சந்த்ரயோகின் ஸாதன
இரவு ஆலமரத் தடிக்குச் சென்று அங்கு யந்த்ரம் வரைந்து உதார பலி கொடுத்து, சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவன் ரூபம் துணியில் வரைந்து. குங்கிலியதூபம் போட்டபடி நாள் ஒன்றிக்கு 1145 தடவை ஏழுநாட்கள் மந்த்ரம் ஜபம் செய்து. 8வது நாள் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, சந்த்ரயோகின் ஸாதகர் முன் தோன்றுவன். அப்பொழுது தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். திவ்ய ரஸம், ரஸாயனம், சிறிய பல பொருட்கள், ஸித்திகள், மற்றும் அனைத்து வகையான பொருட்களும் தருவான். குறி சொல்லுதலும் ஸித்தியாகும். இது சங்கரனால் சொல்லப்பட்டது சொல்லப்பட்ட மாதிறியே இருக்குமே தவிர வேறு மாதிறி இருக்காது. இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வானானால் அவன் கொல்லப்படுவான்.
சந்த்ரயோகின் ஆவாகண மந்த்ரம் :
ஓம் நமோ பகவதே ருத்ராய சந்தரயோகினே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஓம் நமோ பகவதே ருத்ராய சந்தரயோகினே, ஆகச்ச - வா, ஆகச்ச - வா, ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் நமோ பbhaகgaவதே ருத்dராய சந்தdaரயோகினே, ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். சரு, பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞயிறு, செவ்வாய், சனி.
• சந்தரயோகின் - சந்தர+யோகின். இவன் ஒரு யோகின் குலத்தை சேர்ந்தவன். இவன் ஒரு யோகின்.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• உதார பலி - என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக