ஸாதன
இரவு வீட்டின் தெற்கு வாயிலுக்கு சென்று 8000 மந்த்ரம் மூன்று நாட்கள் குங்கிலிய தூபம் போட்டபடி ஜபம் செய்து, நான்காம் நாள் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய. சேடிகா ஸாதகரின் முன் தோன்றி "என்ன உனக்கு வேண்டும் " என்று கேட்பாள் அதற்கு ஸாதகர் "நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு" என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு வேக்காரீயாகயிருந்து பின்வரும் வேலைகளை செய்வாள்.
ஸர்வ க்ஷேத்ர கர்மன் - வீட்டுப் பணிப் பெண்ணாக, சகல வேலைகளையும் செய்தல். வீட்டில் ஒரு துளி தூசி கூட இருக்காது. வீடு முழுக்க துப்பரவாகவும் ஸுத்தமாகவும் இருக்கும், பொருட்கள் எல்லாம் நேர்த்தியாக இருக்கும்.
ஸர்வ க்ர்ரிஷி கர்மன் कृषि कर्मन् - சகல தோட்ட வேலைகள், விவசாயம் செய்வதற்கு உதவுவாள். இந்த இரு வேலைகளையும் செய்வாள். வஜ்ரம் வைத்திருப்பவனின் கருணையால் தான் அவள் ஸாதகருக்கு அடிமையா வேலை செய்கிறாள்.
ஸாதனயை அசட்டைசெய்தல் அவள் கொல்லப்படுவாள்.
சேடிகா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹௌம் க்ரூம் க்ரூம் க்ரூம் கடு கடு ஓம் சேடிகா ஹூம் ஹூம் ஹூம் ஓம் அஃ
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹௌம் க்ரூம் க்ரூம் க்ரூம் கடு கடு ஓம் சேடிகா ஹூம் ஹூம் ஹூம் ஓம் அஃ
உச்சரிப்பு :
ஓம் ஹௌம் க்ரூம் க்ரூம் க்ரூம் கடு கடு ஓம் சேcheடிகா ஹூம் ஹூம் ஹூம் ஓம் அஃ
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையானபடையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்னமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஹோமம் செய்யும் போது "ஸ்வாஹா "என்ற செல்லை மந்த்ரத்தின் கடைசியில் ஒவ்வொரு தடவையும் சொல்லி ஹோமம் செய்யவும்.
• சேடிகா - அடிமை (பெண் பால்), இவள் ஒரு பூதினீ. பூத குலத்தை சார்ந்தவள்.
• வீட்டின் தெற்கு வாயில் - வீட்டுக்குள்ளேயில்லை, வீட்டு முத்தமிருக்கும் தெற்குவாசல்.
• நீ சேடிகா ஸாதன செய்வதன் மூலம் உனக்கு வீட்டை கூட்டித்துடைக்கவோ அல்லது தோட்டவேலை செய்யவோ உனக்கு ஆட்கள் தேவைபடாது. எல்லா வேலைகளையும் சேடிகா செய்வாள்.
• வஜ்ர வைத்திருப்பவன் - ஸ்ரீ உன்மத்தபைரவனை குறிக்கும் அல்லது ஸ்ரீக்ரோதபைரவனை மறு பெயர் ஸ்ரீ க்ரோதராஜாவை குறிக்கும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக